பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா; பிரதமருக்கு சோனியா கடிதம் Dinamalar
பதிவு செய்த நாள் :
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா
பிரதமருக்கு சோனியா கடிதம்

புதுடில்லி: 'பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, லோக்சபாவில் உடனடியாக நிறைவேற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்., தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார்.

பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, 2010ல்,ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது; எனினும் லோக்சபாவில் நிறைவேற்றபடவில்லை.அப்போது, மத்தியில், காங்., ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான

சமாஜ்வாதி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்றக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்., தலைவர் சோனியா கடிதம்எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறியுள்ளதாவது: பார்லிமென்ட் மற்றும் மாநில சட்ட சபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 2010ல், ராஜ்யசபாவில், நிறைவேற்ற பட்டது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருக்கும் அந்த மசோதாவை,

Advertisement

பெண்கள், இட ஒதுக்கீடு, மசோதா, பிரதமருக்கு,சோனியா, கடிதம்

லோக்சபாவில் நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற, காங்., துணை நிற்கும்.

லோக்சபாவில், மசோதாவை நிறைவேற்ற, பா.ஜ.,வுக்கு, போதுமான பலம் உள்ளது. எனவே, உடனடியாக, இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
22-செப்-201714:52:21 IST Report Abuse

Nakkal Nadhamuniகாங்கிரஸும் திமுக மாதிரி ஆட்சில இல்லாதபோது ஆட்டம் பலமா இருக்கு... தாங்க செய்யாததெல்லாம் செய்ய சொல்லுவாங்க... தாங்க ஆட்சில இருந்த போது தப்பா பண்ணதெல்லாம் ஆட்சில இல்லாதபோது எதிர்ப்பாங்க... ஏமாத்து அரசியல்...

Rate this:
22-செப்-201713:35:04 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்10 வருடம் ஒருவரின் குடுமியை கையில் வைத்துக்கொண்டு ஆட்சி புரிந்த சோனியா இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டாராம் , தற்போது மோடி நிறைவேற்றப்போகிறார் என்ற செய்தி இவர்களின் ஒற்றர்கள் மூலம் கிடைத்தவுடன் உடனடியாக துண்டு போட்டு வைக்கிறார். ஹா ஹா ஹா . கிளம்பு கிளம்பு காத்தாவது வரட்டும். என்ன செய்யவேண்டும் என்று உன்னை விட மோடிக்கு நன்றாகவே தெரியும்

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
22-செப்-201710:20:39 IST Report Abuse

Agni Shivaநம்ம ஊரில் ஒரு பழக்கம் உண்டு. எப்போதெல்லாம் ஒரு திட்டத்திற்கு அல்லது ஒரு பணிக்கு அரசு பணம் ஒதுக்கி, அது துறை மாறி, துறை மாறி கடைசியாக அந்த பஞ்சாயத்திலோ அல்லது அந்த சந்பந்தப்பட்ட பகுதியில் இருக்கும் அலுவகத்திற்கோ வந்து சேர்ந்து விட்டதை எப்படியோ மோப்பம் பிடிக்கும் சிவப்பு தாலிபான் உண்டி குலுக்கிகள், இரவோடு இரவாக " அரசே உடனடியாக இந்த பணிக்கு பணத்தை ஒதுக்கி செய்து முடி." என்று வீர வசனம் பேசும் நோட்டீசுகளை அடித்து தெருவெங்கும் ஒட்டி மறுநாள் சம்பந்தப்பட்ட அலுவலகம் முன்பு போராட்டமும் செய்வார்கள். ஒரு சிலநாட்களில் அந்த பணியும் இயற்கையாக தொடங்கும்..உடனே இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அடுத்த நாள் போஸ்டர்கள் ஒட்டப்படும். அது போல தான் சொக்கத் தங்கத்தின் வேலையும். ஏற்கனவே பெண்களுக்கான இட ஒதுக்கிடு பற்றிய தகவல் சுமார் 40 நாட்களுக்கு முன்னரே வெளியாகி விட்டது. அதற்க்கு எந்த கட்சிகள் ஆதரவளிப்பார்கள், எந்தெந்த கட்சிகள் எதிர்ப்பார்கள் என்றெல்லாம் கூட ஆலோசிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மோடி இதை நிறைவேற்றியே தீரவேண்டும் என்றும் தீர்மானித்தும் விட்டார். படகில் பாதி பாக்கை போட்டு விட்டு படகில் உள்ளத்தில் பாதி பாக்கும் தனக்கு என்று சொல்வது போல சொக்க தங்கம் பாதி பாக்கை போட்டாகி விட்டது. தங்களால் மலையை தனியாக தூக்க முடியாதாம்..யாராவது வந்து தூக்கி வைத்தால் தாங்குவார்களாம்... மோடி என்பவர் தான் வரவேண்டும்..மலையை தூக்கி வைக்க...அதை இவர்கள் தாங்குவார்களாம்..

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)