பிரசவத்தின் போது குழந்தை இறந்தது குறித்து விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரசவத்தின் போது குழந்தை இறந்தது குறித்து விசாரணை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், பிரசவத்தின் போது குழந்தை இறந்தது குறித்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். 35. இவரது மனைவி சோனியா, 22. கர்ப்பிணியாக இருந்த இவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வரும், 19ல் பிரசவ தேதி என, டாக்டர்கள் குறிப்பிட்டிருந்தனர். நேற்று முன்தினம், சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு, 8:00 மணிக்கு சேர்த்தனர். அங்கு, டாக்டர் கோகிலா தலைமையில் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால், குழந்தை இறந்தது. டாக்டர்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்தது என்று கூறி, சோனியாவின் உறவினர்கள், நள்ளிரவு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, சிலர் மருத்துவமனையை பூட்டி விட்டனர். இதனால் டாக்டர்கள், நர்சுகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். திருப்பத்தூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததால், மருத்துவமனை கதவு திறக்கப்பட்டது. அதன் பிறகு நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், குழந்தை இறந்தது குறித்து, வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி விசாரித்து வருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை