ஜெயலலிதாவும் சிறையில் இருந்திருப்பார்: தினகரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதாவும் சிறையில் இருந்திருப்பார்: தினகரன்

Added : செப் 17, 2017 | கருத்துகள் (23)
Advertisement
தினகரன், முதல்வர் பழனிசாமி,கூவத்தூர், ஜெயலலிதா, கூவத்தூர், சசிகலா,

சென்னை: சென்னை அடையாறில் நிருபர்களுக்கு தினகரன் அளித்த பேட்டி: முதல்வர் உட்பட அனைவரும் பிபி எகிறுவது போல் ஆவேசமாக பேசுகின்றனர். காமராஜர், அண்ணாதுரை, ஜெயலலிதா கருணாநிதி முதல்வராக இருந்த பதவியில் சசிகலாவால் அளித்த. முதல்வர் பதவிக்கு வந்த பிறகு யோசித்து பேசலாம். 3ம் தர மேடை பேச்சாளர்கள் போல் பேசுகின்றனர். மாமியார், மாமனார் வீட்டுக்கு அனுப்பவோம் என மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அழகல்ல. அதனை பார்த்ததால் வேதனைபடுகிறேன். ஜெயக்குமார் திருடன் எனக்கூறுகிறார் . சீனிவாசன், இந்த குடும்பம் தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக கூறினார். சசிகலா முதல்வராக வேண்டும் என்றவர் திண்டுக்கல் சீனிவாசன். மாவட்ட செயலர்களுகு்கு கணக்கு பிள்ளையாக இருந்தவர் வெல்லமண்டி நடராஜன் ஜெயலலிதா மரணத்திற்கு சசி, தினகரன் தான் காரணம் என்ன கூறுபவர்களுக்கு மானமுள்ளதா?
மருத்துவமனையில் இருந்து பன்னீரை முதல்வராக சசிகலா நியமித்தார் அப்போது எடப்பாடி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் முதல்வராக பன்னீர் சரியில்லை எனக்கூறினர். 25 வருடங்களாக சென்னையில் தான்உள்ளேன். சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க சென்ற போது, பயமாக உள்ளது. சேகர் ரெட்டி வழக்கில் நானும், எனது மகனும் கைதாகலாம் என்ற பயம் உள்ளது என முதல்வர் கூறினார். இது குறித்து சசிகலாவிடம் சொன்ன போது, வழக்கு இல்லாத நபரை முதல்வராக்கியிருக்கலாம் என சசிகலா கூறினார்.
இவர்கள் தனியாக சென்று ஜெயலலிதாவிடம் என்ன கூறினார்கள் என தெரியவில்லை. இதனால் ஜெயலலிதா என்னை கட்சியிலிருந்து நீக்கியிருக்கலாம். என் சசிகலாவை பொது செயலராக்கினீர்கள். முதல்வராக்கினீர்கள். முதல்வர் உட்பட 122 பேர் கூவத்தூரில் ஏன் தங்கியிருந்தனர். அது தவறு இல்லையென்றால், எம்எல்ஏக்கள் குடகில் தங்கியுள்ளது தவறு இல்லை. உங்கள் ஆட்சியை அகற்ற 19 பேரை தற்போது நான் பிடித்து வைத்துள்ளது தவறுஇல்லை.

ஜெயலலிதாவும் சிறையில் இருந்திருப்பார்: தினகரன்


என்னைக்கண்டு அஞ்ச வேண்டாம்

உங்களை விட வயதில் சிறியவன். உங்களுக்க பதில் சொல்லவே அசிங்கமாக உள்ளது.உங்களிடம் பேரம் பேசவில்லை. கட்சியை காப்பாற்றுவேன். நீங்கள் தலைமை கழகத்தில் சசிகலா அளித்த பதவிகளை விலகிவிட்டு, மீண்டும் எம்எல்ஏக்களை ஆதரவுடன் பதவியேற்று கொள்ளுங்கள். தேர்தல் ஆணையத்தில் எனக்கு ஆதரவாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது ஏன்? ஆர்கே நகரில் வேட்பாளராக அறிவித்தது ஏன்? பிரசாரம் செய்தது ஏன்.என்னை கண்டு முதல்வர், அமைச்சர்கள் ஏன் பயப்படுகிறீர்கள். தயவு செய்து என்னைக்கண்டு அஞ்ச வேண்டாம். பழனிசாமி நினைத்தால் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும். முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தற்போது அவரும் சிறையில் இருந்திருப்பார். முதல்வர் சுயநினைவுடன் உள்ளாரா என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
13-நவ-201714:57:46 IST Report Abuse
S.Ganesan தினகரனின் பேச்சு எல்லை மீறி போவது நன்றாக தெரிகிறது. எல்லோரையும் வாய்க்கு வந்த படி பேசுவது தவறு. மேலும் தவறு செய்து விட்டு தாங்கள் ஜெயிலுக்கு போய் வந்ததை எதோ தியாகம் செய்துவிட்டு ஜெயிலுக்கு போய் வந்த மாதிரி பேசுவதும் , நாங்கள் எல்லா ஜெயிலையும் பார்த்தவர்கள் என்று கூறுவது , ரௌடிகளும் , கூலிப்படையினரும் பேசுவது போல்தான் உள்ளது. அதற்கும் பின்னால் நின்று கொண்டு ஆர்ப்பரிக்கும் ஒரு கூட்டம் வேறு. சீக்கிரமே இதெற்கெல்லாம் ஒரு முடிவு வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
18-செப்-201700:30:43 IST Report Abuse
Tamilselvan ஜெயிக்கு கெட்ட பெயர் வந்ததே இந்த மன்னார்குடி மாபியாயா கும்பலினால் தான். பிச்சைக்காரர்களாக sutra வந்தவர்கள் இன்று பல கோடிகளுக்கு அதிபதிகள் . இந்த கும்பலில் ஒருவர் கூட வெளியில் இருக்க கூடாது இவர்கள் இந்திய ஜனநாயகத்திற்கு,அரசியலுக்கு, அரசிற்கு பிடித்த புற்று நோய். அதை கிள்ளி ஏறிய வேண்டியது மக்களின் இன்றைய இளைஞர்களின் கடமை.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
17-செப்-201719:22:24 IST Report Abuse
அம்பி ஐயர் துப்புக்கெட்ட மத்திய அரசாங்கம்.... இன்னமும் ஆட்சியைக் கலைக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள்.... இப்படியெல்லாம் செய்தால் பாஜகவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கு (அப்படி ஒண்ணு இருக்கா என்ன...???)ம் காணாமல் போயிடும்....
Rate this:
Share this comment
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
17-செப்-201719:11:36 IST Report Abuse
Ganesh Shetty தயவு செய்து இவர் வடிவேலு இல்லாத குறையை தீர்த்து வைக்கின்றார்,பாருங்கள் நண்பர்களே இன்று ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ஜெயலலிதாவையே நீக்குவார் அப்படி பட்ட மா மனிதர்....
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-செப்-201717:59:16 IST Report Abuse
Sanny ஜெயா உயிருடன் எங்கு இருந்திருந்தாலும், தினகரன் என்ற நீ இந்தியாவுக்கே வந்திருக்க மாட்டாய். பூனை இல்லா வீட்டில் எலிகள் பட்டாளத்துக்கு கொண்டாட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
17-செப்-201717:13:41 IST Report Abuse
Tamilselvan இவர் ஒரு 420 . இந்த மன்னார்குடி மாபியா கும்பல் நிரந்தமாக இருக்க வேண்டியது சிறையில் தான் . இவர்கள் ஆட்டம் முடிந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Balan Palaniappan - Chennai,இந்தியா
17-செப்-201716:53:47 IST Report Abuse
Balan Palaniappan உலகிலேயே நீதி மன்றத்தால் குற்றவாளியென்று ஊர்ஜிதப்படுத்தியவர்களை முன்னிறுத்தி மக்களிடம் ஆதரவலா கோரும் கேவலம் தமிழ் நாட்டில் மட்டும் தான் நடக்கும். தண்டிக்கப்பட்டவர்கள் தான் அம்மாவும் சின்னம்மாவும். தமிழ் மக்கள் மழுங்கிப்போய்விட்டார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஒரு எடுத்துக்காட்டு வேண்டியதில்லை.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
17-செப்-201716:52:37 IST Report Abuse
rajan அதை தானையா எல்லோரும் எதிர்பார்த்தோம் அதுக்குள்ளே பொறுமை இல்லாம ... தர்மம் எப்படி பட்ட இரு பக்க கூர் வாள் என்பது.
Rate this:
Share this comment
Cancel
V.Sadagopan - Hosur,இந்தியா
17-செப்-201716:48:58 IST Report Abuse
V.Sadagopan ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார். ஆணால் தினகரனும் SIN அம்மாவும் இந்த அளவுக்கு வெறியாட்டம் போட முடியாது. அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தினகரன் துணை பொது செயலாளர் ஆனது எப்படி சாத்தியம்.
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201716:44:43 IST Report Abuse
RAMASUBRAMANIANSNAINARAGARAM Why Chief Minister Shri Palanisamy and Dy. Chief Minister seeing all the idiot talks given by TTV, now they have power. Immediately they have to take severe action with the pending case and sent Mamiyar home, do it fast, if he is outside not good for tamilnadu development.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை