'டிசம்பருக்குள் இடைத்தேர்தல்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'டிசம்பருக்குள் இடைத்தேர்தல்'

தமிழகத்தில், ஒரே நாளில் இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

டிசம்பருக்குள்,இடைத்தேர்தல்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற, ஜெ., 2016 டிச., 5ல், மறைந்தார். அதை தொடர்ந்து காலியான, அந்த தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு அதிகளவில், பணப் பட்டுவாடா செய்யப்பட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.தேர்தல் நடத்த உத்தரவிட

கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரமேஷ் என்பவர், பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், 'டிச., 31க்குள் இடை தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் அறிவிக்கும்' என,நம்புவதாகக் கூறி, வழக்கை முடித்து வைத்தது.

இந்த சூழ்நிலையில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக, சபாநாயகர் அறிவித்துள்ளார். அதை எதிர்த்து, அந்த, எம்.எல்.ஏ.,க்கள், நீதிமன்றம் சென்றுள்ளனர். அதில், 'அவர்கள் நீக்கப்பட்டது செல்லும்' என, நீதிமன்றம் தீர்ப்பளித்தால், ஆர்.கே.நகருடன் சேர்த்து, 19 தொகுதிகளுக்கும் டிசம்பரில் இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறிய தாவது: ஆர்.கே.நகரை பொறுத்தவரை, இடைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் துவங்கி விட்டன. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தால்,

Advertisement

அந்த தொகுதிகளுக்கும், ஆர்.கே.நகருடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும். டிசம்பருக்குள், இடைத்தேர்தல் நடைபெறுவது உறுதியாகி விட்டது. எத்தனை தொகுதிகள் என்பது, நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து முடிவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-செப்-201720:33:13 IST Report Abuse

Pugazh Vகுற்றங்கள் நிரூபணமான தலைவியின் கோஷ்டியா அல்லது குற்றங்கள் நிரூபணமான செயலாளரின் கோஷ்டியா ?எதனுடன் கூட்டணி போடலாம் என்று பிஜேபி ஆலோசனைல இருக்கு. கட்டுமரம் சுடலை ன்னெல்லாம் சொல்லி, எதாவது ஒரு ஊழல்கோஷ்டியை வாசகர்கள் ஆதரிப்பாங்க..டிசம்பர் வரை ஜாலி தான்

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
21-செப்-201718:38:21 IST Report Abuse

venkateshஒரு தொகுதிக்கே தேர்தல் நடத்த முடியாத ஆணையம் மாநிலம் முழுவதும் எந்த லட்சணத்தில் தேர்தல் நடத்தும் இப்படி தான் இத்தனை நாட்களாக நடந்து கொண்டு இருக்கிறது பணப்பட்டுவாடாவையும் தடுக்க முடியாது பாண் பராக்கையும் தடுக்க முடியாது வெட்கக்கேடு.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-செப்-201717:04:49 IST Report Abuse

இந்தியன் kumarஊழல் பெருத்து விட்டது லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது சீக்கிரம் இந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)