கரூரில் 2வது நாளாக, 'ரெய்டு'; 'மாஜி'யின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கரூரில் 2வது நாளாக, 'ரெய்டு'
'மாஜி'யின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

கரூர்:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் கரூர் நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நேற்று, இரண்டாவது நாளாக, சோதனை நடத்தினர்.

 ரெய்டு,Railways, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, former Minister Senthil Balaji,வருமான வரித்துறை, Income Tax Department, தினகரன், Dinakaran, போக்குவரத்துத் துறை, Transport Department, மத்திய குற்றப் பிரிவு போலீஸ்,Central Crime Branch Police, நவ்ரங் டையிங், Navrong Dying, சுப்பிரமணி,Subramani,ஆசி டெக்ஸ்டைல்ஸ், Aisi Textiles, ஆர்த்தி ஏ டிரேடு, Aryti A Trade, தியாகராஜன்,Thiagarajan, கரூர் , Karur,


கரூரைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜி, தற்போது, தினகரன் அணியில் உள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களில், இவரும் ஒருவர்.நேற்று முன்தினம் காலை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

நேற்று இரண்டாவது நாளாக, 'நவ்ரங் டையிங்' உரிமையாளர் சுப்பிரமணி அலுவலகம்,

'ஆசி டெக்ஸ்டைல்ஸ்' பங்குதாரர் தியாகராஜன் அலுவலகம், 'ஆர்த்தி ஏ டிரேடு' நிறுவனம் உள்ளிட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, அரசு மற்றும் நகராட்சிபணிகளை டெண்டர் எடுத்து செய்த சங்கர் ஆனந்த்.மருத்துவக் கல்லுாரிக்கு இடத்தை தானமாக வழங்கிய, நவ்ரங் டையிங் உரிமையாளர் சுப்பிரமணி, செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டி யிட்ட போது, கணக்குகளை கவனித்ததாக கூறப் படும் தியாகராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்த, வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

போக்குவரத்துத் துறையில், வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உட்பட, நான்கு பேர் மீது, மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில்,முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், அவரது
ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement


ரூ.1.2 கோடி ரொக்கம் பறிமுதல்:


கரூரில், பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும், 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில், நேற்று இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்ந்தது. இதுவரை, கணக்கில் வராத, 1.2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது.
'மூன்றாவது நாளாக இன்றும் சோதனை தொடரும்' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (9)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
23-செப்-201711:25:24 IST Report Abuse

ilicha vaay vivasaayi (sundararajan)அப்படியே நம்ம OPS & EPS இவர்களுக்கு எப்போ விசாரணை நடக்கும்?

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
23-செப்-201710:31:20 IST Report Abuse

balakrishnanஆதரவாவது, மண்ணாங்கட்டியாவது, பேசாமல் விஜயபாஸ்கர் வழியில் சென்றால் எளிதாக தப்பிக்கலாம், எத்தனை கோடி கொள்ளை அடிச்சால் தான் என்ன பி.ஜெ.பி க்கு ஜால்ரா போட்டால், அக்கினி குண்டத்தில் இறங்கி தூய்மை அடைந்துவிட்ட பலனை அடையாளம்,

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-செப்-201709:13:56 IST Report Abuse

Srinivasan Kannaiyaஉப்பை தின்னும் பொழுது இனித்தது.... இப்பொழுது தண்ணீர் குடிக்க வைக்கிறது...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
23-செப்-201710:35:17 IST Report Abuse

balakrishnanஎவ்வளவு உப்பு வேண்டுமானாலும் திங்கலாம், பி.ஜெ.பி யின் மினரல் வாட்டர் காப்பாற்றும், அது தான் கைவைத்தியம், இந்தியாவில் எத்தனையோ உப்பை தின்றவன், தின்பவன் அனைத்துக்கும் மினரல் வாட்டர் இருக்கு...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)