பழனிச்சாமி எண்ணத்துக்கு தனபால் பிரேக்?| Dinamalar

பழனிச்சாமி எண்ணத்துக்கு தனபால் பிரேக்?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
பழனிச்சாமி, எண்ணத்துக்கு, தனபால், பிரேக்?
Share this video :
முரண்டு பிடிக்கும் தனபால்; எடப்பாடி ஷாக்
Powered by Sathya

அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் சென்று மனு கொடுத்தனர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர்.

இதையடுத்து, கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, அவர்கள் அனைவர் மீதும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, அ.தி.மு.க., கொறடா தாமரை ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, 19 எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டார் சபாநாயகர் தனபால். இதற்கிடையில், எம்.எல்.ஏ.,வான கம்பம் ஜக்கையன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து, பழனிச்சாமி பக்கம் வந்து விட்டதால், அவர் மீது நடவடிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

சபாநாயகரின் நோட்டீஸ், சட்ட ரீதியானது அல்ல; நியாயத்தின் பாலும் கிடையாது என கூறி வரும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் தனபாலை சந்தித்து, பதிலளிக்க நேரம் கேட்டுக் கொண்டனர். ஆனால், அதை ஏற்க தனபால் தயாரில்லை.

இதனால், தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நியாயம் கேட்கின்றனர்.
இதற்கிடையில், விரைந்து குறிப்பிட்ட 18 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, அவர்களது பதவியை பறித்து விட வேண்டும்; அதனால் ஏற்படும் காலி இடத்தை வைத்து, சட்டசபை கூட்டத்தைக் கூட்டி, தனது பலத்தை சட்டசபையில், பெரும்பான்மையாக இருப்பதாக காட்டிக் கொள்ள, பழனிச்சாமி தரப்பு தயாராக இருந்தது.

அப்படியொரு நிலையை ஏற்படுத்தி, இருக்கும் எம்.எல்.ஏ.,க்களில் பாதியளவு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவைப் பெற்று, தன்னையே முதல்வராக தொடர வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்று, பழனிச்சாமி விரும்புகிறார்.

இதற்காக, சபாநாயகர் தனபாலை தயார்படுத்தி வைத்திருந்தனர். எதிர்காலத்தில் கோர்ட்டுக்குப் போனால், அது தனக்கு எதிராகப் போகும் என்று நினைக்கிறார் தனபால்.

அதனால், அ.தி.மு.க.,வின் 18 எம்.எல்.ஏ.,க்கள் மீதும் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்ட சபாநாயகர் தனபால், அது சரிபட்டு வராது என, தற்போது முரண்டு பிடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால், அடுத்து என்ன செய்வது என புரியாமல், முதல்வர் பழனிச்சாமி தடுமாறத் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 21 பேர் மீது, உரிமை மீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அவர்களை பதவி நீக்கம் செய்து விடலாம்; அவர்கள் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்து, இன்றைக்கும் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க, மனசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. முக்கியமாக அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் என கூறி, எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்ய மனமில்லை என, சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாகவே கூறி விட்டதால், சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்கும் நிகழ்வை நடத்தும் காலத்தை, பழனிச்சாமி தள்ளிப் போட்டு விட்டார் என, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
18-செப்-201702:57:52 IST Report Abuse
Nagan Srinivasan இதற்க்கு மேல் எதுவும் செய்வதற்கு வழி இல்லை
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
18-செப்-201701:45:16 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இதே எடப்பாடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஓட்டுப்போட்ட பன்னீர் கோஷ்டி mla க்கள் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர் கவர்னரை சந்தித்து எடப்பாடிக்கு ஆதரவை விலக்குவதாக சொன்னதற்காக தினகரன் கோஷ்டி mla க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது ஜனநாயக கேலிக்கூத்தாகிவிடும் ...
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-201715:40:04 IST Report Abuse
Venki இது தனபாலன் சுயரூபம் சசியின் விசுவாசம் மட்டுமல்ல கொஞ்சம் பேராசையும் கூட
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-செப்-201715:26:41 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அதிகார பலம் உள்ளதே என சட்டத்தை தனக்காக வளைக்க நினைப்பதும் சரியல்ல. இதற்கெல்லாம் காரணம் ராஜி நாமா கொடுத்துவிட்டு மீண்டும் பதவி ஆசை கொண்டு கட்சியை சின்னாபின்னமாக்கிய ஓபிஎஸ்சே பொறுப்பு. பேசாம கவர்நர் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவரலாம். ஜெ ஜெ பெயரால் பெற்ற ஓட்டு. எனவே இவர்கள் தேர்தலில் போட்டி இட்டு வரட்டும் அதுவரை கவர்நர் ஆளட்டும் .
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
17-செப்-201715:16:46 IST Report Abuse
Swaminathan Chandramouli ஏன் என்றால் சில நாட்களுக்கு முன் தம்பி தினகரன் ஒரு யோசனை சொன்னார் அதாவது சபாநாயகர் தனபால் அவர்கள் முதலமைச்சர் ஆவதற்கு சம்மதம் தெரிவித்தால் எடப்பாடி அவர்களையும் பன்னீர் செல்வம் அவர்களையும் கழற்றிவிட்டு தனபால் அவர்களுக்கு தனது ஆதரவாளர்கள் ஆதரவு தருவார்கள் . சபாநாயகர் அவர்கள் யோசித்துப் பார்த்துவிட்டு பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதை விட தம்பி தினகரன் உதவியுடன் முதலமைச்சர் ஜாக் பாட் அடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும் . எதிர்பாராத இந்த பரிசால் எடப்பாடி எண்ணத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
17-செப்-201715:00:19 IST Report Abuse
vnatarajan 18 MLA க்களும் கட்சிக்குள் இருந்துகொண்டுதானே சத்தியாகிரகம் செய்கிறார்களே தவிர வேறுகட்சிக்கு மாறவில்லையே. அப்ப எப்படி கட்சித்தாவலென்று சொல்லமுடியும் ஆனால் சட்டசபை கூடி ஓட்டெடுப்பு நடந்தால் கண்டிப்பாக தினகரன் அணி பாதி MLA க்கள் எடப்பாடிக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டு விடுவார்கள். ஆகையால் இந்த ஆட்சி இன்னும் 3 வருடம் 8 மாதங்கள் நீடிக்கும் இடதுதான் நடக்கப்போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
17-செப்-201714:45:48 IST Report Abuse
Selvam Pillai தனபால் சசிகலா விசுவாசி என்பது போக போக தெரியும். சசி உத்திரவு படி தான் ஆடுவார். எவ்வளவு புகழ் பெற்ற அரசுகள் செயல்பட்ட தமிழக சட்டமன்றத்துக்கு தற்போது கெட்ட நேரம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் அசிங்கமாகும் முன்பு கூண்டோடு வெளியேற்றிவிட்டு. தேர்தல் வைப்பதே சிறந்தது. முதல்வர் என்ற புலி வியாபாரியும் சரியில்லை, சபாநாயகர் என்ற தவளை வாயனும் சரியில்லை. போங்கடா நீங்களும் உங்கள் சட்டமன்றமும்.
Rate this:
Share this comment
Cancel
தேவி தாசன் - chennai,இந்தியா
17-செப்-201714:28:17 IST Report Abuse
தேவி தாசன் ஆடு புலி ஆட்டம்... தனபால்க்கு முதல் அமைச்சர் கனவு வந்திடுச்சு
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-செப்-201712:28:14 IST Report Abuse
Malick Raja தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா .. என்றார்கள் அன்று ... தமிழன் என்று சொல்லாதடா ..தலை நிமிர்ந்து நிற்க்ககாதேடா என்று இன்று சொல்லவேண்டிய நிலைக்கு ஆட்சியாளர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்களோ என்று எண்ணவேண்டிய நிலை .. இன்று இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்கள் என்பதை அடுத்து வரும் ஆட்சி நிரூபிக்கலாமோ ?
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
17-செப்-201712:24:39 IST Report Abuse
தங்கை ராஜா தினகரனின் 21 எம் எல் ஏக்கள் வீட்டுக்கு போனால் ஆறே மாதங்களில் ஆர் கே நகரையும் சேர்த்து 22இடங்கள் திமுகவுக்கு கிடைக்கும். அப்போ என்ன செய்வீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.