சம்புவராயர் மன்னர் கால நாணயம் ஜவ்வாது மலையில் கண்டெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சம்புவராயர் மன்னர் கால நாணயம் ஜவ்வாது மலையில் கண்டெடுப்பு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில், சம்புவராயர் மன்னர் கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் எலந்தம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு மையம் சார்பில், தலைவர் பிரகாஷ் தலைமையில், வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர்கள் பொன்னுரங்கம், ராஜேந்திரன், சேகர், ஆகியோர் கூட்டாக, ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் படவேடு பகுதியை, 13ம் நூற்றாண்டில் அதாவது, கி.பி.1249 முதல், 1324 வரை ஆண்ட சம்புவராயர் மன்னர்கள் கால செப்பு நாணயங்கள், இரண்டை கண்டு பிடித்துள்ளனர். அவை, 25 கிராம் எடையில் உள்ளது. நாணயத்தின், ஒரு பக்கம் எருது, கத்தி உருவம், மறுபக்கம் 'சம்பு' என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக, சம்புவராயர் மன்னர் கால நாணயங்கள் சிக்கியுள்ளதாக, அவர்கள் கூறினர். படவேடு, ஜவ்வாதுமலையில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை