மாயமான இந்தியர்கள் நிலை: ஈராக் பிரதமர் கைவிரிப்பு| Dinamalar

மாயமான இந்தியர்கள் நிலை: ஈராக் பிரதமர் கைவிரிப்பு

Added : செப் 17, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்தியர்கள், மாயம், ஈராக், பிரதமர்

பாக்தாத்: ஈராக்கில் மாயமான இந்தியர்கள் நிலை குறித்து தெரியாது என அந்நாட்டு பிரதமர் அல் அபாதி கூறியுள்ளார்.


கோரிக்கை:

கடந்த 2014ல் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஈராக்கில் கட்டுமான பணிக்கு வேலைக்கு சென்றனர். ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆதிக்கம் துவங்கிய போது, மொசூல் நகரில் 39 இந்தியர்கள் மாயமானார்கள். அவர்களின் நிலை குறித்த தகவல் ஏதுமில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேசி, கடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 39 இந்தியர்கள் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சிறையில் அடைத்து வைத்திருக்கலாம் என மத்திய அரசு கூறியிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின் ஈராக் ராணுவம் மொசூல் நகரை கைப்பற்றியது.


விசாரணை:

இந்நிலையில், ஈராக் பிரதமர் அல் அபாதி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மாயமான 39 இந்தியர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் தெரியாது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் எந்த தகவலும் தர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


மாயமான இந்தியர்கள் நிலை: ஈராக் பிரதமர் கைவிரிப்பு

அதிர்ச்சி:

ஈராக் பிரதமரின் இந்த கருத்து, மாயமான இந்தியர்களின் குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ
18-செப்-201707:29:18 IST Report Abuse
Orion கோட்டு சூட்டு அணிந்த பாலைவன காட்டு மிராண்டிகள்
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
18-செப்-201701:11:47 IST Report Abuse
raghavan உயிரோடு விடப்பட்ட பங்களாதேஸ் காரன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். இனியும் அவர்களை தேடி என்ன புண்ணியம்.
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
17-செப்-201721:34:39 IST Report Abuse
Appu ஈராக்கிற்கு வேலைக்காக செல்வதை இந்தியர்கள் தவிர்ப்பது புத்திசாலித்தனம்...காணாமல்போனவர்கள் கண்டிப்பாக பத்திரமாக கிடைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது...ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-செப்-201720:18:03 IST Report Abuse
மலரின் மகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நிறைய பிரச்சினைகள். அனைத்தும் சுமுகமாக இருப்பதாக தெரிந்தாலும், பிரச்சினைகள் வரும்போது ஆதரவு இருக்காது. கூலிகளாக செல்வோருக்கு கேட்கவே வேண்டாம். வாழ்வு அஸ்தமனமானதாகத்தான் இருக்கும். மொழி ஒப்பிரச்சினை. உதவி கேட்டு தகவல் கூட தரமுடியாது. எங்கிருந்தார்கள் என்ன செய்தார்கள் என்று கூட சொந்தங்களால் புரிந்து கொள்ளமுடியாத நிலை. மனு கொடுத்தால் பேருக்கு வாங்கி கொண்டு மேலிடத்திற்கு அனுப்பிவிடுவார்கள். வேலை செய்யும் இடத்தில் ஒரு சமூகமாக வாழவோ அல்லது சங்கம் வைத்து கொண்டு ஒருவருக்கொருவர் இணைந்திருக்கவோ பெரும்பாலும் முடிவதில்லை. கடலில் செல்பவனுக்கு கடவுளே துணை என்பது போலத்தான்,.
Rate this:
Share this comment
Cancel
Nanthakumar.V - chennai,இந்தியா
17-செப்-201719:52:15 IST Report Abuse
Nanthakumar.V பொறுப்பற்ற பதில் ....உங்கள் நாட்டின் உள்கட்டமைப்பை சரி செய்ய வந்த எங்கள் ஆட்களுக்கு இதான் உங்கள் பதிலா ? சதாம் ஹுசைனி பரவலா போல ?
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
17-செப்-201723:12:20 IST Report Abuse
Jaya Prakashஉண்மை கசக்கும்.... அவர்கள் பிணை கைதிகள் ஆக்கப்பட்டார்கள்... பேரம் பேசப்பட்டது... படியவில்லை.... அந்த நாடே நாறி போச்சி... அவன் ஊரையே அவன் காப்பாத்த முயற்சி செய்யும் நிலையில் அவன் எங்கே இவர்களை பத்தி யோசிக்கமுடியும்.... முடிவு எல்லாருக்கும் தெரியும்... சொல்ல தேவை இல்லை......
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
18-செப்-201700:32:16 IST Report Abuse
Appuஜெய்பா சரியாக சொன்னீர்கள்......
Rate this:
Share this comment
Raman - kottambatti,இந்தியா
18-செப்-201705:52:42 IST Report Abuse
Ramanடேய் கேன பயலே.. உன்னை யாருடா அங்கே வேலைக்கு போக சொன்னது? எவன் எங்கே கூப்பிட்டாலும் போனா இப்படித்தான்.. முதலில் அறிவை பயன்படுத்து. பிறகு கருத்து சொல்லு .. கேனத்தனமான இங்கே கருத்து சொல்லும் நேரத்தில் அரசாங்கத்திடம் கேள் என்ன கட்டமைப்பு இங்கே உள்ளதுன்னு......
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
17-செப்-201719:18:24 IST Report Abuse
ravichandran இது இப்படி நடக்கும் என்று தெரிந்ததுதானே. மோடி எதிர்ப்பாளர்கள் இதுக்கும் மோடி தான் கரணம் என்று சொல்வார்களோ என்னவோ
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
17-செப்-201719:11:14 IST Report Abuse
chails ahamad மாயமான நம்முடைய சகோதரர்கள் பத்திரமாக திரும்பி வர இறைவனிடம் வேண்டுகிறேன் , பிரச்சனைக்கு உரிய நாடுகளுக்கு வேலை வாய்ப்பை தேடி போகாதிருப்பதே நல்லது என்ற நிலையில் , தங்களது குடும்ப கஷ்ட சூழ்நிலைகளில் வேலைக்கு சென்று இன்று எங்குள்ளார்கள் என்ற தகவலற்று உள்ளது நம் மனதை கனக்கின்றது , அவர்களது குடும்பத்தாரின் சிரம நிலைகளை உணர்ந்து ஆட்சியாளர்கள் தக்க பொருளாதார உதவிகளை செய்திடுவதே மனதாபிமானமாக இருந்திடும் . வாழ்க பாரதம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை