சுய விளம்பரத்திற்காக புகார்: ஆம்பூர் எம்.எல்.ஏ., ஆவேசம்| Dinamalar

சுய விளம்பரத்திற்காக புகார்: ஆம்பூர் எம்.எல்.ஏ., ஆவேசம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆம்பூர்: ''சுய விளம்பரத்திற்காக, என்னை காணவில்லை என்று, சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்,'' என, ஆம்பூர் எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணி கூறினார்.
தினகரன் ஆதரவு, ஆம்பூர் எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணி உட்பட, 19 பேர் கர்நாடகா மாநிலம், குடகு மலையில் உள்ள, ஒரு ரிசார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொகுதிக்கு வராததால், பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குறைகளை தெரிவிக்க முடியாமல், தொகுதி மக்கள் திண்டாடி வருகின்றனர் என, ஆம்பூர் அ.தி.மு.க., செயலாளர் மதியழகன் தலைமையில், அ.தி.மு.க.,வினர், ஆம்பூர் டவுன் போலீசில், நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தனர். அதில், 'ஆம்பூர் எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணி, கடந்த மாதம், 16 முதல் காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, எம்.எல்.ஏ., வை அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால், அவரை தேடி, குடகு மலைக்கு போலீசார் நேற்று சென்றனர்.

இந்நிலையில், ஆம்பூர் எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணி, நிருபர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு கூறியதாவது: கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, என்னுடைய தொகுதியை விட்டு, வெளியில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், சிலர் என்னை கண்டுபிடித்து தரக்கோரி, போலீசில் புகார் கொடுத்துள்ளனர். சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் புகார் அளித்துள்ளனர். பொதுமக்கள், தங்கள் குறைகள் குறித்து, தினமும் என்னை மொபைல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றனர். நானும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, குறைகளுக்கு தீர்வு கண்டு வருகிறேன். என் சார்பில், என் பிரதிநிதிகளும் ஆம்பூரில் நான் செய்ய வேண்டிய பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.