'எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்' ஜெ., மரணத்தில் அமைச்சர் 'அடம்' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்'
ஜெ., மரணத்தில் அமைச்சர் 'அடம்'

திண்டுக்கல்:''ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் உண்மை தெரிந்தாக வேண்டும்,'' என அமைச்சர் சீனிவாசன் கூறினார்.

 அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ,Minister Dindigul Srinivasan,  ஜெயலலிதா,Jayalalitha, மருத்துவமனை,Hospital, சசிகலா, Sasikala, சி.பி.ஐ விசாரணை, CBI investigation,ஜெயலலிதா சிகிச்சை, Jayalalitha treatment, கண்காணிப்பு கேமரா, Surveillance Camera, விசாரணை கமிஷன்,Investigation Commission, அ.தி.மு.க.,AIADMK, ராஜ்யசபா, Rajya Sabha, எம்.பி வைத்திலிங்கம் ,MP Vaithilingam,இரட்டை இலை, irattai ilai, லோக்சபா, Loksapa, தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம் ,Tamilnadu Law Minister Shanmugam, தினகரன் ,Dinakaran, திண்டுக்கல்,Dindigul,

திண்டுக்கல்லில் நேற்று அவர் கூறியதாவது: ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, சசிகலா குடும்பத்தினர் தான், உள்ளே சென்று அவரை பார்த்து வந்தனர். 'இட்லி சாப்பிட்டாங்க, காபி சாப்பிட்டாங்க, சுவீட் கொடுத்தாங்க' என, தெரிவித்தனர்.

அதை நாங்கள் மக்களிடம் தெரிவித்தோம்.
அப்பல்லோ மருத்துவமனையில் தான்

கண்காணிப்பு கேமரா இருந்தது. ஜெ., சிகிச்சையில் இருந்த வீடியோ குறித்து, மருத்துவமனை நிர்வாகம் தான் விளக்க
வேண்டும். ஜெ.,யை யாரும் பார்க்க விடாமல் செய்த மர்மம் என்ன என்பது தான் எங்களின் கேள்வி. அதற்கு பதில் சொல்லாமல் எதை,
எதையோ பேசுகின்றனர். எனக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும்.

ஜெ., மரணம் குறித்து, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், வெளியில் இதை பற்றி பேசக்கூடாது. அமைச்சரான நான், சி.பி.ஐ., விசாரணை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

ஜெ., சிகிச்சை ஆதாரம்: தினகரனுக்கு வைத்தி சவால்


''ஜெ., சிகிச்சை வீடியோ ஆதாரத்தை தினகரன் வெளியிட வேண்டும்,'' என, அ.தி.மு.க., ராஜ்யசபா,

Advertisement

எம்.பி., வைத்திலிங்கம் தெரிவித்தார். தஞ்சையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை,தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். இன்னும், 15 நாளில் இரட்டை இலை சின்னத்தை மீட்டு, உண்மையான, அ.தி.மு.க., நாங்கள் தான் என, நிரூபிப்போம்.

உள்ளாட்சி, லோக்சபா என, எந்த தேர்தலாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா பெற்றதை விட, அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த வீடியோ ஆதாரம் இருந்தால், தினகரன் வெளியிடலாம். அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரத்தில் நேற்று, தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டியில்,
''அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் குறித்து, நீதிமன்றத்தில், அக்., 6ல், விசாரணை நடக்கிறது. இரட்டை இலை சின்னத்தை மீட்டு, நாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என, மக்கள் மத்தியில் நிரூபிப்போம்,'' என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (35)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
bairava - madurai,இந்தியா
26-செப்-201700:27:24 IST Report Abuse

bairava அம்மாவே போய்ட்டாங்க நீயெல்லாம் இருந்தென்ன இல்லாட்டி என்ன ?? போங்கடா ..போங்க பேரன் பேத்திகளுக்கு புண்ணியம் சேருங்க செஞ்ச பாவமெல்லாம் சும்மாவிடாது நடராஜன் நிலைமை தான் எல்லாருக்கும் அம்மா வைராக்கியகார பொம்பள உனகளையெல்லாம் சும்மாவிடாது

Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
25-செப்-201718:03:53 IST Report Abuse

Varun Ramesh'மேஜையை தட்டாதீர்கள்', என்று அம்மா பேசிய போது அதற்கும் சேர்த்து மேஜையை தட்டினீர்கள் அப்போலோவில் அம்மா, 'இட்லி சாப்பிட்டாங்க, காபி சாப்பிட்டாங்க, சுவீட் கொடுத்தாங்க' என சசி வந்து சொன்ன போது, தட்டுவதற்கு மேஜை இல்லாததால், 'அம்மா நலமுடன் இருக்கிறார்கள்' என்று பேசினீர்கள். இன்று உங்களுக்குள்ளேயே பிரிவினை வந்ததும், 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்', என்று வீராசாமியாய் கேட்கிறீர்கள் சீனிவாசன்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
25-செப்-201717:10:57 IST Report Abuse

Endrum Indianஏப்பு இந்த 365 நாள் தூங்கிக் கொண்டிருத்தாயா??? இவ்வளுவு நாள் இட்லி சாப்பிட்டார், சேடிகளோடு விளையாடினார் என்றெல்லாம் கதை விட்டப்போ? யாரு?? நீங்க தானே???? இந்த அண்டமகா ஆகாசப்புளுகு கதை விட்டப்போ நல்லா இருந்ததா????

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
25-செப்-201715:45:06 IST Report Abuse

ilicha vaay vivasaayi (sundararajan)நடராச ஐயா படுத்த படுக்கையா இருக்காவ .சசி அம்மா பரோலில் வந்தாலும் வரும் . கூனர்களும் , டயர் வணங்கிகளும் என்ன செய்யப் போறாக

Rate this:
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
25-செப்-201715:11:38 IST Report Abuse

Selvam Pillaiஇந்த வைத்தி தேர்தலில் நின்று ஜெயா இருந்த போதே மக்களால் நிராகரிக்க பட்டு தூக்கி எரிய பட்டவர். அம்மா காலில் விழுந்து இந்த எம் பி பதவி கிடைத்தது. இவருக்கு பேசுவதற்கு எந்த யோகியதையும் இல்லை. மானம் கெட்ட ஜென்மங்கள். இவர்கள் அ தி மு காவை கண்டிப்பாக இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள். ஊரெல்லாம் நாறுகிறது.

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
25-செப்-201713:51:13 IST Report Abuse

Devanatha Jagannathanஅவசரப்படாதீங்க. அம்மா மாதிரி டூப் போட்டு வீடியோ எடுக்கணும். கொஞ்சம் அவகாசம் கொடுங்க.

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
25-செப்-201712:55:37 IST Report Abuse

ilicha vaay vivasaayi (sundararajan)எல்லா அமைச்சர் கூமுட்டைகளையும் கூவத்தில் குளித்த பிறகே தலைமை செயலகம் செல்லலாம் என்று அறிவிக்க முயற்சி செய்தால் , இவர்கள் குளிப்பதற்கு கூவமும் தடை போடுகிறது. இவர்கள் போல நாற்றம் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூவம் கூட தடுக்கிறது . தமிழக வரலாற்றின் மிக கேவலமான அத்தியாயம் இவர்கள் தான்

Rate this:
25-செப்-201714:32:26 IST Report Abuse

srinivasanmutrilum unmai...

Rate this:
thanjaavuraan - tamilnadu,இந்தியா
25-செப்-201712:50:51 IST Report Abuse

thanjaavuraanவிசாரணை கமிசன் அமைத்தால் பிரதமர் ,கவர்னர் என்று அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும். ஏனெனில் அம்மாவை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்படியெனில் பிரதமருக்கு அம்மாவின் உடல்நலம் பற்றி கண்டிப்பாக தெரிந்தே இருந்திருக்கும். அம்மாவின் நண்பரான பிரதமர் உண்மையை உரக்க உலகுக்கு சொல்வாரா?

Rate this:
thanjaavuraan - tamilnadu,இந்தியா
25-செப்-201712:46:09 IST Report Abuse

thanjaavuraanammavin maranathil sandhegam irundhum pathavikkum panathirkkum aasai pattu nava thuvaarangalaiyum moodikondu idly saaptaanga pandhu vilaiyaandaanga nu kadhai vittanunga ippo andhar baldi adikkiraanunga.ivanungallaam uthhama purusargal nu nenappu ivanungalukku.

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
25-செப்-201711:56:28 IST Report Abuse

Rafi அம்மாவை விட கூடுதலாக வெற்றிபெறுவதென்றால் பிஜேபி கட்சிக்கு சீட்டு கொடுக்க முடியாதே, அவர்கள் கொந்தளித்தால் எல்லோருக்குமே வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகவேண்டும்மே? இதையெல்லாம் யோசிக்காமல் சொல்லிவிட்டு மறுபடியும் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு வரவேண்டியிருக்கும்.

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement