திருச்செந்தூர் கடலில் விமானம் மூலம் தேடுதல் வேட்டை கடலோர கப்பல் தகவல் கருவியை மீட்ட மீனவர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருச்செந்தூர் கடலில் விமானம் மூலம் தேடுதல் வேட்டை கடலோர கப்பல் தகவல் கருவியை மீட்ட மீனவர்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 திருச்செந்தூர் கடலில், விமானம் மூலம், தேடுதல் வேட்டை, கடலோர கப்பல், தகவல் கருவியை,  மீட்ட மீனவர்

தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே கடலில் மீனவர்கள் கண்டெடுத்த ஜி.எஸ்.எஸ்.,கருவி குறித்து கடலோர காவல் படையினர்விசாரணை நடத்துகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடலில் இன்று காலையில் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் டோனியர் விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விமானம் திருச்செந்தூர் அருகே தாழ்வாக பறந்ததால், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மற்றும் திருச்செந்தூர் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூரை அடுத்துள்ள ஆலந்தலையை சேர்ந்த மீனவர் ஆல்பர்ட் என்பவர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடலில் விளக்கொளியுடன் மிதந்ததாக கூறி ஒரு கருவியை எடுத்துவந்தார்.அதனை ஆலந்தலையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தார்.போலீசார் இதுகுறித்து தூத்துக்குடியில் இயங்கும் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
கப்பல் கருவி மீட்பு:ஜி.எஸ்.எஸ்.,எனப்படும் இந்த கருவி கப்பல்களில் பொருத்தப்பட்டிருக்கும். நடுக்கடலில் நிற்கும் கப்பலுக்கும் உள்நாட்டில் செயல்படும் அந்த கப்பல் நிறுவனத்திற்கும் இடையே தகவல் தொடர்பு சாதனமாகும். கப்பலுக்கு கடலில் ஏதாவது பாதிப்போ, சிக்கலோ ஏற்பட்டால் கப்பலின் நிறுவனத்திற்கு சமிக்ஞைகள் அனுப்பும். தற்போது மீனவர் மீட்டு கொடுத்த இந்த கருவி, இந்திய கடலோர காவல்படை கப்பலில் பயன்படுத்தியதாக இருக்கலாம் என தெரிகிறது. அந்த கருவியை இந்திய கடலோர பாதுகாப்பு படையிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை