குடகு விடுதியிலிருந்து கிளம்ப தயாராகும், 'மாஜி'க்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடகு விடுதியிலிருந்து கிளம்ப தயாராகும், 'மாஜி'க்கள்

Added : செப் 21, 2017 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குடகு விடுதி,kudagu resort, தினகரன், Dinakaran,எம்.எல்.ஏ., MLA,தங்க தமிழ்செல்வன்,  thanga Thamilselvan,சென்னை உயர்நீதிமன்றம், Chennai High Court,

குடகு: ''குடகு விடுதியிலிருந்து, இன்னும் இரு நாட்களில் புறப்படுவோம்,'' என தினகரன் ஆதரவு, முன்னாள், எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் சோம்வார்பேட்டையில் உள்ள சொகுசு விடுதியில், தினகரன் ஆதரவு முன்னாள், எம்.எல்.ஏ., தமிழ்செல்வன், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தகுதி நீக்கத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், இன்று வந்துள்ள தீர்ப்பு, எங்களுக்கு சாதகமாக உள்ளது. குடகு விடுதியிலிருந்து இன்னும் இரு நாட்களில் புறப்பட உள்ளோம்.

நீதி மன்ற தீர்ப்பு வந்த பின், யார் நல்லவர்கள் என தெரியும். நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., என்பதை நிரூபிப்போம். வழக்கை சந்திக்கும் வலிமை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குடகு விடுதியிலிருந்து கிளம்ப தயாராகும் 'மாஜி'க்கள்


எம்.எல்.ஏ.,க்கள் குமுறல்:

சபாநாயகர் உத்தரவுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கும் என, தினகரன் தரப்பில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தனர். அதை நம்பி இருந்தவர்கள், நீதிமன்ற முடிவு தெரிய வந்ததும், சோகம் அடைந்தனர்.

இந்நிலையில், அவர்களை வெளியே அனுப்பினால், சபாநாயகரிடம் மன்னிப்பு கடிதம் வழங்கி, தகுதி நீக்கத்தை ரத்து செய்யும்படி முறையிடுவர் என கூறப்படுகிறது. அதனால், அவர்களை வெளியே விடாமல், தொடர்ந்து குடகு மலையில் தங்க வைக்க, தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
21-செப்-201723:51:10 IST Report Abuse
N.K ஓஹோ மறுபடியும் மன்னிப்பு கடிதமா? இப்படித்தான் ஒருத்தர் மன்னிப்புக்கடிதம் கொடுத்து போயஸ் தோட்டத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-செப்-201720:31:35 IST Report Abuse
Nallavan Nallavan இனிமேயாவது கௌரவமா சோறு தின்னுங்கப்பா .....
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
21-செப்-201720:12:54 IST Report Abuse
samkey இருங்கடி அடிச்ச கும்மாளத்துக்கு உங்களை தஞ்சாவூருக்கோ அல்லது மன்னைக்கோ கொண்டுசென்று ஒரு மாதம் வைத்திருந்து தோப்பு வேலை அல்லது வயல் வேலை வாங்கி கொண்டுதான் பிறகு விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை