பதவி பறிபோன தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்...தூது! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரன், Dinakaran, எம்.எல்.ஏ.,MLA, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சசிகலா ,Sasikala, கவர்னர் வித்யாசாகர் ராவ் , Governor Vidyasagar Rao, சபாநாயகர் தனபால், Speaker Dhanapal, ஜக்கையன், Jagayan,சென்னை உயர் நீதிமன்றம், Chennai High Court, நீதிபதி துரைசாமி, Judge Duraiasamy,சட்டசபை, Assembly,நம்பிக்கை ஓட்டெடுப்பு,Trust Vote, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,Former Minister Senthil Balaji,முன்னாள் அமைச்சர் பழனியப்பன் , former Minister Palaniappan,

பதவி பறிபோன தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், 'எங்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்; பெரிய பதவிகள் வேண்டாம்; கட்சியில் அங்கீகாரம் தந்தால் போதும்' என, முதல்வர் பழனிசாமிக்கு, துாது அனுப்பி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனால், தங்களின் அரசியல் எதிர்காலம் நாசமாகி விட்டதாகவும் புலம்பி உள்ளனர்.

தினகரன், Dinakaran, எம்.எல்.ஏ.,MLA, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சசிகலா ,Sasikala, கவர்னர் வித்யாசாகர் ராவ் , Governor Vidyasagar Rao, சபாநாயகர் தனபால், Speaker Dhanapal, ஜக்கையன், Jagayan,சென்னை உயர் நீதிமன்றம், Chennai High Court, நீதிபதி துரைசாமி, Judge Duraiasamy,சட்டசபை, Assembly,நம்பிக்கை ஓட்டெடுப்பு,Trust Vote, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,Former Minister Senthil Balaji,முன்னாள் அமைச்சர் பழனியப்பன் , former Minister Palaniappan,

முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் அணியைச் சேர்ந்த, 19
எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது, கட்சி தாவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா பரிந்துரை செய்தார்.

'நோட்டீஸ்'


விளக்கம் கோரி, 19 எம்.எல்.ஏ.,க்களுக்கும் சபாநாயகர், மூன்று முறை, 'நோட்டீஸ்' அனுப்பினார். இதில், ஜக்கையன் தவிர மற்ற, 18 பேரும் விளக்கம் அளிக்காததால், அவர்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார். இது, அரசிதழிலும் வெளியானதால், அவர்கள், 'மாஜி'க்கள் ஆகி உள்ளனர்.இந்த உத்தரவை எதிர்த்து, 18 பேரும்,

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, 'எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது.

'மறு உத்தரவு வரும் வரை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது; தேர்தல் குறித்த அறிவிப்பையும் வெளியிடக் கூடாது' என, உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை, அக்., 4க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தினகரன் அணியைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்
பாலாஜி மீது, வருமான வரித்துறை மற்றும் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்டோரில், ஏழு எம்.எல்.ஏ.,க்கள், 'எங்களை காப்பாற்றுங்கள்; நாங்கள் உங்களிடம் சரணடைகிறோம்' என, முதல்வர் பழனிசாமிக்கு, துாது அனுப்பி உள்ள தகவல் கசிந்துள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:


தினகரன் அணியைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோரை கைது செய்ய, ஆளுங்கட்சி தரப்பில் தீவிரம் காட்டப்படுகிறது.

தொழில் பாதிப்பு


மேலும், அவர்களின் ஆதரவாளர்கள், அபிமானிகளுக்கு நெருக்கடி தரும் வகையில்,

Advertisement

அவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் மீது அதிரடி சோதனைகள்நடத்தப்படுவதால், தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.அடுத்த கட்டமாக, தங்கள் மீது நடவடிக்கை பாயுமோ என, எம்.எல்.ஏ.,பதவியை இழந்த பலர், கலக்கம் அடைந்துள்ளனர்.

எனவே, தங்களின் தொழில்களை பாதுகாக்கும் வகையில், ஏழு பேர், முதல்வர் பழனிசாமிக்கு, நெருக்கமானவர்கள் வழியாக, துாது அனுப்பி உள்ளனர்.'தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், முதல்வர் பழனிசாமி அரசையே ஆதரிப்போம்; ஒரு வேளை எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், கட்சியில், முதல்வர் பழனிசாமி கரத்தை வலுப்படுத்துவோம். 'எங்களுக்கு பெரிய பதவிகள் ஏதும் வேண்டாம்; கட்சியில் அங்கீகாரம் கிடைத்தால் போதும்' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சசிகலா மற்றும் தினகரனால் தங்களின் அரசியல் எதிர்காலம் நாசமாகி விட்டது என்றும், புலம்பியுள்ளனர்.அத்துடன், 'முதல்வர் விரும்பினால், தினகரன் அணியில் இருந்த படி, 'ஸ்லீப்பர் செல்' எனப்படும், ரகசிய குழுவாக செயல்பட தயார்' என்றும் கூறியுள்ளனர். இந்த தகவல், முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில், வேறு எந்த முடிவும் இனி எடுக்க முடியாது. கட்சியில் சேர்ப்பது குறித்து, விவாதித்து முடிவு செய்யலாம்' என, முதல்வர் பதில் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (50)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
25-செப்-201719:04:58 IST Report Abuse

Mahendran TCஉள்ளதும் போச்சே நொள்ளக்கண்ணா கதைதான் இந்த 18 அடிமைகளின் இன்றைய நிலைமை

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
25-செப்-201718:22:42 IST Report Abuse

Jeeva சசிகலா குடும்பம் தான் ஜெ மறைவிற்கு காரணம் . அதை அரசாங்கம் விரைந்து செயல்பட்டு தண்டனை வாங்கி தர வேண்டும் .

Rate this:
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-201718:19:30 IST Report Abuse

Muthuஅடப்பாவிகளா துரோகிகளை உங்கள் கட்சியில் பாத்துட்டோம் ..ஆனா இப்போ பச்சை துரோகிகளையும் பாக்க வச்சுட்டீங்களே ...அதுவும் ஸ்லீப்பர் செல் ரேஞ்சுக்கு ..த்து உங்களை நினச்சா எம் ஜி ஆர் ..ஜெயா மேலேயே கோவம் வருதுப்பா..வெளி நாட்டுல தமிழன்னு சொன்னாலே கேவலமா பாக்குறாங்க

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)