டெபிட் கார்டுகளுக்கு தடை: ஐஆர்சிடிசி மறுப்பு| Dinamalar

டெபிட் கார்டுகளுக்கு தடை: ஐஆர்சிடிசி மறுப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஐஆர்சிடிசி, கிரடிட், டெபிட், கார்டுகள், வங்கிகள்
Share this video :
டெபிட் கார்டுகளுக்கு தடை: ஐ.ஆர்.சி.டி.சி.,மறுப்பு

புதுடில்லி: ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய சில வங்கிகளின் கிரடிட், டெபிட் கார்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு ஐஆர்சிடிசி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம், ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள், அனைத்து வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினர். இதற்கு சேவை கட்டணம், பயனாளிகளின் வங்கிகணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிக்கப்பட்டபோது, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சேவை கட்டணம் 20 ரூபாயை ஐஆர்சிடிசி தள்ளுபடி செய்தது. இதில் பாதியை வங்கிகள் ஏற்க வேண்டும் என ஐஆர்சிடிசி கூறியது. இதனை ஏற்க சில வங்கிகள் மறுத்துவிட்டதால், அந்த வங்கிகளின் டெபிட், கிரடிட் கார்டுகளை ஐஆர்சிடிசி முடக்கப்பட்டவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை ஐஆர்சிடிசி மறுத்துள்ளது.


விளக்கம்:

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், டிக்கெட் முன்பதிவு செய்ய அனைத்து வங்கிகளின் டெபிட், கிரடிட் மற்றும் இண்டர்நெட் பேங்க் பயன்படுத்த தடை ஏதும் இல்லை. இதில் வரும் வருமானத்தை ரயில்வேயுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என சில வங்கிகளை கேட்டு கொண்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kailash - Chennai,இந்தியா
23-செப்-201715:10:06 IST Report Abuse
Kailash ஒவ்வொருவரும் அராஜகம் செய்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா என்று கூறி தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
podhujanam - Chennai,இந்தியா
23-செப்-201713:09:15 IST Report Abuse
podhujanam IRCTC சைட் இல் வெகு சில வங்கிகளின் டெபிட் கார்டு தவிர வேறு எந்த வங்கிகளின் டெபிட் கார்டகளை பயன் படுத்தி ரெசீர்வதின் செய்ய முடிய வில்லை. இந்த செய்திக்கு அப்புறமும் இதே நிலைதான். உ. தா SBI டெபிட் கார்டு payment option இல் இல்லவே இல்லை.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201715:07:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்"நெட் பேங்க்" இல் 28 வங்கிகள் உள்ளன, எனக்கு பிடித்தது அது தான். "சிட்டி யூனியன் பேங்க்" தான் பெஸ்ட். எந்த சேவை கட்டணமோ, வரியோ, கிஸ்தியோ, கொள்ளையோ கிடையாது. டிக்கட் பணம் மட்டுமே உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படும். டெபிட் கார்டுகளுக்கு நீங்கள் எந்த வங்கியின் சேவையையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைக்கிறேன். (ஏதாவது ஏடிஎம் சென்று பணம் எடுப்பது போல) சேவை கட்டணம் ரூ 10, சில வங்கிகள் வழியாக போனால் கூட வரியும் கட்டவேண்டும். உங்கள் விருப்பம்....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
23-செப்-201712:26:16 IST Report Abuse
Pasupathi Subbian இந்த ஐ ஆர் சி டி சி என்பது இந்திய ரயில்வேயை சார்ந்ததா? இதன் அதிகாரம் என்ன ? வசூலிக்கப்படும் சேவை கட்டணம் ரயில்வே கணக்கில் சேருகிறதா? இது ஒரு தனி அமைப்பு என்றால் இதன் வரவு செலவு கணக்கு என்ன என்பதை மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்களா? ஏற்கனவே இந்தியன் ரயில்வே நஷ்ட்டத்தில் இருக்கும்போது இதுபோன்ற அமைப்பினால் என்ன பிரயோஜனம்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201715:09:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்It is a division of Indian Railways....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.