ஜவ்வாதுமலை பீமன் நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜவ்வாதுமலை பீமன் நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் உள்ள, பீமன் நீர்வீழ்ச்சியில், நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க, வனத்துறை தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 3,400 அடி உயரத்தில் உள்ளது ஜவ்வாதுமலை. இங்கு, எப்போதும் ரம்மியமான சூழ்நிலை உள்ளதால், ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே இருக்கும். தற்போது பெய்து வரும் மழையால், ஜமுனாமரத்தூரில் பீமன் நீர் வீழ்ச்சியில், நீர் வரத்து அதிகமாக உள்ளது. இந்த அருவியில் குளிக்க, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அருவி நீர் கீழே விழும் இடத்தில் மணல்பாங்கான பகுதி உள்ளதால், குளிப்பவர்கள் மணலில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. தற்போது அருவியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அருவியில் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை