தொடரும் டில்லி பயணங்கள்: குவியும் மனுக்கள் Dinamalar
பதிவு செய்த நாள் :
தொடரும் டில்லி பயணங்கள்: குவியும் மனுக்கள்

சமீபத்தில், தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் டில்லிக்கு வந்து திரும்பிய நிலையில், அமைச்சர் தங்கமணி, டில்லிக்கு வந்து, மரியாதை நிமித்தமாக, மத்திய அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

டில்லி,Delhi, தமிழகம், Tamilnadu,  அமைச்சர் தங்கமணி,Minister Thangamani,  ஜெயலலிதா,Jayalalithaa, நீட் தேர்வு , Neet exam, தேர்தல் ஆணையம், Election Commission, இரட்டை இலை,Irattai ilai, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy,  பியுஷ் கோயல்,Piyush Goyal,  நிர்மலா சீதாராமன் ,Nirmala Seetharaman, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi,

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தமிழக அமைச்சர்கள் டில்லிக்கு வருகை தருவது அதிகரித்து வந்த நிலையில், சமீபகாலமாகவே, வாரத்துக்கு இரண்டு அமைச்சர்களாவது டில்லி பக்கம் தென்படுகின்றனர். 'நீட்' தேர்வு விலக்கு கோரி வந்திருப்பதாக கூறினர்.

ஆலோசனை


அந்த பிரச்னை ஓய்ந்துவிட்ட நிலையிலும், தமிழக அமைச்சர்களின் டில்லி பயணங்கள் தொடர்கின்றன. மறுபடியும், 'நீட்' பிரச்னையை கூற முடியாது என்பதால், தேர்தல் ஆணையம், இரட்டை இலைசின்னம், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை என விதவிதமான காரணங்களுக்காக டில்லி வந்திருப்பதாக கூறுகின்றனர். சமீபத்தில், அமைச்சர்கள்

ஜெயகுமாரும், உதயகுமாரும் வந்து சென்ற நிலையில், நேற்று, மின்துறை அமைச்சர் தங்கமணி டில்லிக்கு வந்திருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், டில்லிக்கு அதிக முறை வந்த தமிழக அமைச்சர்களில், இவர்தான் முதலிடத்தில் உள்ளார்.முதல்வர் பழனிசாமி அணியின் சார்பாக,டில்லி அரசியல் தொடர்புகளில், 'மிக முக்கிய பாயின்ட்ஸ் மேன்' என்ற அளவுக்கு, இவரது செயல்பாடுகள் இருப்பதாக, அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஒடிசாவிலிருந்து செயல்பட்டு வரும், தமிழக தொழிலதிபர்கள் சிலரது துணையுடன், மிக கச்சிதமாக, இந்த அரசியல் தொடர்பு வளையம் கட்டமைக்கப்பட்டு, இதுவரை, எல்லா விஷயங் களுமே சரியான பாதையில் செல்கிறது. இதனாலேயே, மின்துறைக்கு அமைச்சராக இருந்த, பியுஷ் கோயலுடன், அமைச்சர் தங்கமணிக்கு நல்ல புரிந்துணர்வும், நட்பும், அதிகமாகவே இருந்தது.

இதை, ஒவ்வொரு முறையும், அவரது டில்லி பயணத்தில் காண முடிந்தது. அதேபோல், டில்லிக்கு வரும்போதெல்லாம், அப்போதைய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், அவர் சந்திக்க தவறியதே இல்லை.நிர்மலா சீதாராமன் உதவியுடன், பிரதமர் நரேந்திர மோடியை தனியாக நேரில் சந்தித்தார்.

இந்தளவுக்கு, டில்லி வட்டாரங்களில், தன் தொடர்புகளை பலப்படுத்தி வரும் அமைச்சர் தங்கமணி, நேற்றும் வழக்கம்போல, டில்லியில், அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்தார்.

Advertisement

ரயில்வே அமைச்சராக இருந்தாலும், நிலக்கரி துறைக்கும் பொறுப்பு வகிப்பதால், பியுஷ் கோயலை, அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.கூடுதல் நிலக்கரி கோரிக்கை வைப்பதற்காக, இந்த சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது.

மத்திய மின்துறை அமைச்சர், ஆர்.கே.சிங்கையும் சந்தித்து, நிலத்துக்கு அடியில், கேபிள் பதிப்பதற்கான நிலுவை நிதியை வழங்கும்படியும், கூடுதல் மின்சாரத்தை வழங்கும்படியும், தங்கமணி கோரிக்கை மனு அளித்தார்.

சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், ராணுவ அமைச்சரான நிர்மலா சீதாராமனையும், வழக்கம்போல இந்த முறையும், அமைச்சர் தங்கமணி சந்திக்க தவறவில்லை. இது ''மரியாதை நிமித்தமான சந்திப்பு,'' என்று மட்டுமே, அமைச்சர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
22-செப்-201718:58:50 IST Report Abuse

Shekar Raghavanஐயா அம்மா அம்மம்மா கூவுதடாதீங்க ........கூவுதுடாதீங்க ம்ம்ம்ம்ம்ம் ............... அடிமைப்பட்டு முதுகு ???? ஆயிடிச்சி

Rate this:
Palanisamy Sivasabaapathi - SALEM,இந்தியா
22-செப்-201718:40:00 IST Report Abuse

Palanisamy Sivasabaapathiஒடிசாவிலிருந்து செயல்பட்டு வரும், தமிழக தொழிலதிபர்கள் சிலரது துணையுடன், மிக கச்சிதமாக, இந்த அரசியல் தொடர்பு வளையம் கட்டமைக்கப்பட்டு, இதுவரை, எல்லா விஷயங் களுமே சரியான பாதையில் செல்கிறது. -யார் அவர் ? 57000 கோடி ஊழலில் பேசப்படும் தொழிலதிபரா?

Rate this:
skandh - chennai,இந்தியா
22-செப்-201716:25:19 IST Report Abuse

skandhஇவன் சீக்கிரத்தில் பிஜெ பியில் சேருவான்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)