நாங்கள் சொன்னதெல்லாம் பொய் மன்னிச்சிருங்க Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மன்னிச்சிருங்க
நாங்கள் சொன்னதெல்லாம் பொய்
ஜெ., வை யாருமே பார்க்கவில்லை
இது வேற வாய் என்கிறார் மந்திரி

மதுரை:முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்து, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ''ஜெ., சிகிச்சை பெற்ற போது யாருமே பார்க்கவில்லை; இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என சொன்னதெல்லாம் பொய்,'' எனக்கூறி பகிரங்க மன்னிப்பு கேட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா,late Chief Minister Jayalalithaa, விசாரணை கமிஷன், Commission of Inquiry,தமிழக அரசு , Tamilnadu Government,அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், Minister Dindigul Srinivasan,சிகிச்சை, treatment,தினகரன், Dinakaran, அ.தி.மு.க., AIADMK, பொதுக்கூட்டம்,general meeting, மருத்துவமனை,hospital, பா.ஜ தலைவர் அமித்ஷா,BJP leader Amit Shah, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, Union Minister Arun Jaitley, வெங்கையா நாயுடு, Venkaiah Naidu, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் , congress Vice-president Rahul,அப்போலோ மருத்துவமனை, Apollo Hospital, சசிகலா, Sasikala, மதுரை, Madurai,

மேலும், ''ஜெ., சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோ காட்சிகள் உள்ளதாக தினகரன் தரப்பினர்கூறுகின்றனர். அதை வெளியிட வேண்டியதுதானே. வெளியிட்டால் அனைவருக்கும் சந்தேகம் தீரும்,'' என சவால் விடுத்தார்.

மதுரையில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம், நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:எங்கள் தெய்வத்திற்கு (ஜெ.,) நோய்க்கு மருந்து கொடுக்காமல் மருத்துவமனையில் சேர்த்தனர். உங்க எல்லோர்கிட்டேயும் பெரிய மன்னிப்பு கேட்டுக்கிறோம். எல்லோரும் எங்கள மன்னிச்சுக்கங்க. நாங்கள் பல செய்திகளை,

நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, 'ஜெ., இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்கன்னு' ஏதோ ஒண்ணு சொல்லி இருப்போம்.ஆனால் உண்மையிலேயே நாங்க யாருமே பார்க்கவில்லை. அப்போது நாங்கள் உங்களிடம் பொய் சொல்லி விட்டோம்.

அது வடிவேலு வாய்... அது வேற வாய். இது வேற வாய்னு வச்சுக்கோங்க! அவன் பார்த்தான், இவன் பார்த்தானு' சொன்னது எல்லாம் பொய். ஏன்னா... கட்சியின் ரகசியம் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்றைக்கு பொய்களை சொன்னோம்.

அன்றையசூழ்நிலை அப்படி. பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, காங்., துணைத்தலைவர் ராகுல் உட்பட எல்லோரும் ஜெ.,வை பார்க்க வந்தாங்க. அப்போலோ மருத்துவமனையில், நிர்வாகி பிரதாப் ரெட்டி அறையில் உட்கார்ந்து விசாரிப்பாங்க. நாங்களும் சுத்தி உட்கார்ந்துட்டு இருப்போம். 'ஜெ., நல்லா இருக்காங்க'னு சொல்வாங்க.

சசிகலா ஒருத்தர் மட்டும்தான் உள்ளே போவாங்க. கவர்னர், தி.மு.க., தலைவர்கள் எல்லோரும் வந்தாங்க. யாருக்கும் அனுமதி இல்லை. மாடி வரைதான் அனுமதி. அங்குள்ள சேர்ல உட்கார்ந்திட்டு வந்திட வேண்டியதுதான். கேட்டா... ஜெ.,வுக்கு தொற்றுநோய்னு சொன்னாங்க. யாரும் ஜெ.,வை பார்க்கலை. அப்படி யாராச்சும் பார்த்ததா சொன்னா, அழைச்சிட்டு வாங்க விசாரிப்போம்.
ஜெ., இறப்பு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. வீடியோ எல்லாம் இருக்குனு அவர்கள் (சசிகலா தரப்பு) சொல்றாங்க. முதல்ல

Advertisement

காண்பிங்க.எங்களுக்கு தெரிந்தது எல்லோருக்கும் தெரியட்டும். பதில் சொல்ல வேண்டியவர்கள் டாக்டர்களும், நீங்களும்தான்.

சிகிச்சை பெற்ற போதுயாராச்சும் பார்த்துட்டா, என்ன நடக்குது, என்ன நடந்ததுனு, தான் எப்படி கொல்லப்படுகிறோம் என ஜெ., சொல்லி விடுவார் என பயந்தே அவரை யாரும்பார்க்க அனுமதிக்க வில்லை. ஜெ., இறந்தபிறகு, அமைச்சர்களான எங்களை அழைத்தார்கள். ஜெ., தலைக்கு அடியில் தலையணையை ஊழியர்கள் வைத்து கொண்டிருந்தது போன்றவற்றை பார்த்தோம்.

இதை, 75 நாட்களுக்கு முன்பே காட்டி
இருந்தால், பேசியிருந்தால் எல்லா விஷயமும் தெரிந்திருக்குமே.இவ்வாறு பேசினார்.ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆக உள்ள நிலையில் , அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து இன்னும் மர்மம் நீடிக்கிறது.

அமைச்சர்கள் எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் ஜெ., வை பார்த்ததாக கூறிவந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு, மற்ற அமைச்சர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, ''யாரும் பார்க்கவில்லை,'' என சத்தியம் செய்யும் அமைச்சர் சீனிவாசன், சசிகலா அணியில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சியில்,'ஜெ.,வை அமைச்சர்கள் மருத்துவமனையில் பார்த் தோம்,'' என சத்தியம் செய்தார். தற்போது அதேசமயம், இந்த பேச்சு சசிகலா தரப்பினருக்குதான் பின்னடவை ஏற்படுத்தும் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (59)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
karthi - chennai,இந்தியா
24-செப்-201723:21:36 IST Report Abuse

karthiசி.ஆர். சரஸ்வதி சொல்லியதுதான் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. என்ன ஒரு நடிப்பு? மக்கள் எந்த அளவுக்கு இவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்? ஜெயலலிதா மீது அளப்பரிய பாசத்தை வைத்திருந்த மக்களை ஏமாற்றிய இவர்களுக்கு தண்டனை எதுவும் கிடையாதா?

Rate this:
skandh - chennai,இந்தியா
24-செப்-201721:38:41 IST Report Abuse

skandhநீங்க சொன்னது இதெல்லாம் போய் ,இதெல்லாம் மெய் .

Rate this:
karthi - chennai,இந்தியா
24-செப்-201721:37:46 IST Report Abuse

karthiHow C.R.Saraswathi has told that 'Amma took Idli,. Amma took Idiappam, Amma discussing with officials' etc., It means, she has fooled the people of Tamilnadu. Any action would be taken against her? How daringly she was bluffing.

Rate this:
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
24-செப்-201721:01:00 IST Report Abuse

மு. செந்தமிழன்எரும மாடு மேய்க்க கூட லாயக்கு இல்ல நீங்களாம் எப்படிப்பா மந்திரி ஆனீங்க.

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
24-செப்-201720:35:32 IST Report Abuse

Needhiyin Pakkam Nil உங்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த அம்மாவிற்கு துரோகம் செய்து விட்டீர்களே துரோகிகளே, நீங்கள் மக்களுக்கு மட்டும் என்ன செய்ய போகிறீர்கள் துரோகம் தான் செய்வீர்கள் பஹ்தவிக்காக, இந்த காரியத்தை சசி மட்டும் செய்திருந்தால் இப்போது பன்னீரும் பழனியும் சேர்ந்து சசியை கட்டம் கட்டி இருப்பார்கள் உண்மையும் வெளியில் வந்திருக்கும், ஆனால் இதில் ஏதோ பெரிய தலைகள் எல்லாம் சம்பந்தம் பட்டிப்பது போல தெரிகிறது அதனால தான் எல்லோரும் சாருக்கு தண்ணி கொடு, சாருக்கு தண்ணி கொடு, என்று சொல்கிறார்களே தவிர யாரும் அம்மாவின் மரணத்தை விசாரிக்க போவதாக தெரியவில்லை.........

Rate this:
jayvee - chennai,இந்தியா
24-செப்-201718:38:16 IST Report Abuse

jayveeதொத்து நோய் அந்த தி மு கவின் ஏஜெண்டுக்கு வராதா? .. ஒரு பாப்பாத்தி செத்தான்னு தி மு க சந்தோஷப்பட்டது.. சொத்து, ஆட்சி, அதிகாரம், கட்சி எல்லாம் நமக்குத்தான் சந்தோஷப்பட்டது ஓர் திருட்டு கும்பல்.. மிச்சம் கிடைச்ச எச்சம் இருந்தாலும் திம்போன்னு கிடந்தது இந்த கும்பல் .. என்ன நடக்குதுன்னு தெரியாமயே செத்தா வடை பாயசத்தோட கறி சோறு போடுவாங்கன்னு அலைஞ்சது மிச்ச எதிர் கட்சி கூட்டம். இது தான் உண்மையில நடந்தது..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24-செப்-201717:44:38 IST Report Abuse

Endrum Indianகூமுட்டைகளா? நீங்க இப்ப என்ன சொன்னாலும் அது பொய்யா மெய்யான்னு தினம் தினம் எங்களுக்கு மெர்சலாக இருக்கு?? நீங்க போ ஏன் பொய் சொன்னீங்க? யார் சொல்ல சொன்னது? சசியா? அப்போ பயம் இருந்தது, இப்போ விட்டுப்போச்சா?

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
24-செப்-201717:05:09 IST Report Abuse

N.Kaliraj அட போங்க நீங்கவேற.. சொன்னது பொய்த்தாங்க...... கழுவிலா ஏற்றப்போகிறீர்கள்...

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
24-செப்-201715:56:17 IST Report Abuse

Indhuindianபீலா விட்ட டாக்டர் பீலே அறிக்கைவிட்ட Apollo டாக்டர்கள் AIIMS டாக்டர்கள் அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள். அரசு சார்பில் பிரஸ் மீட் வைத்த அம்மாவுக்கு வைத்தியமே பார்க்காத டாக்டர்கள் சொன்னதெல்லாம் பொய்யா உண்மையா?

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
24-செப்-201715:37:09 IST Report Abuse

IndhuindianMaut Ka Saudagar என்று Sonia சொன்னது இவர்களைத்தானோ என்னவோ

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement