ராசியான ராஷிகா| Dinamalar

ராசியான ராஷிகா

Added : செப் 17, 2017
Advertisement
ராசியான ராஷிகா

சித்தன்ன வாசல் ஓவியம் ஒன்று பெண்ணாகி வந்ததே... வங்கக் கடலில் மையம் கொண்ட புயல் இன்று அலையாகி நின்றதே... இமைகள் இரண்டும் குடை ராட்டினம், தேகம் எங்கும் மின்னும் பிளாட்டினம்... என்று ரசிகர்கள் கொண்டாடும் ராசியான ஹீரோயின் ராஷிகா தாரணி மனம் திறந்த மந்திர நிமிடங்கள்...
* சினிமாவுக்குள் எப்படி நுழைந்தீர்கள்நான் ஒரு 'இன்டீரியர் டிசைனர்', 'டிவி' சீரியலில் தான் முதலில் நடித்தேன். அதற்கு பின் 'பகடி ஆட்டம்' படத்தில் ஹீரோயினாகி விட்டேன்.
*அப்போ இன்டீரியர் டிசைனிங்...சினிமாவில் இடைவெளி இல்லாமல் ரொம்ப 'பிசியா' நடிப்பதால் எனக்குள் இருக்கும் டிசைனருக்கு கொஞ்ச நாள் இடைவெளி கொடுத்திருக்கேன்.
* நடிக்கும் படம்...இரண்டாவதாக 'பட்டதாரி' படத்தில் நடித்தேன், இப்போ இயக்குனர் பஞ்ச் பரத்தின் 'வெற்றிப்பாதை' படத்தில் நடிக்கிறேன்.
* சினிமா பயணம்...ஆரம்பத்தில் சீரியலில் சின்ன கேரக்டரில் நடிக்கும் போது என்னை யாருக்கும் தெரியவில்லை, அதுவே சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும்போது நிறைய பேர் என்னை அடையாளம் தெரிஞ்சுகிட்டு பாராட்டுறாங்க.
* இதயம் விரும்பும் இயக்குனர் ?யோசிக்கவே வேண்டாம் சமுத்திரக்கனி தான்... அவரோட படம் யதார்த்தமா இருக்கும். 'தொண்டன்' படம் கூட அப்படித் தான் இருந்தது, நிறைய கருத்துக்களை சொல்லி இருந்தாரு.
* மறுபடி 'டிவி' பக்கம்...மக்களுக்கு ஒரு நடிகையா என் முகத்தை காட்டிகிட்டே இருக்கணும். அதுக்கு 'டிவி' தான் சரி. அதனால அடிக்கடி 'ரியாலிட்டி ஷோ' பக்கம் வந்து போவேன்.
* ரியல் கேரக்டர் ?யார் என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டேன், அம்மா சொல் பேச்சு மட்டும் தான் கேட்பேன், எனக்கு நண்பர்கள் கூட இல்லை.
* ஏன் இல்லை ?என்னை பார்த்தாலே தலைக்கனமா இருக்குற பொண்ணுன்னு தோணும். இதனாலயே என் கூட யாரும் பேசுறது, பழகுறது இல்லை. பார்க்க தான் நான் கண்டிப்பா இருப்பேன், பழகினா பாசக்காரி தான்.
* சமூக வெறுப்பு...மக்களுக்கு பிடிக்காத, கஷ்டம் தரக்கூடிய சட்டங்களை கொண்டு வரும் போதெல்லாம் வெறுப்பா இருக்கும்.
* நடிப்பில் கிளாமர் ?சேலை கட்டும் போது யதார்த்தமா இடுப்பு தெரிஞ்சா ஓகே., ஆனால், இடுப்பு தெரிய வேண்டும் என்றே சேலை கட்டச் சொல்றது தப்பு. என்னை பொறுத்தவரை கிளாமரா நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது.
* சினிமா பிரச்னை...ஒவ்வொருவர் வாழ்விலும் பிரச்னை இருக்கு. நாம நடிக்க வந்தா நடிக்குற வேலையை மட்டும் தான் பார்க்கணும், தேவை இல்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. இந்த விஷயத்தில் நான் ரொம்ப சரியா இருப்பேன்.ragee.ragee@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X