மத்திய அரசு பரிசீலனை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி ஊக்குவிப்பு திட்டம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மத்திய அரசு பரிசீலனை
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
ரூ.50,000 கோடி ஊக்குவிப்பு திட்டம்

புதுடில்லி:மத்திய அரசு, நாட்டின் பொருளாதார மந்த நிலையை கருத்தில் வைத்து, 40 - 50 ஆயிரம்கோடி ரூபாய் வரை, ஊக்குவிப்பு திட்டங்களைசெயல்படுத்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

 மத்திய அரசு, பரிசீலனை, நாட்டின், பொருளாதார, வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி ,ஊக்குவிப்பு, திட்டம்

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., அமல் காரணமாக, 2-வது காலாண்டிலும், வளர்ச்சி குறித்து உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது.இதனால், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கத்தை தடுக்க, ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

இத்திட்டங்களை செயல் படுத்தினால், நடப்பு நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை, இலக்கு அளவான, 3.2 சதவீதத்தில் இருந்து, 3.5 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.


வங்கி, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான, பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் இறுதி செய்ய பட்டதும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துவார்.இதையடுத்து, ஊக்குவிப்பு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சில தினங்களுக்கு முன், அருண் ஜெட்லி, வர்த்தகத் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், 'நிடி ஆயோக்' துணைத் தலைவர், ராஜிவ் குமார் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, நடப்பு பட்ஜெட்டில், மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 3.10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, செலவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதற்கான நிதியை, கடன் அல்லது பொதுத் துறை நிறுவனங்களின்,பங்கு விற்பனை மூலம் திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.72,500 கோடி திரட்ட திட்டம்


நடப்பு நிதியாண்டில், மொத்த கடன் இலக்கு, 5.80 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 72,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு

Advertisement

உள்ளது. இது, முன்னெப்போதும் நிர்ணயிக்கப்படாத இலக்காகும்.

வங்கி துறைக்கு ஆதரவு: அருண் ஜெட்லி


மும்பையில், இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது:

வங்கிகளின் பிரச்னைகளுக்கு எத்தகைய தீர்வு தேவைப்பட்டாலும், அதை அரசு வழங்கும். வங்கி துறை, 'பேசல் - 3' விதிகளை பின்பற்ற, தேவையான நிதியாதாரங்கள் உருவாக்கபடும். வங்கி துறைக்கு, அரசு ஆதரவு தொடரும். ஜி.எஸ்.டி., அமலாக்கம், முதற்கட்டத்தில் எதிர்பார்த்ததை விட, சுமுகமாக நடந்தது. ஏராளமானோர், தற்போது வரி வரம்பிற்குள் வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201718:57:18 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்50,000 கோடி.. பெருக்கல் 45% எவ்வளவு? இது நம்ம இரட்டை தலை கும்பலின் மைண்டு வாய்ஸ்.. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கோடி தருவாங்க? இங்கேயும் ஊக்கு விக்கணுமுல்லெ? அது நிம்மி கிட்டே தான் கேக்கணும்.. தமிழ்நாட்டுக்கு பவர் ஏஜென்ட் அந்தம்மா தான்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201718:50:58 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கத்தை தடுக்க மோசடி அரசு ஊக்கு விக்க போறங்களாம். கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-செப்-201713:41:45 IST Report Abuse

Kasimani Baskaran"பெட்ரோல் மூலம் அதிகப்படியான வரி மூலம்" - மத்திய அரசின் வரிக்கு இணையாக ஒவ்வொரு மாநில அரசும் வரி வசூல் செய்கிறது.. பிறகு எப்படி விலை குறையும்... பல லட்சம் கோடிகளை போட்டுத்தான் இராணுவத்தை, தளவாடங்களை மேம்படுத்த முடியும்... கட்டமைப்புக்கள் இல்லாத பொருளாதாரம் இல்லை... அதுமட்டுமல்ல இலவசத்தில் திளைக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு கொடுக்க பணமும் வேண்டும்...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201718:44:14 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பல லட்சம் கோடிகளை போட்டுத்தான் இராணுவத்தை, தளவாடங்களை மேம்படுத்த முடியும்... ஆமால்லே..? அப்புறம் எப்படி புசுக், புசுக்குன்னு உள்ளே வந்து இராணுவ வீரர்களை சுட்டுட்டு ஓடமுடியுது.? சும்மா வாயிலே வடை சுடுறதாலேயா? அந்த பல லட்சம் கோடி எங்கே போகுதுன்னு தெரியலே....

Rate this:
R chandar - chennai,இந்தியா
23-செப்-201713:27:51 IST Report Abuse

R chandarTo speed up the economy rules for starting business and industry should be simplified , whole india single window tem should be implemented , taxation tem and formalities for enrolment as an industry or business is very difficulty , this should be made easier.Loan for starting industry should be easier and if at all any deviation from law government should take over the industry and run.Government should not think on earning revenue only through taxation it should be ready in investing in private industry as a share holder and get share in profits. All sick industry should be taken over by government considering their assets and other aspects and make it run as profit with private industrialist partnership

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
23-செப்-201711:10:00 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)இது போன்ற போலித் திட்டங்களுக்கு பதில் பெட்ரோல் டீசல் வரியைக் குறைத்தால் பொருளாதாரம் நன்கு வளரும்

Rate this:
India - ,
23-செப்-201717:26:23 IST Report Abuse

Indiaஇப்போது வாக்கிங் போக வேண்டும் என்றாலும் பெட்ரோல் போட்டுக்கொண்டு வண்டியில் தான் செல்கிறார்கள். மீண்டும் சைக்கிள் பயன்படுத்துவது அதிகரிக்க வேண்டும். சோலார் பேட்டரியில் இயங்கும் வண்டிகள் அறிமுக படுத்த வேண்டும்....

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201718:44:48 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பெருமுதலாளிகள் பாவம் ஆச்சே.....

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
23-செப்-201710:38:24 IST Report Abuse

balakrishnanசுண்டக்கா, நாட்டை நாசமாக்கியாச்சி, இனிமேல் திட்டம் போடுவாங்க, போட்ட திட்டங்கள் எல்லாம் புஷ்வானம் ஆயிடுச்சி, 2019 இருக்கு செம ஆப்பு,

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
23-செப்-201709:54:34 IST Report Abuse

R Sanjayமத்திய பிஜேபி அரசு பற்றிய நல்ல செய்திகளாக பார்த்து பார்த்து பார்த்து பொருக்கி போடும் தினமலரே, நேற்று சொத்து தகராரில் தன வீட்டில் தானே பெட்ரோல் குண்டு போட்ட சென்னையை அடுத்த திருவேற்காடு அம்பேத்கர் தெருவை சேர்ந்த பரமானந்தம் என்கின்ற பிஜேபி பிரமுகரை பற்றி ஒரு நியூஸும் காணோம்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201718:46:00 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தன் வீட்டில் தானே குண்டை வைப்பார்கள். தன் நாட்டை தானே விற்பார்கள். அதெல்லாம் பாஜக முத்திரை....

Rate this:
Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா
23-செப்-201709:26:05 IST Report Abuse

Thulasingam Pillaiஎன்னக் கொடுமை சார் இது, இந்த கேடர்களின் ஆட்சி செய்த தவறுகளால் நாட்டின் பொருளாதாரம்,முடங்கும், மக்களும் அவஸ்தைப் படுவர், மேலும் மக்களின் வரிப்பணத்தை பொருளாதரத்தை மீட்க என்றுரைத்து முதலாளிகளுக்கு வழங்குவர். இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா?

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
23-செப்-201710:42:24 IST Report Abuse

balakrishnanஅதுக்கு தான் சார் 2019 தேர்தல் வருது, அப்போது கேட்போம், அப்போது தெரிவிப்போம் நாம் யாரென்று, நம் பலம் என்ன என்று அப்போது காண்பிப்போம், அதுவரை நம்மை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள், நம் கையில் இருக்கும் விலைமதிப்பற்ற வாக்கு சீட்டை பயன்படுத்தி இந்த காவி கூட்டத்தை விரட்டி அடிப்போம்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-செப்-201709:10:30 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇரண்டு செய்யுங்கள் இந்திய பொருளாதாரம் ஆகாசத்திற்கு பறக்கும்...ஒன்று மக்களின் வாங்கும் திறனை குறைக்க அனைவரின் ஊதியத்தை கால் மடங்கு ஆக ஆக்குங்கள்.. இரண்டு .விலைவாசியை கால் மடங்கு ஆக்குங்கள்...

Rate this:
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
23-செப்-201707:13:25 IST Report Abuse

கருப்பட்டி சுப்பையாமாத சம்பளக்காரர்களின் வெறியால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது நம் அரசாங்கம். இங்கே எத்தனையோ மளிகை கடைகள் முதல் தங்க நகை கடைகள் வரை துண்டு சீட்டில் தான் பில் போடுகிறார்கள். பல லட்சம் கோடி ரூபாய் ஒரே நாளில் உற்பத்தி ஆகிறது இந்த கருப்பு( parallel ) எகானமி என்பது தான் பெரிய சாபக்கேடு. காங்கிரஸ் ஆட்சியில் இந்த கருப்பு (parallel ) கொடிகட்டி பறந்ததால் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement