கலெக்டருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி மீது, மிளகாய் பொடி தூவி, தாக்க முயன்ற சம்பவத்தையடுத்து, அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக உள்ளவர் கந்தசாமி. இவர், நேற்று முன்தினம் மாலை, கலெக்டர் அலுவலகத்திலிருந்து, அருகில் உள்ள அவரது பங்களாவுக்கு நடந்து சென்றார். பங்களா வாயிலில் கலெக்டர் நுழைந்தபோது, திடீரென காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், 27, கண்டிகை கிராமத்தை சேர்ந்த சிவா, 28, மணிகண்டன், 30, ஆகியோர், கலெக்டர் மீது மிளகாய் பொடியை தூவி, தாக்க முயற்சித்தனர். கலெக்டர் பங்களாவில், பணியிலிருந்த போலீசார் மூவரையும் பிடித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மூவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். கலெக்டரை தாக்க வந்தார்களா அல்லது வேறு யாரையாவது கொலை செய்ய வந்தார்களா என, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து, கலெக்டருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை