குற்றாலத்தில் வெள்ளச்சீற்றம்: அருவிகள் செம்மண் நிறமானது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குற்றாலத்தில் வெள்ளச்சீற்றம்: அருவிகள் செம்மண் நிறமானது

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குற்றாலத்தில், வெள்ளச்சீற்றம், அருவிகள், செம்மண், நிறமானது

திருநெல்வேலி:குற்றாலத்தில் இன்று மாலையில் பலத்த மழையினால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்துவருகிறது.மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையினால்அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.
இன்று காலை நிலவரப்படி அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் அதிகபட்சமாக 50 மி.மீ.,மழை பெய்தது. பாபநாசத்தில் 43 மி.மீ.,மழை பெய்தது. செங்கோட்டையில் 27 மி.மீ.,மழை பதிவானது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 66.27 அடியானது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 78.60 அடியானது. மற்ற அணைகளுக்கும் கணிசமான தண்ணீர் வரத்து உள்ளது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு:குற்றாலத்தின் மலைப்பகுதியில் பெய்துவரும் மழையினால் அருவிகளில் நேற்று இரவில் இருந்தே வெள்ளப்பெருக்கு உள்ளது. இதனால் மெயின்அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.இன்று மாலையில் ஓரளவு தண்ணீர் குறைந்த நிலையில் மாலை 5 மணிக்கு மீண்டும் பலத்த மழையினால் குற்றாலம் மெயின்அருவியில் செம்மண் நிறத்தில் தண்ணீர் வெள்ளப்பிரவாகமாக கொட்டியது.மாவட்டம் முழுவதும் தற்போது மழை பெய்துவருகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து,தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டதோ என எண்ணும் அளவில் தொடர் மழை பெய்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை