'பெட்ரோல், டீசல் விலையை குறையுங்க!' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'பெட்ரோல், டீசல் விலையை குறையுங்க!'

சென்னை: 'பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது நேற்றைய அறிக்கை:காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட, தற்போது, சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை, பேரலுக்கு, 52 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது.

எனினும், பெட்ரோல், டீசல் விலை, 50

சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இது, பா.ஜ., அளித்ததேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரண்பட்டதாகும்.விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசோ, மக்கள் படும் வேதனைகளை அமைதியாக வேடிக்கை பார்ப்பது கொடுமை. அதே நேரம், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், 'பெட்ரோல் விலை உயர்வால் ஏழைகளுக்கு பாதிப்பு இல்லை; வாகனம் உள்ளவர்கள்யாரும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல' என, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி இருக்கிறார்.

மக்களின் துயரங்களைப் பற்றி, பா.ஜ., அரசு மட்டு மல்ல, அதன்கீழ் பணியாற்றும் அமைச்சர்களும்

Advertisement

பெட்ரோல்,Petrol, டீசல் , Diesel, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ,DMK chief executive Stalin,காங்கிரஸ் ,Congress, கச்சா எண்ணெய் விலை, Crude Oil Prices,மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், Union Minister Alpones Kannanthanam, பா.ஜ., BJP,  மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம், Union Petroleum Ministry,

உணர்வதில்லை. ஆகவே, மக்களை மிக மோசமாக பாதிக்கும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், காஸ் விலை ஏற்றத்தை தடுக்கவும், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Solvathellam Unmai - Chennai,இந்தியா
18-செப்-201721:03:37 IST Report Abuse

Solvathellam Unmaiமத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வேடிக்கை பார்ப்பது மக்களை எரிச்சலடைய செய்கிறது. ஒரிசாவில் பஜாக மீது மக்கள் கடும் கோபம்.. பஜாக பிரமுகர் வண்டி உடைப்பு... கொடி எரிப்பு ..

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-செப்-201719:08:38 IST Report Abuse

Pasupathi Subbianஇந்த எதிர்ப்பை இன்னமும் தீவிரப்படுத்தினால் , மக்களின் ஏகோபித்த ஆதரவு நிச்சயம் கிடைக்கும். செய்வாரா

Rate this:
shakti - vilupuram,இந்தியா
18-செப்-201716:59:00 IST Report Abuse

shaktiஒரு ஊரில் திருடர்கள் சேர்ந்து கலகம் செய்தனர் . அதை தி.க என்று மக்கள் அழைத்தனர் . கொஞ்ச நாள் பிறகு சும்மா கலகம் மட்டும் போதாது, முன்னேற்றமும் வேண்டும் என்று திருடர் முன்னேற்ற கலகம் தொடங்கினர். அதில் ஒரு நல்லவர் அப்பாவி இருந்தார். அதனால் அவரை நீக்கி விட்டனர். அவர் வெளியில் போய் அப்பாவி திருடர் முன்னேற்ற கலகம் தொடங்கினர். மீதமிருந்த திருடர்களின் மதிகெட்ட ஒருவர் தனியே பிரிந்து சென்று மதிகெட்ட திருடர் முன்னேற்ற கலகம் தொடங்கினார். இவர்கள் வசதியாக வளர்ந்ததை பார்த்த ஒரு குடிகாரன் தேர்ந்தெடுத்த முட்டாள் திருடர் கலகம் தொடங்கினார் மற்றவர்கள் என்ன சும்மாவா இருப்பார்கள் ? அவரவர் வசதிக்கு எதோ ஒரு கலகம் தொடங்கி அந்த ஊரையே நாறடித்து விட்டனர்

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)