எதிர்ப்பை மீறி கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை: பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எதிர்ப்பை மீறி கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை: பிரதமர் மோடி

Updated : செப் 17, 2017 | Added : செப் 17, 2017 | கருத்துகள் (57)
Advertisement

ஆமதாபாத்: குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


பயன்:

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். .இதையொட்டி குஜராத்திற்கு வந்த அவர், தனது தாயார் ஹிராபாயை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து, நர்மதை ஆற்றின் குறுக்கே ரூ.16,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, அணையில் பூ தூவி பூஜைசெய்தார். இந்த அணையின் மூலம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்கள் பயன்பெறும்.


சர்தார் சரோவர் அணை: மோடி திறந்து வைத்தார்

பெரிய அணை:


சர்தார் சரோவர் அணை கடந்த 1961-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமராக நேரு அணை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு காரணங்களால் திட்டம் தாமதமானதை 56 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிறைவடைந்தன. இந்த அணை உலகின் 2வது மிகப்பெரிய அணையாகும்.


தேர்தல் வியூகம்:

குஜராத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரஉள்ளதையொட்டி பா.ஜ. வெற்றி வியூகம் வகுத்து வருகிறது. இதையொட்டி குஜராத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் கடந்த சில தினங்களுக்கு ஜப்பான் நிதியுதவியுடன் புல்லட் ரயில் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மெகா திட்டமான நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார்.


சதியை முறியடித்து:

பின்னர் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். புது இந்தியாவை உருவாக்க எந்தவொரு வாய்ப்பையும் தவற விட மாட்டேன். சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் இருந்திருந்தால், இந்த அணை முன்னதாகவே கட்டப்பட்டிருக்கும்.
சர்தார் சரோவர் அணைக்கு எழுந்த எதிர்ப்பை போல், வேறு எந்த அணைக்கும் கிளம்பியது இல்லை. சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக நிதி தர உலக வங்கி மறுத்துவிட்டது. நாம், சொந்த செலவில் அணையை கட்டி முடித்துள்ளோம். இந்த அணையிலிருந்து தண்ணீர் எடுத்து எல்லையில் உள்ள பிஎஸ்எப் வீரர்களுக்கு வழங்குவோம். இந்த அணைக்கு எதிராக பலர் அரசியல் செய்தனர். ஆனால், நர்மதை அணைக்கு எதிராக சதியை முறியடித்து அணையை கட்டி முடித்துள்ளோம். நான் எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பியது இல்லை. இன்று விஸ்வகர்ம ஜெயந்தி. மக்களுடன் இணைந்து இந்த விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanthakumar.V - chennai,இந்தியா
17-செப்-201721:59:08 IST Report Abuse
Nanthakumar.V காமராஜர் கட்டுனாருன்னு சொல்விங்க ...
Rate this:
Share this comment
Cancel
Nanthakumar.V - chennai,இந்தியா
17-செப்-201721:58:11 IST Report Abuse
Nanthakumar.V கரிகாலனுக்கு அப்புறம் பென்னி குயிக்.....அப்புறமா யாரும் அணை கட்டல தமிழ்நாட்டுல ???????????????/
Rate this:
Share this comment
Cancel
Nanthakumar.V - chennai,இந்தியா
17-செப்-201721:55:48 IST Report Abuse
Nanthakumar.V ஹாய் மலரின் மகள்...கோதாவரில நெறய தடவை காசு ஏம்மா போட்ட ?????/....
Rate this:
Share this comment
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-செப்-201712:59:20 IST Report Abuse
மலரின் மகள்அப்பத்தான் நமக்கு நிறைய பணம் அருவி போல கொட்டும். பாலாற்றில் சிறிய வயதில் போட்டிருக்கிறேன். உலகளந்த பெருமாள் கோவில் குளத்தில் கூட....
Rate this:
Share this comment
Cancel
Nanthakumar.V - chennai,இந்தியா
17-செப்-201719:45:42 IST Report Abuse
Nanthakumar.V ஹலோ நடராஜன் ....நேருஜி போட்ட விதையா??????......முளைக்க இவ்ளோ நாள் ஆச்சி ?????????? 56 வருஷம் விதை உள்ள இருக்குமா ?????? இது என்ன டைனோசர் விதையை லூசு ????????
Rate this:
Share this comment
Cancel
Nanthakumar.V - chennai,இந்தியா
17-செப்-201719:42:06 IST Report Abuse
Nanthakumar.V ஹலோ அணைக்கட்டுக்கும்....செக் டேமுக்கும் வித்தியாசம் தெரியாம கருத்து போடாத ஸ்ரீ ......
Rate this:
Share this comment
Dubuk U - Chennai,இந்தியா
18-செப்-201707:33:39 IST Report Abuse
Dubuk Uஅணையினை கட்டுவதற்கும் உயரத்தை கூட்டுவதற்கும் வேறுபாடு உள்ளது ...இது ஒன்றும் புதிதாக கட்டப்படவில்லை....
Rate this:
Share this comment
Cancel
Nanthakumar.V - chennai,இந்தியா
17-செப்-201719:40:04 IST Report Abuse
Nanthakumar.V ஸ்ரீ சார் ...அதெல்லாம் செக் டாம் ஹா இருக்கும் ...அதை போய்....தலைவர் அணை கட்டுனாருன்னு சொல்றிங்களே உங்களுக்கே அடுக்குமா ????????
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-செப்-201717:55:56 IST Report Abuse
மலரின் மகள் நதியில் வெறும் வெள்ளை பூவை மட்டும் தூவுகிறாரே. காசு போடா மாட்டாரா? நாங்கள் நதியில் காசு போடுவோம். கோதாவரி நதியில் கூட நிறைய முறை போட்டிருக்கிறேன்.
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
17-செப்-201718:59:36 IST Report Abuse
அம்பி ஐயர்ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு அவருக்குத் தெரியும்.......
Rate this:
Share this comment
Cancel
Nathan - Bengaluru,இந்தியா
17-செப்-201717:39:33 IST Report Abuse
Nathan How long will it take to connect all the Indian rivers like this?
Rate this:
Share this comment
Cancel
sree - klang,மலேஷியா
17-செப்-201717:35:28 IST Report Abuse
sree காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் அதிக அணைகளை கட்டியவர் என்ற பெருமையை பெற்றவர் கலைஞர் கருணாநிதி. அதை பற்றிய விபரம் பின்வருகிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள அணைகள் – 115 சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை – 25 காங்கிரஸ் ஆட்சியில்(19 வருடங்கள்) கட்டப்பட்டவை – 25 திமுக ஆட்சியில் (21 வருடங்கள்) கட்டப்பட்ட அணைகள் – 36 1) உப்பாறு(ஈரோடு) அணை 2) சிற்றாறு அணை 3) மணிமுக்தனாதி அணை 4) சோலையாறு அணை 5) மேல் ஆழியாறு அணை 6) கீழ் கொடையாறு அணை 7) சிற்றாறு மிமி அணை 8) மேல் கொடையாறு அணை 9) கடான அணை 10) பரப்பலாறு அணை 11) பொன்னணியாறு அணை 12) ராமநதி அணை 13) சின்னாறு அணை 14) கருப்பாநதி அணை 15) ஏறவங்கலாறு அணை 16) குண்டேரிப்பள்ளம் அணை 17) ஹைவேய்ஸ் அணை 18) மணலாறு அணை 19) பாலாறு பொருந்தலாறு அணை 20) வரதமநதி அணை 21) வரட்டுப்பள்ளம் அணை 22) வட்டமலைக்கரை ஓடை அணை 23) வெண்ணிறாறு அணை 24) அனைக்குட்டம் அணை 25) குதிரையாறு அணை 26) நொய்யல் அதுபாளையம் அணை 27) நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை 28) ராஜதோப்புகனாறு அணை 29) பொய்கையாறு அணை 30) மொர்தனா அணை 31) சோத்துப்பாறை அணை 32) அடைவினைநர்கோவில் அணை 33) நங்காஞ்சியாறு அணை 34) செண்பகத்தோப்பு அணை 35) இருக்கன்குடி அணை 36) மாம்பழத்துறையாறு அணை.
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
17-செப்-201722:29:08 IST Report Abuse
Shriramஅல்வா தெகட்டுது ஸ்ரீ...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
17-செப்-201717:12:38 IST Report Abuse
Ramesh Kumar 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் என்ன செய்தார்கள்..என்று மோடிஜி இந்த அணை திறப்பு விழாவின் போது கேள்வி எழுப்பியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்....நான் பல முறை குறிப்பிட்டிருப்பதை போல நமக்கு பண்டித நேருவை போன்ற தொலை நோக்கு சிந்தனையுடைய பிரதமர் தான் தேவை.......
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
17-செப்-201719:25:49 IST Report Abuse
kundalakesiதொலை நோக்கா, இந்தியாவுக்கு தொல்லை தரும் நோக்கா. இந்தியாவை பிரித்து சனாதன தர்மத்தை திட்டமிட்டு கீழ் தள்ளி, தேவையற்ற வந்தேறிகளை மட்டும் புகழ சிறு வயது முதல் பாடத்தில் சேர்த்து, ( வியாதிகளை வெட்கமின்றி தேடி வாங்கி) ஹிந்து கோவில் சொத்துக்களை மட்டும் செக்குலத்தனம் என்று ஆள சட்டமியற்றி , இன்று வரை கஸ்மீரை ப்ரச்னயாகி. பலரை ரகசியத்தில் தீர்த்துக் கட்டி, ச்சை, இந்தியாவின் சாபம் ....
Rate this:
Share this comment
Ramesh Kumar - coimbatore,இந்தியா
17-செப்-201720:30:45 IST Report Abuse
Ramesh Kumarஉங்க மோடி அடிக்கல் நாட்டியுள்ள புல்லட் ரயில் திட்டத்தை ஒருவேளை ராகுல் பிரதமராகி திறந்து வைத்தால் எப்படி கருத்து சொல்வீர்கள் நண்பரே....?...
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
18-செப்-201704:21:33 IST Report Abuse
yaaroரமேஷ் ...அந்த ப்ரிச்சனையே வராது ..சரி அதெல்லாம் விடு. ஏன் இதனை நாள் ஆச்சு ? யார் இந்த மேதா பட்கர் ? அவரை சமாளித்து இதனை நாளா கட்ட முடியாம வேடிக்கை பார்த்ததுதான் காங்கிரஸ் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை