மேற்கு வங்கத்தில் மக்களை ஈர்க்க துர்கா பூஜை கொண்டாடும் கம்யூனிஸ்டுகள் Dinamalar
பதிவு செய்த நாள் :
மேற்கு வங்கத்தில் மக்களை ஈர்க்க
துர்கா பூஜை கொண்டாடும் கம்யூனிஸ்டுகள்

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில், மக்கள் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்த ஆண்டு, துர்கா பூஜை விழா கொண்டாடி வருகின்றனர்.

 மேற்கு வங்கம்,West Bengal,  துர்கா பூஜை,  Durga Puja,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், Marxist Communist, திரிணமுல் காங்கிரஸ், Trinamool Congress, மம்தா பானர்ஜி, Mamata Banerjee,விஜயதசமி,Vijayadasami,  பார்லிமென்ட், Parliament, கிருஷ்ண ஜெயந்தி விழா, Krishna Jayanthi Festival, கோல்கட்டா, kolkatta

மேற்குவங்க மாநிலத்தில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி, முதல்வராக உள்ளார். இங்கு, ஆண்டு தோறும், துர்கா பூஜை, உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.மக்களை ஈர்க்க இந்த ஆண்டு துர்கா பூஜை துவங்கி நடைபெற்று வருகிறது; வரும் விஜயதசமியுடன் விழா நிறைவுபெறுகிறது.

இந்த விழாவில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், ஆண்டுதோறும் பங்கேற்பது வழக்கம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,

மத விழாக்களில் பங்கேற்பதில்லை. சமீப காலமாக, மேற்கு வங்க மக்களின் ஆதரவை இழந்து வருவதால், மக்களை ஈர்க்கும் விதமாக, இந்த ஆண்டு, துர்கா பூஜை விழாவில், அக்கட்சி நிர்வாகிகள்பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: திரிணமுல் காங்கிரசும், பா.ஜ.,வும், மதத்தை வைத்து அரசியல் செய்கின்றன. மத விவகாரங் களில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனினும், சமூக விழாக்களில் பங்கேற்காமல் இருந்தால், மக்களை விட்டு விலகி செல்லும் சூழல் ஏற்படுகிறது.

நிர்வாகிகள் பங்கேற்பு


எனவே, இந்த ஆண்டு, துர்கா பூஜை விழாவில், நாங்களும் பங்கேற்கிறோம். துர்கா பூஜை நடைபெறும் இடங்களில், எங்கள் நிர்வாகிகள் பங்கேற்பர்.கட்சிசார்பில் சில இடங்களில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; அங்கு, வினியோகிப்ப தற்காக, துண்டு பிரசுரங்களையும் தயார் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கேரள மாநிலத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடி வரும் நிலையில்,மே. வங்கத்திலும், துர்கா பூஜையை கொண்டாடுகின்றனர்.

Advertisement


மூன்றாவது இடம்


மேற்கு வங்கத்தில், 2014 பார்லிமென்ட் தேர்தலுக்கு பின், பா.ஜ., பலம் பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும், திரிணமுல் காங்., அமோக வெற்றி பெற்றது; இரண்டாவது இடத்தை, பா.ஜ., கைப்பற்றியது.மார்க்சிஸ்ட் கம்யூ., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனவே, மக்கள் ஆதரவை பெறுவதற்காக, தீவிர முயற்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இறங்கியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-செப்-201713:22:31 IST Report Abuse

Nallavan Nallavanஇந்தச் செய்தியின் விபரங்களை இஸ்லாமிய அன்பர்கள் கிரகித்துக் கொள்ள வேண்டும் ..... எதற்காகச் சொல்கிறேன் என்று புரிகிறதா ????

Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
23-செப்-201712:50:23 IST Report Abuse

TamilArasanகபடதாரிகள்... இவர்களை என்னவென்று கூறுவது...?? நேற்று வரை இந்து தர்மத்தை தூற்றிவிட்டு இன்று வாக்கிற்க்காக கோவிலில் சென்று மணியடிப்போம் என்று கதறுகிறது கம்யூனிஸ்ட் கொள்கை...

Rate this:
A Shanmugam A Shanmugam - Gandhi Nagar,இந்தியா
23-செப்-201710:56:16 IST Report Abuse

A Shanmugam A Shanmugamகம்யூனிஸ்ட் கட்சி என்றாலே எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் "உள் நாடு ப்ரிச்சனை என்றால் ஒரு அணுகு முறை அதே வெளிநாட்டு பிரச்னை என்றால் ஒரு அணுகுமுறை". இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் இரட்டை வேடம். இவர்களுக்கு எந்த காலத்திலும் கடவுள் பக்தி பயம் கிடையாது. எல்லாம் வெளி போலி வேஷம் இதனை மேற்கு வங்க மக்கள் நம்பக்கூடாது.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X