கவுரிக்கு மிரட்டல் அழைப்பு: சிறப்பு புலனாய்வு குழு மறுப்பு?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கவுரிக்கு மிரட்டல் அழைப்பு: சிறப்பு புலனாய்வு குழு மறுப்பு?

Added : செப் 17, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கவுரி லங்கேஷ்,சிறப்பு புலனாய்வு குழு, மிரட்டல், gauri lankesh, sit, threaten, suspicious

பெங்களூரு: கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேசுக்கு சந்தேகப்படும்படியான அழைப்புகள் ஏதும் வரவில்லை என சிறப்பு புலனாய்வு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விசாரணை:

பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 5ம் தேதி இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பத்திரிகையாளர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


அழைப்பு:

இந்த குழுவை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாக வெளியான செய்தி: கடந்த ஒரு வருடமாக கவுரிக்கு சந்தேகப்படும்படியான அழைப்புகள் ஏதும் வரவில்லை. மொபைல் போன் மற்றும் லேண்ட்லைன் வழியாக அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்கு வந்த 650 அழைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், சந்தேகப்படும்படியான அழைப்புகள் ஏதும் வரவில்லை. கவுரியின் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்களுக்கு கூட அவருக்கு மொபைல், கடிதம், இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக நியாபகம் ஏதும் இல்லை எனக்கூறியுள்ளனர். கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் வீடருகே உலா வந்ததாக கவுரி தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால், இதனை அவரும், குடும்ப உறுப்பினர்களும் எளிதாக எடுத்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கவுரிக்கு மிரட்டல் வரவில்லை: சிறப்புக்குழு

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
17-செப்-201716:12:37 IST Report Abuse
குறையொன்றுமில்லை அப்பு சார் என்ன சார் உங்க கருத்து என்ன ? துப்பு இல்லாம எந்த வழக்கும் முன்னே போகாது அதே சமயம் தடயம் விடாத குற்றம் என்று எதுவுமே இல்லை.
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
17-செப்-201721:00:04 IST Report Abuse
Appuஇது போன்ற நூதன கொலைகளை செய்துவிட்டு தப்பும் குறிப்பிட்ட அமைப்பினருக்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் அரசியல்பலமும் பின்புலமாக பாதுகாப்புக்கு இருக்கும்போது சிறப்பு புலனாய்வு குழு எந்த மூலைக்கு?கொலை செய்தவர்கள் தப்பிவிடுவார்கள்..மத்தியில் உள்ள ஆட்சி மாறி இந்த கொலை வழக்கு மீண்டும் எதிர்காலத்தில் சூடு பிடித்தால் மீண்டும் புத்துயிர் பெறலாம்......
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
17-செப்-201715:59:19 IST Report Abuse
Mal Sahayam IAS solureengala... Athuku apparam avar vayae therakala...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-செப்-201715:37:20 IST Report Abuse
மலரின் மகள் நன்கு விசாரித்தால் மிகப் பெரிய ஊழல்கள் வெளிவரலாம். சீனா போரா வழக்கம் போல மர்மம் நிறைந்ததாக இருக்கலாமோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை