அடுத்த மாதம் 25ம் தேதி, 'ஸ்பெக்ட்ரம்' வழக்கில் தீர்ப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
அடுத்த மாதம் 25ம் தேதி,
'ஸ்பெக்ட்ரம்' வழக்கில் தீர்ப்பு

தேசிய அரசியலில், பெரும் புயலை கிளப்பிய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், அடுத்த மாதம், 25ல், தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

 அடுத்த மாதம், 25ம் தேதி,ஸ்பெக்ட்ரம்,வழக்கில் ,தீர்ப்பு

மத்தியில், 2004 -- -09ல் காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்தபோது, மன்மோகன் சிங்,பிரதமராக இருந்தார். அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், பெரும் முறைகேடு நிகழ்ந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு, தன் அறிக்கையில், இந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியது.

குற்றச்சாட்டு:


இது, நிர்வாக ரீதியிலான முறைகேடு என்ற போதிலும், அரசியல் களத்தில் பெரும்

பரபரப்பை கிளப்பி, மத்திய அரசுக்கு எதிராக திரும்பியது. எதிர்க்கட்சிகளின் கைகளில் கிடைத்த, மிகப்பெரிய அரசியல் ஆயுதமாகவும் இந்த வழக்கு மாறியது.அப்போது, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா மீது, குற்றம் சாட்ட பட்டது; இதனால், தமிழகத்தில், அரசியல் புயல் வீசியது. தி.மு.க., தலைவர், கருணாநிதியின் குடும்பத்தினர் மீதும், குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.
கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான கனிமொழியும் இந்த வழக்கில் சிக்கினார்.
ராஜா, கனிமொழி, தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், தொலைத் தொடர்பு வழங்கும் நிறுவனங்களின் முக்கிய புள்ளிகள் உட்பட, 14 பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. அனைவருமே, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் வெளியில்வந்தனர்.

வழக்கு விசாரணைக்கு என, டில்லி, பாட்டியாலா கோர்ட்டில், நீதிபதி, ஓ.பி.சைனி தலைமையில், சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது. ஆறு ஆண்டு களாக விசாரணை நடந்தது. நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் பலரும், இந்த வழக்கில் ஆஜராகி, வாதிட்டனர்.
ஒருவழியாக, ஏப்ரலில் விசாரணை முடிவுக்கு வந்தது. தீர்ப்பு தேதி, நாள் குறிப்பிடாமல்

Advertisement

ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின், தீர்ப்பு தேதியை, ஆகஸ்ட் 25ல் அறிவிப்பதாக, நீதிபதி தெரிவித்தார். திட்டமிட்டபடி, தீர்ப்பு விபரங்கள் தயாராகவில்லை.

அவகாசம் தேவை:


இதையடுத்து, செப்., 20ல், தீர்ப்புக்கான தேதியை அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார். தமிழகத்தில் காணப்படும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க.,வில், இந்த வழக்கு, தாக்கத்தை ஏற்படுத்தலாம் என, அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று பாட்டியாலா கோர்ட் கூடியது. காலையில் இருந்தே, பரபரப்பு காணப்பட்டாலும், மதியம், 3:00 மணிக்கு, விபரங்கள் வெளியாயின.

அதன்படி, நீதிபதி, சைனி, ''அடுத்த மாதம், 25ல், தீர்ப்பு அளிக்கப்படும். தீர்ப்பு குறித்த பல்வேறு விஷயங்களை படித்துப் பார்த்து, இறுதி செய்வதற்கு அவகாசம் தேவைப்படுகிறது; எனவே, திட்டமிட்ட தேதிக்குள் வழங்க முடியா விட்டாலும், அதற்கு அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும்,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-செப்-201720:27:51 IST Report Abuse

Pugazh V1.76 லட்சம் கோடி இழப்பு என்றது சிஏஜி. 65000 கோடி இழப்பு என்றது சிபிஐ. அதிர்ஷ்டம் இருப்பவர் ஜெயிப்பார் என்று சிபிஐ சொல்லிடுச்சு..இனி என்ன, வாசக நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவாங்க

Rate this:
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
21-செப்-201711:59:05 IST Report Abuse

R.SANKARA RAMANஅக்டோபர் 25 தீர்ப்பு சொல்லும் தேதி அல்ல . அன்று தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்படும்.தேவைப்பட்டால் இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களைத் தாக்கல் செய்யலாம்.

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
21-செப்-201711:03:18 IST Report Abuse

narayanan iyerஇத்தனை நாளாய் படிக்கவில்லையாம் இனிமேல்தான் படித்து பார்க்கப்போறாராம் இதன் தீர்ப்புத்தன்மை நிரபராதி என்றுதான் வரும் .

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)