ஆர்பிட்ரேஷனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்பிட்ரேஷனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலுக்கு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பின்னலாடை தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்து ஆர்பிட்ரேஷன் கவுன்சிலை இயக்குகின்றன. கவுன்சிலின் பொதுக்குழு கூட்டம், "சைமா' அரங்கில் நடந்தது.
போட்டியில்லாததால், புதிய தலைவராக ஏற்றுமதியாளர் சங்கத்தை சேர்ந்த கருணாநிதி, செயலாளராக "சைமா' சங்கத்தை சேர்ந்த ராமசாமி, பொருளாளராக, "சிம்கா' சங்கத்தை சேர்ந்த தங்கமுத்து; துணை தலைவராக, ரோட்டரி பிரின்டிங் சங்கத்தை சேர்ந்த பழனிசாமி, "நிட்மா' சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியம் பதவியேற்றனர். இரண்டு இணை செயலாளர் பதவிக்கு, சாய ஆலை உரிமையாளர் சங்கம், டெக்பா சங்க உறுப்பினர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் வழக்கு பதிவு செய்வதற்கான கட்டண தொகை, 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை