கனமழை :வால்பாறை,பந்தலுார்,கூடலுார் பள்ளிகளுக்கு இன்று(செப்-18)விடுமுறை| Dinamalar

கனமழை :வால்பாறை,பந்தலுார்,கூடலுார் பள்ளிகளுக்கு இன்று(செப்-18)விடுமுறை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
கனமழை,வால்பாறை,பந்தலுார்,கூடலுார்தாலுகாவில் ,பள்ளிகளுக்கு,  விடுமுறை
Share this video :
கோவை, நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை : வால்பாறையில் கன மழை பெய்துவருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செப்.,18 )விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கூடலுார், பந்தலுார் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செப்.,18) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் கனமழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பந்தலூர் அருகே சேரம் பாடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் காயம் அடைந்தார். பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது.


மாற்றுப்பாதையில் வாகனங்கள்


குமுளி அருகே கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிப்பெரியார் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் கட்டப்பனை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
குன்னூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருகின்றன. இதனையடுத்து . குன்னூரில் 34 இடங்கள் அபாயகரமானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேரிடர்குறித்து மக்களுக்குமுன் கூட்டியே தகவல்தெரிவிப்பதற்கு24 இடங்களில் ஒலி பெருக்கி கருவிகள் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-செப்-201708:11:35 IST Report Abuse
Srinivasan Kannaiya மழை மனதுக்கு இனிய விஷயம்... ஆனால் அந்த சந்தோஷத்தை சேர்த்து வைக்க ஏற்பாடுகள் இல்லையே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.