சர்தார் சரோவர் அணை: 56 ஆண்டு கனவை நனவாக்கிய மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சர்தார் சரோவர் அணை: 56 ஆண்டு கனவை நனவாக்கிய மோடி

Added : செப் 17, 2017 | கருத்துகள் (46)
Advertisement
சர்தார் சரோவர் அணை,SardarSarovarDam, மோடி

உலகின் இரண்டாவது பெரிய, சர்தார் சரோவர் அணையை தனது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன்மூலம் 56 ஆண்டுகால குஜராத் மக்களின் கனவு நனவாகியது.


9 ஆயிரம் கிராமங்களுக்கு

குஜராத்தின் நாவகம் என்ற இடத்தில், நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்ட, 1961ல் அப்போதைய பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார். 1987ல் அணை கட்டுமான பணி துவங்கியது. கால்வாய் மூலம் குஜராத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லவும் பணி துவக்கப்பட்டது. 1999ல் இருந்து இதன் உயரத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இறுதியாக 2014ல் உச்சநீதிமன்றம், 455 அடி உயரம் வரை நீர் தேக்கிக்கொள்ள அனுமதி வழங்கியது. இதையடுத்து நர்மதா கட்டுப்பாட்டு அமைப்பு, ஜூன் 17ல், அணையின் 30 மதகுகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது. பின், உயரத்தை தற்போதைய 397 அடியில் இருந்து 455 அடியாக உயர்த்தும் பணி நடந்தது. இதனால் இனி 12 லட்சம் கனமீட்டருக்குப் பதிலாக, 47 லட்சம் கனமீட்டர் நீர் தேக்கப்படும். மாநிலத்தின் 44 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 9 ஆயிரம் கிராமங்களுக்கு கால்வாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படும்.


சிறப்பம்சங்கள்:

கான்கிரீட்டால் கட்டப்பட்ட, அதிக தண்ணீரை (24 கோடி கன அடி) தேக்கி வைக்கும் உலகின் இரண்டாவது பெரிய அணை. முதலிடத்தில் அமெரிக்காவின் கிரான்ட் கவுல் அணை (28 கோடி கன அடி) உள்ளது. அணையின் மகுகளில் உள்ள ஒவ்வொரு கதவும் 450 டன் எடை கொண்டது. இதை மூடுவதற்கு ஒரு மணி நேரம் தேவைப்படும். குஜராத்தின் ஒரு ஓரத்தில் தென் கிழக்கே ஓடும் இந்த ஆற்று நீரை கால்வாய் மூலம், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளது குஜராத் அரசு. அணையில் இருந்து 458 கி.மீ., வரை பிரதான் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து 38 கிளை கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.


பாசன நிலங்கள்

குஜராத்தில் 15 மாவட்டம், 73 தாலுகா, 3,112 கிராமங்கள் மற்றும் ராஜஸ்தானின் பார்மர், ஜல்லு?ர் மாவட்டங்களில் உள்ள 7.2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


மின் உற்பத்தி

இரண்டு நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு அணை மூலம் 1200 மெகாவாட் மற்றும் கால்வாய் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை மகாராஷ்டிரா 57 சதவீதம், ம.பி., 27 சதவீதம், குஜராத் 16 சதவீதம் என பகிர்ந்து கொள்கின்றன.


குடிநீர் பயன்பாடு

131 சிறிய நகரங்கள் மற்றும் 9,633 கிராமங்களில் உள்ள 2.9 கோடி பேர் குடிநீர் பெறுவர். இது, குஜராத்தின் மொத்த கிராமங்களில் 53 சதவீதம். ராஜஸ்தானில் 1,336 கிராமங்கள், மூன்று சிறிய நகரங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Renga Naayagi - Delhi,இந்தியா
17-செப்-201723:49:24 IST Report Abuse
Renga Naayagi டயனமோவை எப்படி விட்டு வெச்சாங்க ...இப்போ யாருக்கும் உபயோகத்தில் இல்லையே ..
Rate this:
Share this comment
Cancel
Dynamo - Den Haag,நெதர்லாந்து
17-செப்-201722:51:21 IST Report Abuse
Dynamo ஊனமுற்ற குழந்தை குடும்பத்தில் இருந்தால், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக அதை கொல்வதில் தவறில்லை....அதேபோல பத்து லட்சம் பேறுக்காக, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தப்பில்லை...
Rate this:
Share this comment
Cancel
RPS -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201722:23:22 IST Report Abuse
RPS தமிழ்நாட்டில் இருந்து யாரும் கருத்து கூற வேண்டாம் குஜராதில் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வரும் மோடி செய்தது உண்மையா என அவர்கள் முடிவு செய்வார்கள்... அது என்ன தமிழ்நாடா வாட்ஸாப், பேஸ்புக் தகவல்களை உண்மை என நம்ப... பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201721:12:48 IST Report Abuse
saagasamchennai தன் சுயவிளம்பரம் தான் முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-செப்-201721:05:58 IST Report Abuse
Agni Shiva மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த பொது எந்த அளவிற்கு தடைகள் போட முடியுமோ அந்த அளவிற்கு தடைகள் போட்டது மத்திய காங்கிரஸ் அரசு, குறிப்பாக சோனியா. . அப்போது மத்திய நீர் துறை அமைச்சராக காஷ்மீரை சேர்ந்த சோஸ் என்ற மூர்க்க மந்தியாக இருந்தார். அவர் மூலம் காங்கிரஸ் போடாத தடை இல்லை..அடிக்காத கூத்து இல்லை..நிதிகள் நிறுத்தப்பட்டது..ஆனாலும் மாநிலத்தில் வரிகளை உயர்த்தி, மக்களிடம் நன்கொடைகள் கேட்டு, ஹிந்து கோவில்கள், மடாதிபதிகள் நிதி அளித்து என்று படாத பாடு பட்டு இந்த சாதனையை நிகழ்த்திக்காட்டி இருக்கிறார், மோடி அவர்கள். குஜராத் மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தது அவருடைய அழகை கண்டோ அல்லது இலவசங்களையோ, அல்லது வரி குறைப்பினாலோ இல்லை. மாறாக அதிக வரி விதித்தார், லஞ்சம் ஊழல் இல்லாத அரசை தந்தார், விரைவாக அனைத்து பணிகளையும் விரைந்து முடித்தார். அவர் மனிதருள் மாணிக்கம்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-செப்-201720:32:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மரம் வச்சது ஒருத்தன். பழம் தின்னு கொட்டை போடுறான் இன்னொருத்தன்.
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
17-செப்-201720:46:45 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)உங்க வயித்து எரிச்சல் இன்னும் கூடிகிட்டே போகுது என்ன செய்ய ? மோடி நல்ல காரியம் செஞ்சு பேர் வந்துடுச்சுன்னா , போலி மத சார்பின்மை ஆட்டம் கண்டு விடும்னு உங்க பயம் தான். எப்போதுமே அநியாயமா மட்டும் தான் விமரிசனம் செய்வேன் என்று தூற்றியே பழகியவர்களுக்கு எந்த நல்ல விஷயமும் கண்ணுக்கு தெரியாது....
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-செப்-201720:54:19 IST Report Abuse
Kasimani Baskaranஅது மரம் வைத்தவன் தவறு......
Rate this:
Share this comment
Cancel
N. Sridhar Iyer - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
17-செப்-201720:30:19 IST Report Abuse
N. Sridhar Iyer I'm sorry, Mr. Modi is fit to be a Chief Minister for Gujarat ONLY. Not as a Prime Minister of Indian Union. He's neglecting southern states, especially TAMIL NADU. The reason is Kerala - Communist, Karnataka - Congress, AP
Rate this:
Share this comment
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
17-செப்-201720:11:56 IST Report Abuse
மு. செந்தமிழன் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்ட, 1961ல் அப்போதைய பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார். 1987ல் அணை கட்டுமான பணி துவங்கியது. ஆக அடிக்கல் நாட்டி கிட்ட தட்ட 29 ஆண்டுகள் கழித்து ஆணை கட்ட ஆரம்பித்துள்ளனர். பெயரளவுக்கு ஆரம்பித்துவிட்டு அதை கட்டும் எண்ணம் காங்கிரஸ் அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது, 1987ல் இதன் கொள்ளளவு 12 லட்சம் கன மீட்டர். இன்று 47 லட்சம் கன மீட்டர் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம். அதாவது காங்கிரஸ் அரசு கட்டிய அணையை போன்று 4 அணைகள், குஜராத் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது, அணை தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள், கிராமங்கள் மேற்கில் அமைந்துள்ளன ஆக இந்த அணையின் கால்வாய்கள் கிழக்கில் இருந்து மேற்காக பாய வேண்டும் அதற்கு இன்னும் ஆழமாக தோண்ட வேண்டும். 53% கிராமங்கள் பயனடையும் என்றால் இதைவிட ஒரு சாதனை இருக்க முடியுமா? நர்மதா ஆற்றின் மேல்புறம் 450 மெகா வாட் திறனுள்ள சோலார் தகடுகளை பொருத்தி மின்சாரமும் பெற்று நீர் ஆவியாவதையும் தடுத்தனர். நம் ஊரிலும் ஆவியாவதை தடுத்தனர் வேறு வகையில். தமிழகத்தை அதிக நாட்கள் ஆண்ட திராவிட கட்சிகள் நமக்காக கட்டிய அணைகள் எத்தனை?, கால்வாய்கள் எத்தனை? தமிழகத்தில் அணைகட்ட இடம் இல்லையா? இல்லை மனம் இல்லையா? எந்த வகையில் தமிழகம் குஜராத்தை விட குறைவு? தவறு நம்மிடம் தான் உள்ளது. எனக்கும் மிஸ்டர் மோடியை அவரது இந்துத்துவா கொள்கையால் பிடிக்காது இருப்பினும் சரோவர் அணை விவகாரத்தில் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-செப்-201701:10:37 IST Report Abuse
Agni Shivaசெந்தமிழன் அவர்களே..நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே..ஆனால் இத்தனை சாதனைகளையும் அவர் சாதித்தது அதிக வரி விதிப்பின் மூலம். அவர் மட்டும் தமிழக அரசியல்வாதிகளை போல இருந்திருந்தால், மாநிலம் முழுவதும் கள்ளுக்கடைகளையும் சாராயக்கடைகளையும் திறந்து, இலவச அரிசியையும் போட்டு, ஐந்து வருடத்திற்குவோட்டிற்கு ஒரு முறை ஐநூறு ரூபாயும் கொடுத்திருந்திருந்திருப்பார். அவருக்கு திராவிடத்தான் என்று அடையாளத்திற்கு ஒளிந்து கொண்டு அவரை திட்டும் நாதாரிகள் அவருக்காக தேர்தல்பணி செய்திருந்திருப்பார்கள். ஆனால் வருடத்திற்க்கு ஒருமுறை " ஐயோ காவேரி..அய்யயோ தண்ணீர் " என்று அடுத்த ஒரு நூற்றாண்டுகளுக்கு கத்திகொண்டே இருந்திருப்பார்கள். ஆனால் அந்த மனிதர் அவ்வாறு பகட்டு காட்டவில்லை. ஒரு இலவசமும் கொடுக்கவில்லை..ஒரு வரி குறைப்பையும் செய்யவில்லை..குஜராத்திகள் அந்த மனிதரை அறிந்திருந்தார்கள். அவருக்கு துணை நின்றார்கள்..மத்திய கான் கிராஸ் அரசின் எதிர்ப்புகள், தடைகளுக்கும் இடையே தற்போது ஒரு மாநில அரசு முயற்சி செய்து உலகத்திலேயே இரண்டாவது அணையை கட்டி முடித்து தனது மாநில தண்ணீர் தேவையை மட்டும் தீர்த்தது மட்டுமின்றி வேறு இரு மாநிலங்களின் மக்களின் தாக்கத்தையும் தீர்க்க உதவி இருக்கிறது. இந்த மனிதருக்கு தமிழகத்தில் வரவேற்பு இருக்குமா? உங்களால் இதற்கு பதில் சொல்ல முடியுமா? மட்டுமின்றி நீங்கள் சொல்லும் அந்த ஹிந்துத்வா தான் இந்த மாதிரி மாணிக்கங்களை உருவாகும். ஹிந்துத்துவா என்பது அன்புள்ளம்..தொண்டுள்ளம் .இந்த நாட்டின் மீது படர்ந்திருக்கும் பாச பிணைப்பு..மதத்திற்காக நாட்டை காட்டிக்கொடுக்காத அதீதித பாசம் அதை . புரிந்து கொள்ளுங்கள்..ஹிந்துத்தவத்தோடு இருக்கு பழகுங்கள்..நற்பண்புகள் தானாக வரும்.....
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
17-செப்-201720:09:49 IST Report Abuse
ravichandran வாழ்க வளர்க மோடியின் புகழ்
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
17-செப்-201719:46:52 IST Report Abuse
Rajendra Bupathi அர்ப்பணிப்பும் இல்ல? ஒரு கண்றாவியும் இல்லை?பதினோரு வருக்ஷமா இந்த அணை பயன் பாட்டுலதான் இருக்கு? வர வர மோடியின் செயல்பாடு அ தி மு க வை விட படு கேவலமாதான் இருக்கு?
Rate this:
Share this comment
Saravanan - Chennai,இந்தியா
17-செப்-201721:39:13 IST Report Abuse
Saravananதலைப்பும் செய்தியும் படிக்காமலே கருத்தா? டாஸ்மாக் இல்ல பிக் பாஸ் குரூப் ஆக தான் இருக்கும். அவைகள் தான் காலையில் அனிதாவிற்கு கண்களை கசக்கும். மாலை பிக் பாஸ். உங்களோட வோட்டு வாங்க ரெண்டாயிரம் எல்லாம் கொடுப்பது தண்டம். டீ காசு பத்து ரூவா தந்தா போறும்....
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
17-செப்-201723:35:45 IST Report Abuse
Ramesh Lalரமேஷ்,கோவை இமயமலை மற்றும் அதில் காணப்படும் ஐஸ் கட்டிகளை அமைத்தது மோடிஜி தான் என்று பி.ஜெ.பி. காரர்கள்கூத்தாடும் காலம் விரைவில் வரத்தான் போகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை