அவசர வழக்கு விவகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு | Dinamalar

அவசர வழக்கு விவகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 21, 2017 | Added : செப் 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உச்ச நீதிமன்றம்,Supreme Court, புதுடில்லி,New Delhi, நீதிபதி அமிதவ ராய்,Judge Amitava Rai, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர்,Justice AM Kanwilkar,  அட்வகேட்ஸ் ஆன் ரெக்கார்டு, Advocates On Record,

புதுடில்லி: 'அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் வாய்ப்பு, ஏ.ஓ.ஆர்., எனப்படும், பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான ஒரு வழக்கறிஞர் கூறியதாவது: அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் வாய்ப்பு, மூத்த வழக்கறிஞர்களுக்கு மட்டுமே தரப்படுவதாகவும், இவ்விஷயத்தில், இளம் வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அவரை போல், மேலும் சில வழக்கறிஞர்கள், இதே போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதையடுத்து, 'அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் வாய்ப்பு, 'அட்வகேட்ஸ் ஆன் ரெக்கார்டு' என்ற பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்' என, நீதிபதிகள் அறிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
21-செப்-201711:00:38 IST Report Abuse
Giridharan Srinivasan என்னை பொறுத்தவரை சில வழக்குகள் தேவை இல்லாமல் அவசர வழக்காக விசாரிக்க மனுப்போடுவதை நீதிமன்றம் அனுமதிக்காக கூடாது. அதே சமயம் பல சிவில் வழக்குகள், குறிப்பாக விவாகரத்து வழக்குகள், பல வருடங்களாக நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை வெகு விரைவாக நடத்தி ஆணை பிறப்பிக்க ஆவண செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை