அமைச்சர்களுக்கு தங்கதமிழ்செல்வன் சாபம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு தங்கதமிழ்செல்வன் சாபம்

Added : செப் 17, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் கூர்க் விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இன்று தலைகாவிரிக்கு சுற்றுலா சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன் கூறியதாவது: ஜெயலலிதா மறைவிற்கு பின் துக்கத்தில் இருந்த சசிகலாவிடம் தற்போது ஆட்சி செய்பவர்கள் தான் சென்று காலில் விழுந்து நீங்கள் தான் பொதுச் செயலராக வர வேண்டும் என கூறி முடிவு எடுத்தார்கள், பொதுச் செயலாளர் சசிகலா என தற்காலிக முடிவு எடுத்ததற்கு நாங்களும் ஒத்து கொண்டோம். சசிகலா எதிர்பார்க்காமல் இவர்களாக சென்று முதல்வராக வேண்டும் என கேட்டதால் இவர்களது பேச்சுக்கு கட்டுபட்டு ஏற்றுகொண்டார். வழக்கு காரணமாக முதல்வர் ஆக முடியாததால் அடுத்து பழனிச்சாமியை சசிகலா அடையாளம் காட்டினார்.
இதனால் பன்னீர்செல்வம் பதவி போனதால் கட்சியை உடைத்து திமுகவிற்கு வாக்களித்தார். அதே போல் சபாநாயகர் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் எதிராக வாக்களித்தார், இரண்டு முறை எதிராக செயல்பட்ட அவரை மன்னித்து காலில் விழுந்து பதவி கொடுக்கிறார்கள்.

நல்லா வாழ மாட்டீங்க: தங்கதமிழ்ச்செல்வன் சாபம்

நாளை மறுநாள்(செப்.,19) நடக்கும் கூட்டம் மிகப்பெரிய எழுச்சி கூட்டமாக அமையும், என் பிள்ளை மேல் சத்தியமாக சசிகலாவுக்கு நான் அடிமை அவரை விட்டால் கட்சிக்கு வேறு யாரும் கிடையாது என கூறினார் திண்டுக்கல் சீனிவாசன். நிச்சயமாக இவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காது.
தினகரன் நாளை மாலை அல்லது, நாளை மறு நாள் இங்கு வருவார், நாங்கள் 19ம் தேதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது, திங்கள் அன்று சசிக்லாவை சந்திக்க அனுமதி கோரி உள்ளோம் அனுமதி கிடைத்தால் சந்திப்போம் என கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
17-செப்-201717:19:49 IST Report Abuse
Raj தொகுதி பக்கம் போ சாரே. அதுக்கு அப்புறம் உங்க சித்தியை பார்க்கலாம். அவர்களை சிறை துறை பார்த்து கொள்ளும்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
17-செப்-201717:17:15 IST Report Abuse
rajan அண்ணே குடகு மலை பக்கம் நல்ல மழை பெய்து வருவதால் மழையில நனைஞ்சுடாதீங்க. தர்மமும் ஆயாம்மா ஆவியும் உங்களை எல்லாம் மல்லாக்க கிடாதீடுமடா.
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201717:11:16 IST Report Abuse
உஷாதேவன் ஜெயலலிதா மறைவுக்கு பின் மற்றவர்கள் வற்புறுத்தியதால் பொது செயலாளர் பதவியை சசிகலா ஏற்றுக்கொண்டார்( விருப்பமில்லாமல்) இப்போதும் அதே மற்றவர்கள் வேண்டாம் என்று சொல்லும்போது மறுக்காமல் ஏற்க வேண்டியது தானே.ஆட்சியும்கட்சியும் கை விட்டு போகிறது என்று சிறை சீறுவது ஏன்? உண்மையிலேயே அ தி மு க மீது அக்கறைகொண்டிருக்கலாமே ஜெயலலிதா வின் சினேகிதி. இல்லையா த.தமிழ் செல்வா அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-செப்-201717:06:02 IST Report Abuse
Kuppuswamykesavan திரு. பெரியாரிடம் இருந்து திரு. அண்ணா பிரிந்தார். திரு. அண்ணா மறைவால் திரு. கருணாநிதி வந்தார். திரு. கருணாநிதியிடம் இருந்து திரு. எம்ஜியார் பிரிக்கப்பட்டார். திரு. எம்ஜியாரின் மறைவால் திரு. ஜானகி உருவானார். திரு. ஜானகி விட்டுக்கொடுத்ததால் திரு. ஜெஜெ உயர்ந்தார். திரு. ஜெஜெ-வின் மரணத்தால் திரு. பன்னீர் நியமனமானார். திரு. பன்னீர் இறக்கப்பட்டு திரு. எடப்பாடி உயர்த்தப்பட்டார். திரு. எடப்பாடியை நீக்க பல சூது வாது தான தண்ட (செலவுகள்?) முயற்ச்சிகளாக நிகழ்கிறதுதானே?. ஆனால் திரு. எடப்பாடிக்கு, டெல்லி அய்யனார் சாமியின் காவல் மற்றும் கருணை கிடைப்பதால், இங்குள்ள திரு. எடப்பாடியார்களின் எதிரிகள் தூரத்தில் இருந்தே, சவுண்ட் விட்டு கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக, இந்த பிரபஞ்சத்தில், மாற்றம் என்ற ஒரு நிகழ்வு மட்டுமே மாறாமல் இயங்கி வருகிறது. அதற்கு, நாம் மற்றும் அனைத்து மக்களும் கட்டுப்பட்டவர்களே எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
17-செப்-201716:59:57 IST Report Abuse
Tamilselvan கோழிக்கு மார் அடிக்கும்,பதவிக்காக மன்னார்குடி மாபியா பின்னால் அழைக்கிறார். விரைவில் தாய் கழகம் வருகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை