பின்லாந்தில் மாயமான தமிழக வாலிபர் மரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பின்லாந்தில் மாயமான தமிழக வாலிபர் மரணம்

Added : செப் 23, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பின்லாந்து, தமிழக வாலிபர், ஹரிசுதன், மரணம், தூதர்

சென்னை: பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி நகரில் மாயமான, டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஹரி சுதன் என்ற தமிழக வாலிபர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்., 8ம் தேதி மாயமான அவரின் உடல், அங்குள்ள கடலில் இருந்து மீட்கப்பட்டதாக போலீசார் கூறியதாக பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதர் வாணி ராவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஹெசின்கி நகர போலீசார் கடலில் இருந்து வாலிபர் உடலை மீட்டனர். அது ஹரி சுதன் என அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஹரியின் உறவினர்களுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. உடலை தாயகம் கொண்டு செல்ல அவர்களுக்கு உரிய உதவி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஹரி சுதன் 2016ல் பணி நிமித்தமாக பின்லாந்து சென்றார். கடைசியாக கடந்த செப்டம்பர் 8ம் தேதி (வெள்ளி) தனது தாயாருடன் கடைசியாக பேசியுள்ளார். பின்னர் 2 நாளாக ஆளை காணவில்லை. திங்கட்கிழமை பணிக்கு வராவில்லை. இதனையடுத்து சக ஊழியர்கள் செப்.,10ம் தேதி தூதரகத்திற்கு தகவல் அளித்தனர். மறுநாள் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பின்லாந்தில் தமிழக வாலிபர் மரணம்

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201715:23:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் RIP. I don't think there any foul play. மகனை இழந்த குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். Time will heal, until then please hold on.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை