சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பல்லடம்: சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற, சுற்றுச்சூழல் ஊர்வலம், பல்லடத்தில் நடந்தது.
ஆண்டு தோறும் செப்., 16ம் தேதி, சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்லடம் ஸ்கேட் கல்லூரி சார்பில், மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம், பல்லடத்தில் நடந்தது.
அண்ணாநகரில் துவங்கி, திருச்சி ரோடு வழியாக பனப்பாளையம் வரை ஊர்வலம் சென்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதலை தடுத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நோட்டீஸ்களை, பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.
முன்னதாக, மாணவ, மாணவியருக்கான, ஓசோன் மண்டலம் குறித்த கட்டுரை போட்டி நடந்தது.
இதில், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை