"எந்த கலையும் அழிந்து விடக்கூடாது'| Dinamalar

"எந்த கலையும் அழிந்து விடக்கூடாது'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, ஒற்றைக்கண் பாலம் எதிரில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சுவரில், கட்சி விளம்பரத்தை எழுதி கொண்டிருந்தார் அந்த முதியவர். கோடுகளாக வார்த்தைகளை எழுதி, பின் எழுத்துகளுக்கு வண்ணம்பூசி, தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்திய அவரிடம் பேசினோம்.
என் பேரு கண்ணுசாமி; வயசு 61 ஆகிறது. திருப்பூர் மெஷின் வீதியில குடியிருக்கேன். எஸ்.எஸ்.எல்.சி., வரைக்கும் படிச்சிருக்கேன். ஸ்கூல்ல படிக்கும் போதே, ஓவியம் வரையறதுல ரொம்ப ஆர்வம். அப்படியே இந்த தொழிலுக்கு, வந்துட்டேன்.
முப்பது வருஷமா, இதில் இருக்கேன்; திருப்பூரு மட்டுமில்லாமல், தமிழ்நாடு பூரா, எல்லா ஊருக்கும் போய் எழுதி இருக்கேன். எலக்ஷன் டைம்ல, நிறைய பேர் கட்சி விளம்பரம் எழுத கூப்புடுவாங்க, மத்த சமயத்துல எல்லா நாளிலே யும் வேலை இருக்காது.
ஆரம்பத்துல, ரீப்பர் கட்டையில, தகர போர்டுல, பெயிண்டுல எழுதி வைப்போம். அரசியல்
கட்சிகள், கடைகள் எல்லாருமே, அந்த மாதிரிதான் வைப்பாங்க, நாலைஞ்சு வருஷம் ஆனாலும், போர்டு ஜம்முன்னு இருக்கும், மழை, வெயிலுக்கு எல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல அழிஞ்சு போயிடாது.
பிளக்ஸ் பேனர் வந்ததுக்கு அப்புறம், அந்த மாதிரி யாரும் தகர போர்டு வைக்கறதும் இல்லே, எங்களை மாதிரியான தொழிலாளர்களுக்கு வேலையும் இல்லாம போயிடுச்சு. நாங்கள் எல்லாம், கைத்திறமையால தான் அந்த மாதிரி எழுதறோம். வரையறோம்.
எப்படியும், வாரத்துல அஞ்சு நாள் வேலை இருக்குது. சுவரோரத்துல சாக்கடை கால்வாய் இருந்தால், நின்னு எழுதறதுக்கு ரொம்ப சிரமமாக இருக்கும். பெரிய கால்வாயா இருந்துட்டா, ரெண்டு காலையும் ரெண்டு பக்கமும் வெச்சுகிட்டு எழுதறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். சுவர் நனையற அளவுக்கு மழை பெய்யும் போது எழுத முடியாது. அனுமதியில்லாத சுவர்ல, எதுவும் எழுதறது இல்லே. எழுதும்போது, யாராவது வேண்டாமுன்னு சொன்னாலும் எழுதாம அப்படியே விட்டுட்டு போயிடுவோம்.
தொடர்ந்து வேலை செஞ்சுகிட்டே இருக்கறதால, வயசான பாதிப்பு எதுவும் தெரியலை.
எல்லாமே கம்ப்யூட்டர் மயமா மாறிப்போச்சு; இந்த பெயின்டிங், கலர்ஸ்ல எழுதற கலை கூட முன்னே மாதிரி இல்லே; எந்த கலையும் அழிந்து விடக்கூடாது, என்றபடி, சுவர் பக்கமாய் திரும்பி நின்று, தனது எழுத்து பணியை தொடர்கிறார் கண்ணுசாமி.
ரோட்டில் செல்லும் போது, "தலைவர் அழைக்கிறார், மாநில மாநாடு' என்றெல்லாம், எழுதபட்டிருப்பதை பார்த்து செல்வோம். தமிழை மறந்து கொண்டிருக்கும் நிலையில், சாமானியர்களான, சுவர் விளம்பர எழுத்தாளர்களும் பாராட்டுக்குரியவர்களே.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.