கிரிக்கெட், பாட்மின்டன் வெற்றி: இந்தியாவுக்கு இன்று நல்ல நாள்| Dinamalar

கிரிக்கெட், பாட்மின்டன் வெற்றி: இந்தியாவுக்கு இன்று நல்ல நாள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
கிரிக்கெட், பாட்மின்டன் வெற்றி, இந்தியாவுக்கு, இன்று, நல்ல நாள்

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கொரிய பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் 4 ‛டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆட்டம் துவக்கத்தில் அதிர்ச்சியாக இருந்தது. 6 ஓவருக்குள் 3 விக்கெட் பறிபோனது. முதலில் களம் இறங்கிய ரகானே 5 ரன்களில் வெளியேறினார். கேப்டன் விராட் கோஹ்லி, மணீஷ் பாண்டே டக் அவுட்டாயினர்.பின்னர் களமிறங்கிய ஜாதவ் 40 ரன், தோனி 79 , பாண்ட்யா 83 ரன்கள் எடுத்து அவுட்டாயினர். புவனேஸ்குமார் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது.


மழையால் ஆட்டம் பாதிப்பு


அடுத்து ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸை தொடங்கும் முன் மழையால் ஆட்டம் இருமுறை பாதிக்கப்பட்டது. இறுதியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 21 ஓவரில் 164 ரன்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக பெரிதும் போராடினாலும் ஒரு புறம் விக்கெட் சரிந்து கொண்டே வந்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 21 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதையடுத்து இந்திய அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் போட்டியை வென்றது.


பாட்மின்டன்


தென்கொரிய தலைநகர் சியோலில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனில் நம்பர் 4' வீராங்கனையான இந்தியாவின் சிந்து தரவரிசையில் 9வது இடத்திலுள்ள உலக சாம்பியனான ஜப்பானின் நயோமியை 22-20,11-21,21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கொரிய ஓபன் பாட்மின்டன் தொடரில் கோப்பை வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமை பெற்றார் சிந்து.


இந்தியாவுக்கு பெருமை


இன்று செப்-17) நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. முன்னதாக,தென்கொரிய தலைநகர் சியோலில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து வெற்றி பெற்றார். இந்த இரண்டு வெற்றியும் ஒரே நாளில் இன்று கிடைத்தது இந்தியாவுக்கு உன்னதமான நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-செப்-201706:28:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆமா இதாலே பெட்ரோல் விலை லிட்டர் 32 ரூபா குறையத் போகுதாம்.
Rate this:
Share this comment
Cancel
18-செப்-201704:10:43 IST Report Abuse
உஷாதேவன் மனசெல்லாம் மத்தாப்பூ வாழ்த்துக்கள் சகோதரர்களே.
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
18-செப்-201701:19:34 IST Report Abuse
Makkal Enn pakam லூசு பயலுகளா இதுல என்னடா பெருமை. இந்த கிரிக்கெட் இந்தியாவை கூடியவிரைவில் அழித்துவிடும்.....
Rate this:
Share this comment
Cancel
Nawashkhan - Dammam,சவுதி அரேபியா
18-செப்-201700:46:18 IST Report Abuse
Nawashkhan கவுரவமான ஸ்கோர் எடுப்போமா என்று கவலையில் இருந்த சமயத்தில் பாண்டியா, தோனி, புவி போன்றவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் நல்ல ஸ்கோரை நாம் எட்டினோம் அப்போதே வெற்றியின் நம்பிக்கை வந்துவிட்டது வருணன் கருணை காட்ட பந்துவீச்சாளர்கள் போட்டு தாக்க நமது வெற்றி இலகுவானது பாரத வீரர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
18-செப்-201700:00:52 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Congrats to Sindhu. She is emerging as a great player .Pandya is another star for India.
Rate this:
Share this comment
Cancel
Muruganandam Moola Natchathiram - Thirunallar,இந்தியா
17-செப்-201723:00:27 IST Report Abuse
Muruganandam Moola Natchathiram இன்னொரு விதத்திலும் இன்று இந்தியாவுக்கு நல்ல நாள்தான் பெரியாரின் பிறந்த நாள் என்ற வகையில்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-செப்-201722:42:12 IST Report Abuse
Kuppuswamykesavan " ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது ".
Rate this:
Share this comment
Cancel
Velai - Ahmadabad,இந்தியா
17-செப்-201722:42:04 IST Report Abuse
Velai மழையே நமக்கு வாழ்வு. தமிழகத்தில் இலவச மயம் கிரிக்கெட்டில் கூட.
Rate this:
Share this comment
Cancel
jegon - Chennai,இந்தியா
17-செப்-201722:35:50 IST Report Abuse
jegon ஆல் தி பெஸ்ட் India டீம் வின் திseries
Rate this:
Share this comment
Cancel
jegon - Chennai,இந்தியா
17-செப்-201722:34:33 IST Report Abuse
jegon வெரி குட் India வின் தி series ஆல் திbest
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.