'டாஸ்மாக்' மதுபானம் கொள்முதல்; சசிகலா நிறுவனத்துக்கு, டாடா Dinamalar
பதிவு செய்த நாள் :
'டாஸ்மாக்' மதுபானம் கொள்முதல்
சசிகலா நிறுவனத்துக்கு, டாடா

'டாஸ்மாக்' நிறுவனம், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான, 'மிடாஸ்' நிறுவனத்திடம் இருந்து, மது வகைகள் கொள்முதல் செய்வதை, அதிரடியாக குறைந்துள்ளது.

 'டாஸ்மாக்',மதுபானம்,கொள்முதல்,சசிகலா,நிறுவனத்துக்கு, டாடா

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 'மிடாஸ், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், எஸ்.என்.ஜே.,' உட்பட, 11 நிறுவனங்களிடம் இருந்து, மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும், கொள்முதல் செய்கிறது.இதில், மிடாஸ் நிறுவனம், சசிகலாவின் குடும்பத்தினருக்கு சொந்தமானது. அதனால், அந்நிறுவனத்திடம் இருந்து தான், டாஸ்மாக், அதிகளவில் மது வகைகளை கொள்முதல் செய்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும், இது தொடர்ந்தது. ஆனால், அ.தி.மு.க., பிளவுபட்டு,

சசிகலா, சிறையில் அடைக்கப்பட்ட பின், நிலைமை மாறியது.கட்சியையும், ஆட்சியையும் ஆட்டி படைக்க திட்டமிட்ட தினகரனுக்கும், முதல்வர் பழனிசாமிக்கும் மோதல் வெடித்தது. அதன் காரணமாக, பன்னீர் அணியுடன் கைகோர்த்து, தினகரனை அடியோடு ஓரங்கட்டினார் பழனிசாமி. இதையடுத்து, சசிகுடும்பத்தின் பிடியில் இருக்கும், மிடாஸ் ஆலையில் இருந்து, மது வகைகள் வாங்குவதை குறைக்கவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மிடாஸ் நிறுவனம், மது வகைகள் மட்டுமே சப்ளை செய்கிறது. டாஸ்மாக், 11 நிறுவனங்களிடம் இருந்து, ஒரு மாதத்திற்கு சராசரியாக, 46 லட்சம் பெட்டி மது வகைகளை வாங்குகிறது. அதில், மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மட்டும், 12 லட்சம் பெட்டிகள் வாங்கப்படும். இதை தொடர்ந்து, எஸ்.என்.ஜே., 6.50 லட்சம்; கல்ஸ், ஆறு லட்சம்; மற்ற நிறுவனங்களிடம், மூன்று - நான்கு லட்சம் பெட்டிகள் என,கொள்முதல் செய்யப்படும்.

ஒரு மதுபான பெட்டியின் சராசரி விலை, 4,800 ரூபாய். 46 லட்சம் பெட்டியின் மதிப்பு, 2,200 கோடி ரூபாய். அதில், 500 கோடி ரூபாய்க்கு மேல், மிடாஸிடம் இருந்து வாங்கப்பட்டது. முதல்வர்

Advertisement

பழனிசாமி அரசை,ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்சியில், சசிகலா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்களின் மிடாஸ் ஆலையில் இருந்து, மது வகைகள் வாங்குவதை நிறுத்துமாறு, உயர் மட்டத்தில் இருந்து தகவல் வந்தது.

ஒரே சமயத்தில் முழுவதுமாக வாங்குவதை நிறுத்தினால், அதற்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. அதற்கு இடம் தராத வகையில், படிப்படியாக குறைக்க, ஆகஸ்டில், 8.20 லட்சம் பெட்டி வாங்கப்பட்டது. இம்மாதம், ஏழு லட்சம் பெட்டி மட்டும், 'ஆர்டர்' தரப்பட்டுள்ளது. இது, வரும் மாதங்களில் மேலும் குறைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukumar - Covai,இந்தியா
27-செப்-201713:54:33 IST Report Abuse

Muthukumarசெய்தி: ஒரே சமயத்தில் முழுவதுமாக வாங்குவதை நிறுத்தினால், அதற்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது மக்கள் கேள்வி: அது எப்படி முடியும். ஏற்கனவே நீதிமன்றம் எப்போது மது கடைகளை முற்றிலும் மூடுவீர்கள் என்று அரசாங்கத்தை கேள்வி கேட்டு உள்ளது... அதனால் தயவு செய்து எல்லா மது கடைகளையும் மூடவும்.. மக்கள் யாரும் இலவசம் கேட்கவில்லை... நல்லதொரு ஆட்சியை விரும்புகிறோம்..

Rate this:
Muthukumar - Covai,இந்தியா
27-செப்-201713:52:08 IST Report Abuse

Muthukumarஒரே சமயத்தில் முழுவதுமாக வாங்குவதை நிறுத்தினால், அதற்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. அது எப்படி முடியும். ஏற்கனவே நீதிமன்றம் எப்போது மது கடைகளை முற்றிலும் மூடுவீர்கள் என்று அரசாங்கத்தை கேள்வி கேட்டு உள்ளது... அதனால் தயவு செய்து எல்லா மது கடைகளையும் மூடவும்.. மக்கள் யாரும் இலவசம் கேட்கவில்லை... நல்லதொரு ஆட்சியை விரும்புகிறோம்..

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
23-செப்-201721:48:39 IST Report Abuse

Sathish அடுத்த தேர்தல் வரும்போது ஓட்டுக்கு தரும் பணத்தோடு இதையும் இலவசமாக கொடுப்பார்கள். இலவசம் என்றால் பெனாயிலையும் வாங்கி குடிக்கும் வாக்காளர் பெருமக்கள் இதனால் பயன்பெறுவர்.

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)