கோவில் நகைகள் பாதுகாப்பு பூசாரிகள் சங்கம் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நகைகள் பாதுகாப்பு பூசாரிகள் சங்கம் கோரிக்கை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பல்லடம்: அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் நகைகளை பாதுகாக்க, மாற்றுத்துறை அதிகாரிகளை தணிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என, கோவில் பூசாரிகள் நல சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, கோவில் பூசாரிகள் நல சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பிரபலமான கோவில்களில், பக்தர்களால் வழங்கப்படும் காணிக்கைகளுக்கு, முறையாக ரசீது வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கோவில் நகைகள் அனைத்தும், அறநிலையத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் முறைகேடுகள் நடக்கின்றன. அக்காலத்தில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக, இரட்டை பூட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனால் இருவேறு துறை அதிகாரிகளின் வசம் சாவிகள் இருந்ததால், முறைகேடுகள் தடுக்கப்பட்டன.
எனவே, கோவில் நகைகளை பாதுகாக்க, ஒரே துறை யை சேர்ந்த அதிகாரிகள் மட்டுமன்றி, மாற்றுத்துறை யை சேர்ந்த அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, இவற்றை சரிபார்க்க ஏதுவாக, பொது தணிக்கையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை சார்ந்த, நகை சரிபார்ப்பு அதிகாரிகளை தணிக்கையில் ஈடுபடுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக உள்ள கோவில் நகைகளை, வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை