'தி.மு.க., குடும்ப கட்சி தான்!' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'தி.மு.க., குடும்ப கட்சி தான்!'

சென்னை, 'தி.மு.க., குடும்ப கட்சி தான்' என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'தி.மு.க.,, குடும்ப கட்சி, தான்!'

இது குறித்து, கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:உட்கட்சி தேர்தலை முறைப்படி நடத்த, தேவையான நடைமுறைகளும் துவங்கி உள்ளன. அதற்காக, புதிய உறுப்பினர்களை சேர்த்தல், புதுப்பித்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.

பல்வேறு நெருக்கடி


தி.மு.க.,வில் உறுப்பினராக சேர, 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில், உறுப்பினர் சேர்ப்பு அமைய வேண்டும். உறுப்பினர் சேர்த்தல்

மற்றும் புதுப்பித்தல், நவ., 15ல் நிறைவு பெறுகிறது. அதன்பின், கட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும்.பல்வேறு நெருக்கடிகளையும், சோதனைகளையும் எதிர்கொண்ட போதும், எவராலும் வீழ்த்த முடியாத இயக்கமாக, தி.மு.க., உயர்ந்துநிற்கிறது.

இதை ஏற்க முடியாதவர்கள், 'தி.மு.க.,வில் குடும்ப ஆதிக்கம் இருக்கிறது; குடும்பத்தினர் தான் பதவி பெறுகின்றனர்' என்கின்றனர்.'என் தாத்தா, அப்பா, நான்' எனக்கூறி, குடும்பம் குடும்பமாக, கட்சியில் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர். அந்த வகையில், இது குடும்ப கட்சி தான். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விசாரணை தேவைசென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி:ஜெ., மரணம் குறித்து, முறையான விசாரணை வேண்டும் என, நாங்கள் கூறி வருகிறோம். தற்போது, குதிரைபேர ஆட்சி நடத்தும் பழனிசாமி, 'விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்றார்.

அவருடன் கைகோர்த்துள்ள, துணை முதல்வர் பன்னீர்செல்வம், 'சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, கேட்டார். ஆனால், விசாரணை கமிஷன்

Advertisement

அமைக்கப்படும் என கூறினரே தவிர, எந்த நீதிபதி விசாரிப்பார்என, தெளிவான அறிவிப்பு இல்லை. ஏன் இன்னும் விசாரணையை துவக்கவில்லை என்றும் புரியவில்லை. முழுமையான விசாரணை நடந்தால் தான், உண்மை நிலை தெரிய வரும்.

சட்டசபையில், 'குட்கா'வை ஆதாரத்தோடு காண்பித்த பின் தான், தமிழகம் முழுவதும் சோதனை நடத்துகின்றனர். 'டி.ஜி.பி.,க்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் மாமூல் கொடுக்கப்படுகிறது' என, ஆதாரங்களோடு வருமான வரித்துறை கூறியுள்ளது. தமிழகத்தில், சட்டம் -ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
24-செப்-201718:42:58 IST Report Abuse

Tamilselvanவெக்கம், மானம் சூடு சொரணை இல்லாமல் சுடலை குடும்ப கட்சி என்று சொல்லுவதை பாருங்கள். ரத்தத்தை கொடுத்து,உழைத்த தொண்டர்கள் இளித்தவாயர்களா ? peraasriyar, துரை முருகன் போன்ற தலைவர்கள் தங்கள் வாழ்கையையே கட்சிக்காக அர்பணித்தார்களே அவர்கள் எல்லாம் இளிச்ச வாயர்களா ? சுடலை தனது சுயநலத்தை மாற்றாவிட்டால்,கட்சிக்கு விமோச்சனம் கிடையாது.

Rate this:
RajChn -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-201718:31:25 IST Report Abuse

RajChnWhat plan do you have to repay TN loan of Five Lakhs crores which was availed by both DMK and JJ Govt. Release a detailed plan for your 5 year rule. Dr.Anbumani is the only leader vision for development of TN. Criticism politics no more. Constructive politics only win youths votes. Gone are the days where glamour played major role.

Rate this:
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201718:16:14 IST Report Abuse

SK2011வெட்டி பேச்சு பேசாதீங்க .. நீங்க இப்போ ஆட்சியில் இல்லை. அடக்கி வாசிங்க.

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)