இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
  இதே நாளில் அன்று

1930 செப்டம்பர் 22

புகழ் பெற்ற, திரைப்பட பின்னணி பாடகர், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில், 1930 செப்., 22ல் பிறந்தார். 1953ல் வெளிவந்த, ஜாதகம் படத்தில் இடம்பெற்ற, 'சிந்தனை என் செல்வமே...' என்ற தமிழ் பாடலை முதன் முதலாகப் பாடினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடுவதில், புதிய பாணியை கொண்டு வந்தவர். 'காலங்களில் அவள் வசந்தம்...' எனும் பாடலை பாடி, பெரும் புகழ் ஈட்டினார். தமிழ் படங்களில், நடிகர் ஜெமினிக்கும், கன்னடத்தில், நடிகர் ராஜ்குமாருக்கும் பெரும்பான்மையான பாடல்களை பாடியுள்ளார்.
ஆங்கிலம், உருது உட்பட, எட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்; பல பாடல்களையும் எழுதியுள்ளார். 'மதுவண்டு' என்ற புனைப்பெயரில், தமிழ் கவிதைகளை எழுதினார்.வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள, ஹிந்தி பாடல்களை இவரே இயற்றினார். 2014 ஏப்., 14ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.