'மக்களின் கருத்தை பிரதிபலிக்கவே மன் கீ பாத் நிகழ்ச்சி' Dinamalar
பதிவு செய்த நாள் :
'மக்களின் கருத்தை
பிரதிபலிக்கவே மன் கீ பாத் நிகழ்ச்சி'

புதுடில்லி:''மக்களின் கருத்துக்களை, விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையிலேயே, 'மன் கீ பாத்' ரேடியோ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 'மக்களின் கருத்தை ,பிரதிபலிக்கவே,மன் கீ பாத், நிகழ்ச்சி'

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், 'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார். 2014, அக்., 2ல் துவக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ளது. தன் கருத்துக்களை சொல்வதற்காகவே, மோடி, இந்த ரேடியோ நிகழ்ச்சியை நடத்துவதாக, சில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

அதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று ஒலிபரப்பான, 36வது, மன் கீ பாத் நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது:மன் கீ பாத் எனப்படும் மனதில் குரல் என்ற இந்த நிகழ்ச்சியை, என் மனதின் குரல் என இதுவரை கூறியதும் இல்லை; என் சொந்தக் கருத்துக்களை சொல்வதற்காகவும் இதை பயன்படுத்தவில்லை.

மக்களின் கருத்துக்களை, அவர்களது எதிர்பார்ப்புகள், விருப்பங்களை, குறைகளை, எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மக்களின் குரலாகவே இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இணையதளம், மொபைல் ஆப், இ - மெயில்

என, பல்வேறு வழிகளில், மக்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதையே, இந்த நிகழ்ச்சியின் மூலம் மற்றவர்களுக்கு தெரிவித்து வருகிறேன்.இதுவரை நடந்துள்ள, 36 நிகழ்ச்சிகளை குறித்து, சமூக விஞ்ஞானிகள், பல்கலைகள், ஆராய்ச்சியாளர்கள், ஊடக நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகளின் நிறை, குறைகளை தெரிவியுங்கள். அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு, அது உதவியாக இருக்கும். இந்த நிகழ்ச்சி குறித்து, மக்கள் தெரிவிக்கும் கருத்துகளில் இருந்து, என்னென்ன பிரச்னைகள் உள்ளன, அதற்கு எப்படிதீர்வு காண்பது என்பதை திட்டமிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசியலுக்கு அப்பாற்றபட்ட திட்டங்களே வெற்றி பெறும் என்று சுதந்திர போராட்டத் தியாகி ஆச்சாரியா வினோபா பாவே கூறினார். அதன்படியே, மக்களை முன்னிறுத்தி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்; இதில் எந்த அரசியலும் இல்லை.வீண் அரசியல் கோப, தாபங்களுக்கு ஆளாகாமல் இருக்க, மக்களுடன் இணைந்திருக்க விரும்புகிறேன். அதற்கான ஒரு முயற்சிதான் இந்த நிகழ்ச்சி.இவ்வாறு அவர் பேசினார்.

தலைவர்களுக்கு மரியாதை


நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:

மஹாத்மா காந்தி, சர்தார் படேல், லால் பகதுார் சாஸ்திரி, ஜெய் பிரகாஷ் நாராயண், நானாஜி தேஸ்முக் ஆகியோர் பிறந்த தினம், வரும் அக்டோபரில் வருகிறது. செப்., 25, தீனதயாள் உபாத்யாய் பிறந்த நாள். இந்தத் தலைவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, நாட்டுக்காக உழைப்பதற்கே தாங்கள் பிறந்துள்ளோம் என்று நினைத்ததுடன், அதை செய்தும் காட்டினர்.

அவர்களைப் போலவே, நாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர், முன்னாள்

Advertisement

ஜனாதிபதி அப்துல் கலாம். அவர்களை நாம் போற்ற வேண்டும். இதுபோன்ற தலைவர்கள் மற்றும் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், 2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

துாய்மைக்கு மரியாதை:


ரேடியோ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:கடந்த ரேடியோ உரையின் போது, மஹாத்மா காந்தி பிறந்த தினமான, அக்., 2க்கு, 15 நாட்களுக்கு முன், துாய்மையே சேவை என்ற இயக்கம் துவக்கப்படும் என்றேன்; அதற்காக மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றேன்.

ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், இந்த உறுதிமொழியை துவக்கி வைத்தார்.நாடு முழுவதும் துாய்மை இயக்கம் வேகமெடுத்து உள்ளது. பொது இடத்தை துாய்மையாக வைத்திருப்போம் என்ற மனமாற்றம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்த, பிலால் தர் என்ற சிறுவன், ஏரியில் வீசப்படும் காலி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து, அதை விற்று சம்பாதித்து வந்தார்.

ஐந்து ஆண்டுகளாக இந்த பெரிய துாய்மை சேவையில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர், துாய்மை இயக்கத்தின் துாதராக நியமிக்க பட்டுள்ளார். ராணுவத்தில் பணியாற்றி உயிரைத் தியாகம் செய்த கலோனல், சந்தோஷ் மோகாதிக்கின் மனைவி ஸ்வாதி மோகாதிக், நாயக் முகேஷ் துபேயின் மனைவி நிதி துபே ஆகியோர், ராணுவ பயிற்சியை முடித்து,ராணுவத்தில் இணைந்துள்ளனர். இந்த வீர மங்கையர், மற்றவர்களுக்கு மிகப்பெரிய முன் உதாரணமாக உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
25-செப்-201719:03:59 IST Report Abuse

g.s,rajanமுகமது பின் துக்ளக்கை பிரதிபலிக்கிறார் பிரதமர் மோடிஜி சோவின் அந்த நாடகத்தை ,படத்தை பார்க்காதவர்கள் தயவு செய்து பார்க்கவும், பார்த்தவர்கள் மீண்டும் பார்த்துப் பரவசம் அடையுங்கள் இதை தவிர துக்ளக்கை ,மோடிஜியோடு ஒப்பிடவும்,பிரமித்துப் போவார்கள் எல்லாரும் ,இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமை நாட்டு மக்களே தயவு செய்து பதூதாவைக் கல்லால் அடிக்காதீர்கள் ..பதூதாவைக் கல்லால் அடிக்காதீர்கள்- துக்ளக் > ஜி.எஸ்.ராஜன் சென்னை .

Rate this:
kuthubdeen - thiruvarur,இந்தியா
25-செப்-201718:22:56 IST Report Abuse

kuthubdeenபேச்சில் உள்ள உண்மை செயலிலும் இருக்கணும் ...இவரின் பேச்சுக்கள் எதுமே யாராலும் குறை சொல்ல முடியாதபடி நன்றாக திட்டமிட்ட ஒரு சிறந்த சொற்பொழிவா இருப்பதை மறுக்கவே முடியாது .,,கருப்பு பணம் லஞ்சம் சுகாதாரம் வளர்ச்சி இப்படி யாரும் குறை கண்டு பிடிக்க முடியாத நிபுணத்துவம் வாய்ந்த உரை ....காதி பொருட்களை பற்றி காந்தி சொன்னால் மக்கள் எதிர்த்து கருத்து சொல்லி இருக்க மாட்டார்கள் ...15 லட்சம் பெறும் கோட்டை விரும்பி அணிபவர் அடுத்தவரை கதர் உடுத்து என்பதே பிரச்சினை .,,சொல்லையும் செயலையும் மக்கள் கவனிப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்டால் சரிதான் .

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
25-செப்-201717:17:44 IST Report Abuse

Aarkayயாராவது பார்க்கிறார்களா?

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)