சசியை சந்திக்க தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் முடிவு| Dinamalar

சசியை சந்திக்க தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் முடிவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
சசிகலா,தினகரன், எம்.எல்.ஏ.,க்கள், தங்க தமிழ்ச்செல்வன்
Share this video :
சசியை சந்திக்க தினகரன் எம்.எல்.ஏ.க்கள் முடிவு
Powered by Sathya

குடகு : தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க் களும், வரும், 20ம் தேதி, சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க உள்ளனர்.

இதுதொடர்பாக, குடகு சோம்வார்பேட்டையில், 'பேடிங்டன்' ரிசார்ட்டில் தங்கியுள்ள, எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன் கூறியதாவது:
முதல்வர் பழனிசாமி, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். தானாக பதவி விலக வேண்டும். ஜனாதிபதியை சந்திக்க, நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். எப்போது வேண்டுமானாலும், அவர் எங்களை அழைக்கலாம்.

ஆட்சி இன்று வரும், நாளை போகும், எங்களுக்கு கட்சியே முக்கியம். ஆட்சி பற்றி கவலையில்லை. ஜெயலலிதாவின் ஆவி பழி வாங்கினால், முதலில் பாதிக்கப்படுவது, பன்னீர் செல்வமும், பழனிசாமியும் தான். எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ., பழனியப்பன் வெளியில் உள்ளார். முன் ஜாமின் கிடைத்ததும் வருவார்.

குடகுக்கு நேற்று வருவதாக இருந்த தினகரன் இன்று வருகிறார். அவருடன் சேர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், வரும், 20 ம் தேதி, சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார். ஆனால், சசிகலாவை சந்திப்பதற்கு, அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும், சிறை நிர்வாகம் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
17-செப்-201720:14:47 IST Report Abuse
Nagarajan D இந்த MLA க்கள் அங்கே தங்கி இருப்பது எவன் வீட்டு காசில். அவனுங்கள அப்பிடியே புடிச்சி அதே ஜெயில்ல போட்டு அவனுங்க முதலாளியான அந்த கொலைகார தினகரணயும் சேர்த்து உள்ளே போடுங்கள். தமிழ் நாடாவது உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
17-செப்-201718:18:04 IST Report Abuse
Sekar KR ஓர் சட்டசபை உறுப்பினர் குற்றவாளியை சந்தித்து ஆலோசனை செய்தால் அவர்கள் பதவியை பறிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai ,இந்தியா
17-செப்-201718:03:39 IST Report Abuse
Raj கொடியது கொடியது. மாற்றுக் கட்சி மிகவும் கொடியது
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
17-செப்-201716:28:41 IST Report Abuse
rajan அது என்னங்கடா ஒண்ணு மட்டும் புரியவே மாட்டேங்குது? இந்த பன்னாடைகள் எதெற்கெடுத்தாலும் ஆயாம்மா ஆவி பழிவாங்கும்னு கதை உடுறானுங்க. எல்லாமே எரியுற கொள்ளி அதுல இந்த கொள்ளி மட்டும் எப்படி நல்ல கொள்ளியாகும். இப்போ சின்னத்தாயி ய பார்க்க போகாதீங்கடா அது ஆவியின் உச்சத்தில் ஏறி உட்க்கார இடமில்லாம முருங்கை மரத்தில தொங்கி கிட்டு இருக்கு. உங்கள எல்லாம் பார்த்து ஆளுக்கு ஒண்ணு போட்டு ரத்தம் கக்க வச்சுடுமடா. அப்புறமேல் மொத்தமா நீங்க ஆவியா அந்த அக்ரகாரத்தில அலையோணுமடா.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-செப்-201715:45:10 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஜெயலலிதா தண்டனையை சசிகலா அனுபவிக்கிறார். கணக்கில்லாமல் வந்த காணிக்கைகளை ஆட்சி அதிகார பலத்தால் பெற்றவர் ஜெயலலீதா. அவர் மறைந்து விட்டார் . அவருடன் அண்டையில் இருந்த வந்த சசிக்கு அவர் (ஜெ ஜெ)உள்ளபோது அவர்முன் ஆட்சியில் பதவி வேண்டாம் என்றார் ஆனால் அவர் மறைந்தபிறகு அண்டை பாத்தியம் என்பார்களே அதுபோல் அவர் ஆசைபடுவதில் தப்பில்லை. அவரை ஒதிக்கினது சரியல்ல பேராசை பெரு நஷ்டம் ஏற்பட போகிறது. காலில் விழுந்து நடித்ததெல்லாம் தற்போது புரிகிறது மக்களுக்கு>>>>>>>>>> ராஜி நாமா செய்தால் அதன் விதி மந்திரிக்கு வேறு மாதிரியோ ???
Rate this:
Share this comment
Cancel
Anand T S V - Frankfart,ஜெர்மனி
17-செப்-201715:15:51 IST Report Abuse
Anand T S V பெரிய குளம் மாபியா வை விடவும் ? எடப்பாடி மாபியா வை விடவும்? திருவாரூர் மாபியா வை விடவும்? திருமதி சசிகலா கெட்டவரா? நேரடியாக யாரையும் சசிகலா பாதிப்படைய செய்யவில்லை. கங்கை அமரன் போன்றவர்களை யார் தூண்டி விட்டது என்பது டாக்டர் இராத கிருஷ்ண நகர் தொகுதியில் இவரை நிறுத்திய போதே மக்களுக்கு புரிந்து விட்டது. பாஜக, எடப்பாடி, பன்னீர் களுக்கு தூக்கி கொடிப்பிடிப்பது அந்த நபர்களின் ஊழல்களை மக்களிடம் இருந்து மறைப்பதே நோக்கம்.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
17-செப்-201714:50:48 IST Report Abuse
s t rajan இந்தச் "சின்ன" சதி அம்மாவின் செல்வனைத் தமிழரின் அவமானச் சின்னமாக அறிவித்து கல்லைக் கட்டிக் கடலுள் போடுங்கய்யா. கூட அந்தத் திருட்டுக்கரனையும் சேர்த்துப் போடுங்கய்யா.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
17-செப்-201714:41:23 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam கண்ணா, களி தின்ன ஆசையா?
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
17-செப்-201714:35:09 IST Report Abuse
S.Ganesan இந்த பேச்சு நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டும் அறிவாளி போன்றிருக்கிறது. ஆட்சி போனால் உங்கள் பலமும் போயிடும். ஒருவரும் உங்களை சீண்டக்கூட மாட்டார்கள் என்று புரியவில்லையா ? பதவி இல்லையென்றால் எல்லோரும் செல்லாக்காசாகி விடுவார்கள் என்ற உண்மை தெரியவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
17-செப்-201714:20:57 IST Report Abuse
vnatarajan பேடிங்டன் ரடிசார்ட்டைவிட ஜெயிலு ரொம்ப சவுகரியமாயிருக்கும்னு நினைக்கிறேன் பேசாம ஜெயிலிலேயே பெர்மனண்டா தங்கிட்டா சின்னம்மாவை பார்க்க அனாவசியமாக அலையவேண்டாமில்லே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.