ரயில் கொள்ளை வழக்கில் திணறல்; பீஹாரில் தமிழக போலீசார் முகாம் Dinamalar
பதிவு செய்த நாள் :
ரயில் கொள்ளை வழக்கில் திணறல்
பீஹாரில் தமிழக போலீசார் முகாம்

சேலம் - சென்னை விரைவு ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு, 5.78 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், துப்பு துலக்க முடியாமல் திணறி வரும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், தற்போது, பீஹாரில் முகாமிட்டுள்ளனர்.

சேலத்தில் இருந்து,2016 ஆக.,7ல், சென்னைக்கு விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில், 13 பெட்டிகளில், பயணியர் இருந்தனர். இன்ஜினுக்கு அருகில் உள்ள, 3பெட்டிகளில், சேலம், நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் இந்தியன் வங்கி என, பல வங்கி கிளைகளில் சேகரிக்க பட்ட, பழையது, கிழிந்தது என, 342.75 கோடி ரூபாய் ஏற்றப்பட்டு இருந்தது.

ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணத்துடன்,

இந்த ரயில், ஆக., 8 அதிகாலை, 4:40 மணிக்கு, சென்னை, எழும்பூருக்கு வந்தடைந்தது. அப்போது, ரயிலின் மேற்கூரையில், சதுர வடிவில், 'கட்டிங்' இயந்திரத்தால் துளையிட்டு, 5.78 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, ரயில்வே போலீசார் விசாரித்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது.

எனினும் இதில்,துப்பு துலக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். அத்துடன், இந்த கொள்ளை குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள், பீஹாரில் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

 ரயில் கொள்ளை ,வழக்கில்,திணறல், பீஹாரில் ,தமிழக, போலீசார், முகாம்

இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசார், பீஹார் சென்றுள்ளனர். அங்கு, சந்தேக நபர்களின் வீடுகளை, அவர்கள் முற்றுகையிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'ரயில் கொள்ளையர் குறித்து, நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி விசாரணை நடந்து வருகிறது; கொள்ளையர் விரைவில் பிடிபடுவர் என்றனர்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-செப்-201717:56:11 IST Report Abuse

Endrum Indianஅப்போ இதுக்கே 5 .78 கோடி செலவு செய்வார்கள் போல இருக்கே. ரயில்வே அலுவலர் உதவி இல்லாமல் இதை செய்திருக்க முடியாது. அன்று பணியில் இருந்த, அந்த தடத்தில் பணியில் இருந்தவர்களை ஒரு பிடி பிடித்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகத்தெரியும். அதுவும் முஸ்லிம்கள் யார் அதில் என்றால் அந்த சம்பந்தம் வெட்ட வெளிச்சமாக தெரியும்.

Rate this:
Vallavan - coimbatore,இந்தியா
22-செப்-201721:00:18 IST Report Abuse

Vallavanகண்டிப்பாக பார்ப்போம் இது சம்பவம் யார் செய்தது என்று எப்படி முஸ்லீம் னு இன்ஸ்பெக்டர் சொல்லறாரு...

Rate this:
Vallavan - coimbatore,இந்தியா
22-செப்-201721:01:44 IST Report Abuse

Vallavanஇந்து திருடுவது இல்லையா ??? பார்ர்ரா...

Rate this:
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
22-செப்-201712:30:05 IST Report Abuse

Rangarajan Pgதிருடர்களை கண்டு பிடிக்க தான் பீகார் சென்று இருக்கிறார்கள். திருடனை பிடித்து விடுவார்கள் என்று நம்புவோமாக.

Rate this:
Balamurali - Salem,இந்தியா
22-செப்-201711:38:19 IST Report Abuse

Balamuraliபோலீஸ் கண்ணில் விரல் அல்ல, குச்சியை விட்டே ஆட்டி விட்டனர் திருடர்கள்... அவர்கள் திருடர்கள் அல்ல திருடர் திலகங்கள்

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
22-செப்-201710:59:19 IST Report Abuse

நக்கீரன்தலை எழுத்து என்ன செய்வது? நாட்டில் என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது என்பதை ஆளும் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பில்லை. இப்படிப்பட்ட கூமுட்டைகளை தேர்ந்தெடுத்த நாம் எவ்வளவு கேவலமானவர்கள்?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-செப்-201708:49:54 IST Report Abuse

Srinivasan Kannaiyaதிருச்சி ராமஜெயம் கேசு மாதிரிதான் சும்மா பேருக்கு ஏதவாது சொல்லி கொண்டு இருப்பாரகள்.. மக்கள் ஒரு நாள் இந்த இரண்டு வழக்குகளையும் மறந்துவிடுவார்கள்... இரண்டிலும் குற்றவாளிகள் ஆண்டவனால் தான் தண்டிக்கப்படுவார்கள்..

Rate this:
ARUL - chennai,இந்தியா
22-செப்-201708:42:34 IST Report Abuse

ARULசாலை போடுதல்,குடிநீர் வழங்குதல் போன்றவற்றை எல்லாம் தனியார் நிறுவனங்களுக்குத் தந்தது போல் தனது கையாலாகாத்தனத்தை ஒத்துக் கொண்டு தனியார் துப்பறியும் நிறுவனங்களிடம் அரசாங்கம் இந்தப் பணியைக் கொடுக்க வேண்டியது தானே.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-செப்-201708:13:20 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இருக்கும் இடத்தை விட்டு... இல்லாத இடம் தேடி.. எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே.. இப்போ யாராவது பேர் தெரியாதவனை என்கவுண்டர் செய்து அவன் தான் இதை செய்தான்.. ஆதாரம் சிக்கியதுன்னு அவன் கதையை முடித்து இந்த கதையை முடிப்பார்கள். பணம் புது நோட்டாக மாறி எந்த கண்டைனரில் இருக்கோ, சாவி யார் கையில் இருக்கோ..

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-செப்-201704:46:42 IST Report Abuse

Kasimani Baskaranவிபரம் தெரிந்தவர்கள் முதலிலேயே துளையிட்டு வைத்து இருந்திருக்கிறார்கள்... பணம் ஏற்றியவுடன் அடுத்த நிலையத்தில் அல்லது ஓடும் ரயிலுக்குள் வேறு இடத்துக்கு மாற்றி இருப்பார்கள்... ஸ்காட்லாண்டு யார்டால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-செப்-201708:14:02 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தூங்குறவனை தான் எழுப்ப முடியும்.....

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
22-செப்-201702:50:12 IST Report Abuse

ramasamy naickenஅட விடுங்கப்பா ஆறு கோடிகள் கண்டுபிடிப்பதற்கு, அதெற்கு மேல் செலவு பண்ணுவீர்கள் போல் இருக்கின்றது. கன்டைனரில் பிடிபட்ட பணமே காணாமல் போகிற காலம் இது. வேலை இல்லை என்றால் குடகு மலையில் போய் என்ன நடக்கின்றது என்று விசாரியுங்கள். எதாவது ப்ரமோஷனாவது கிடைக்கும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement