பென்சனர் கூட்டமைப்பு வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பென்சனர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: "புதிய பென்சன் திட்டத்தால் யாருக்கும் பயன் கிடைக்காததால், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,' என, பென்சனர் கூட்டமை ப்பு வலியுறுத்தியுள்ளது.
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பின் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:
பங்களிப்பு பென்சன் திட்டம், புதிய பென்சன் திட்டமாக மாற்றப்பட்டது, தமிழகத்தில், ஏப்., 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பாதகமானது. இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி குழு, காலக்கெடுவுக்கு பிறகும் அறிக்கை தரவில்லை.
பழைய திட்டத்தில், பென்சன் பலன்கள் வழங்க, ஊதியத்தில் எந்த விதமான பிடித்தமும் இல்லை; புதிய திட்டத்தில், மாத ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதால், 90 சதவீத ஊதியம் மட்டுமே கிடைக்கிறது. கடந்த, 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களிடம், பிடித்தம் செய்த தொகை, எங்குள்ளது என்பது அரசுக்கு மட்டுமே வெளிச்சம்.
பணியின் போது, இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் என யாருக்கும், புதிய திட்டத்தில் பலன்கள் வழங்கப்படவில்லை. எனவே, பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை