கல்லூரியில் தூய்மை பணி மாணவியர் நிம்மதி பெருமூச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் தூய்மை பணி மாணவியர் நிம்மதி பெருமூச்சு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லூரியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., பெண்கள் கல்லூரி வளாகத்தில், இலைகள், சருகுகள், குப்பை தேங்கி வளாகம் அசுத்தமாக இருந்தது. இதனால், விஷ ஜந்துகளின் நடமாட்டம் இருந்தது. மதிய உணவு மற்றும் பாடவேளையின் போது மரத்தில் இருந்து பாம்பு, மாணவியர் மீது விழுந்ததால், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே, தெற்கு ரோட்டரி சங்கத்தினரின் ஒத்துழைப்போடு, பொக்லைன் மூலம், கல்லூரி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. தெற்கு ரோட்டரி சங்க தலைவர் சிவசுப்ரமணியம், செயலர் முத்துரத்தினம் மற்றும் நிர்வாகிகள், இப்பணியை துவக்கி வைத்தனர். கல்லூரி முன்புறம் வளர்ந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. இதனால், மாணவியர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை