ரயிலில் பயணிகள் தூங்கும் நேரம் குறைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயிலில் பயணிகள் தூங்கும் நேரம் குறைப்பு

Updated : செப் 17, 2017 | Added : செப் 17, 2017 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரயிலில் பயணிகள் தூங்கும் நேரம் குறைப்பு

புதுடில்லி: முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் செல்லும் பயணிகள் தூங்கும் நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மாற்றியமைக்கப்பட்டது. இதுவரை, இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை தூங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


சுற்றறிக்கை:

இது தொடர்பாக ரயில்வே துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றிக்கையில்,, நோயாளிகள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் இந்த உத்தரவு பொருந்தும் என அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தெளிவு

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், படுக்கை வசதி குறித்து பயணிகளின் கருத்து கேட்கப்பட்டது. இது தொடர்பாக விதிகள் ஏற்கனவே உள்ளது. தற்போது, அதனை தெளிவுபடுத்தவே புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. படுக்கை வசதி கொண்ட இருக்கையை முன்பதிவு செய்தவர்கள் ரயிலில் ஏறியவுடன் தூங்கி விடுகின்றனர். இது சிலருக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. நீண்ட தூரம் செல்லும் படுக்கை வசதி கொண்ட ரயிலில் ஏறிய பயணி ஒருவர் உடனடியாக படுத்து கொண்டால், மற்ற பெர்த்களுக்கு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அப்பர் பெர்த்தை முன்பதிவு செய்தவர்கள், கீழ் பெர்த்தில் எந்த இருக்கையையும் இரவு10 மணி முதல் காலை 6 மணி வரை உரிமை கோர முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - VILLIVAKKAM,இந்தியா
18-செப்-201707:24:39 IST Report Abuse
TAMILAN இவர்கள் ஆயிரம் சட்டம் கொண்டு வந்தாலும் ரயிலில் பயணிக்கு பயணிகள் இடத்தில் ஒரு சிறிய ஒற்றுமை இருந்தால் போதும் எந்தவித பிரச்சினையும் உண்டாக வாய்ப்பே இல்லை.பயணம் சுகமானதாக அமையும். வயதானவர்கள் தான் சீக்கிரம் தூங்க வேண்டும் என்று நினைப்பர். அப்போது அவர்களுக்கு எல்லா சைடு பெர்த் ஒதுக்க வேண்டியது தானே சைடு பெர்த் ஆள் யாருக்கும் எந்தவித பிரச்சினையும் வரப்போவதில்லை. மூன்று பெர்த் உள்ள இடத்தில தான் ஒரு சிறிய பிரச்சினை. அதுவும் பயணிக்கும் பயணிகள் தங்களுக்குள் சிறிய விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தால் பயணம் கண்டிப்பாக சந்தோச பயணமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Vellorepalaniel Chandrakumar - Chennai,இந்தியா
18-செப்-201706:39:30 IST Report Abuse
Vellorepalaniel Chandrakumar டிக்கெட் பரிசோதகர் முன் பதிவு செய்தவர்களை மட்டுமே பரிசோதிக்கிறார் டிக்கெட் எடுக்காதவர்களை கண்டு கொள்வதே இல்லை முன்பதிவு செய்தவர்கள் பாத்ரூம் செல்வதற்குக்கூட முடிவதில்லை இதை தடுப்பதற்கு துப்பு இல்லை
Rate this:
Share this comment
Cancel
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
18-செப்-201700:37:10 IST Report Abuse
Rathinasami Kittapa It's already existing rule. Only time is reduced by one hour. Many half baked are commenting n abusing the present Government, what an intelligents .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை