கொசுவை ஒழிக்க நாங்கள் கடவுள் இல்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து| Dinamalar

கொசுவை ஒழிக்க நாங்கள் கடவுள் இல்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து

Added : செப் 23, 2017 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கொசு,Mosquito, சுப்ரீம் கோர்ட்,  Supreme Court, கடவுள்,  God,  மத்திய அரசு, Central Government,நீதிபதி மதன் பி லோகூர்,Judge Madan P Lokur, நீதிபதி தீபக் குப்தா ,Justice Deepak Gupta,  புதுடில்லி,New Delhi,

புதுடில்லி: கொசுவை கடவுள் மட்டுமே ஒழிக்க முடியும். இதனை செய்ய நாங்கள் கடவுள் இல்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


வழக்கு:

கொசுக்களால் ஏற்படும் நோய்களால் உலகம் முழுவதும் 725,000 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

கொசு ஒழிப்பு: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து

இந்நிலையில் தானேஷ் லஷ்தன் என்பவர், நாடு முழுதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


தள்ளுபடி:

இந்த வழக்கு, நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், நாடு முழுதும் கொசுவை அகற்ற வேண்டும் என எந்த கோர்ட்டும் உத்தரவு பிறப்பிக்கும் என நாங்கள் கருதவில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, வீட்டில் கொசு, ஈ உள்ளது. அதனை விரட்டுங்கள் எனக்கூற முடியாது. நீங்கள் கேட்பதை கடவுள் தான் செய்ய முடியும். கடவுள் மட்டும் செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல. இவ்வாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
24-செப்-201702:31:24 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> MAKKALE NAAME NAMMA SURRUPPURATHTHAI KLEENAAGA VACHCHUNDAAL POTHUME கண்டமேனிக்கு எச்சில் துப்புறது எவன் சுவர்கண்ட இடமெல்லாம் சுசுபோறது யாரு வீடில்லாத நடைபாதைவாசிகளுக்கு நடைபாதைகளே தான் கக்கூஸ் இல்லையா இருந்தால் சுத்தமாவே இறுக்கப்படாது என்று எவனையா சொன்னான், சமீபத்துல நான் கண்ட அசிங்கம் இது சொகுசா கார்லே இருந்து இறங்கினான் சுவர் ஓரத்துல சிறுநீர் கழிச்சுட்டு கார்லே ஏறிப்போயினனே இருக்கான் அவனை என்ன செய்யமுடியும்
Rate this:
Share this comment
Cancel
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201700:41:06 IST Report Abuse
வாழ்க​ பாரதம் இந்த மங்குன்னு மட சாம்பிராணி ஆட்களை அனுசரிக்கும் நம்மை அந்த கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பது திண்ணம்
Rate this:
Share this comment
Cancel
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201700:38:39 IST Report Abuse
வாழ்க​ பாரதம் திரு ராமசந்திரன் பதிவு மிக நன்று
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-செப்-201723:05:24 IST Report Abuse
Mani . V "நாங்கள் மக்களின் வரிப் பணத்தில் வசதியாக மட்டுமே வாழ விரும்பும் மனிதர்கள். கொசுவை கடவுள் மட்டுமே ஒழிக்க முடியும். இதனை செய்ய நாங்கள் கடவுள் இல்லை" என்று கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏற்கனவே அரசியல்வாதிகள் எத்தனை கோடி மக்கள் டெங்கு, காலராவில் இறந்தாலும் கவலைப்படுவதில்லை. இந்த லட்சணத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இப்படி உளறியிருப்பைதை காரணம் (கடவுளால் மட்டுமே முடியும்) காட்டி தப்பித்துக் கொள்வார்கள். மொத்தத்தில் மக்கள் மட்டுமே பாவம்.
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
23-செப்-201722:46:28 IST Report Abuse
Solvathellam Unmai இவர்களை எதித்து எழுதினா ஜெயில் தெரியுமா ? வாக்கீல்களை போராட விட்டு காரியம் சாதிப்பார்கள்... மற்றவர்கள் போராட கூடாது..
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
23-செப்-201721:59:56 IST Report Abuse
Sathish அவங்க அதுக்குக்கூட லாயக்கில்லீங்க. இதைப்போய் அவங்ககிட்டே கேட்கணுமா?
Rate this:
Share this comment
Cancel
Sankara Narayanan - Bangalore,இந்தியா
23-செப்-201721:32:34 IST Report Abuse
Sankara Narayanan சூப்பர் ராமச்சந்திரன் அருமையான கருத்து . இந்த மங்குணிகள் அதற்கு கூட (கொசு ஒழிப்பு) சரிப்பட்டு வர மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
23-செப்-201720:43:07 IST Report Abuse
Abdul rahim ஆஹா இது தெரியாம நாங்க ஆல்_அவுட் , குட்நைட்ன்னு வாங்கி காச செலவழிச்சிட்டு வாரோமே
Rate this:
Share this comment
Cancel
kuthubdeen - thiruvarur,இந்தியா
23-செப்-201720:14:49 IST Report Abuse
kuthubdeen நீதிபதிகள் கடவுள் இல்லை என்பது தெரியும் ..ஒரு முக்கியமான பிரச்சினை காரணமாத்தான் உங்களை அணுகியது ..நீங்கள் அரசுகளுக்கு முடிந்த ஆலோசனைகள் உத்தரவுகள் பிறப்பித்து இருக்க முடியுமே ,,,சுகாதார கேடு சாக்கடைகள் சுத்தம் இல்லாததே கொசு உற்பத்திக்கு முக்கிய காரணம் .மக்களே நீங்களும் முடிந்தவரை அரசுக்கு உதவுங்கள் ,,இருக்கும் இடத்தை சுத்தமா வைத்திருந்தால் போதும் ...ஒவ்வொருவரும் இந்த உறுதி எடுத்தால் நம் நாடு எங்கோ போய்டும் ,,,நடைமுறை ரொம்ப கேவலமா அல்லவா இருக்கு ...சில காரியங்கள் நம் கண்முன்னேயே நடக்கும்போது மனதில் அழுவதை தவிர என்ன செய்ய முடியுது அந்த அளவு நம் நாடு சுதந்திரமான நாடு ..குப்பையை இப்படி கொட்டாதே என்றால் அடிக்கவல்லவா வருகிறார்கள் .யாரை குறை சொல்வது என்றே புரியல ...
Rate this:
Share this comment
Cancel
23-செப்-201719:55:09 IST Report Abuse
அப்பாவி கொசுவை ஒழிக்க முடியாது சரி... .வேற என்னத்த ஒழிச்சீங்க? ஒழிக்க முடியும் உங்களால்? வாய்தா இல்லாம ஒரு கேசுல தீர்ப்பு சொல்லுவீங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை