ஜெ., இறந்தது எப்படி: சி.பி.ஐ., விசாரணை? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., இறந்தது எப்படி: சி.பி.ஐ., விசாரணை?

சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில், 'மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

ஜெ., இறந்தது எப்படி: சி.பி.ஐ., விசாரணை?

ஜெ., மரணம் தொடர்பாக, பல்வேறு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், 'ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும்' என,

முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி, ஒரு மாதமாகியும், இன்னும் விசாரணை நடத்த, நீதிபதி நியமிக்க படவில்லை.

இந்நிலையில், பொதுகூட்டத்தில்
பேசிய அமைச்சர் சீனிவாசன், 'ஜெ., மரணத்திற்கு, சசிகலா தான் காரணம்; மருத்துவமனையில் இருந்த போது, 'அவர் இட்லி சாப்பிட்டார் என, பொய் கூறியதற்காக மன்னிப்பு கேட்கிறேன்' என்றார். இது,பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பதில் அளித்த, தினகரன், 'ஜெ.,க்கு அளிக்கப் பட்ட சிகிச்சை தொடர்பான, வீடியோ படங்களை வெளியிட தயார்' என்றார். 'அந்த வீடியோ வைத்து பூஜையா செய்கிறீர்கள்,.. உடனே வெளியிடுங்கள்' என, சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம்

Advertisement

தெரிவித்துள்ளார்.அமைச்சர்களே இப்படி பேச துவங்கி உள்ளதால், 'ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து, உடனே, விசாரணையை துவக்க வேண்டும்' என்றும், 'சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்' என்றும், தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது குறித்து, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:முதல்வராக இருந்த ஜெ.,சிகிச்சைக்கு, மத்திய அரசும் உதவி இருக்கிறது. அந்த வகையில், அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை வெளிக்கொணர வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.ஆகவே, தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உடனே, சி.பி.ஐ., விசாரணைக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தை, சி.பி.ஐ., விசாரிக்க வாய்ப்பு உள்ளது என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
25-செப்-201718:55:50 IST Report Abuse

Mahendran TCசுடலையும் தினம் ஒரு அறிக்கை விடுறார் , குட்டிக்கரணம் அடிச்சிப்பார்க்கிறார் , ஆனால் ரிசல்ட் என்னவோ பூஜ்ஜியம்தான் ......

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
25-செப்-201718:25:18 IST Report Abuse

GB.ரிஸ்வான் புலம்பல்

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
25-செப்-201718:23:16 IST Report Abuse

Jeeva ஜெ அவர்களின் இறப்பிற்கு காரணமான சசிகலா போன்றவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் .

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)