ஜெயலலிதாயை வீடியோ எடுத்தது சசிகலா தான்: தினகரன் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ.,யை வீடியோ எடுத்தது சசிகலா தான்: தினகரன்

Added : செப் 25, 2017 | கருத்துகள் (98)
Advertisement
தினகரன், Dinakaran,சசிகலா,sasikala, ஜெயலலிதா,Jayalalithaa, சென்னை, Chennai, ஜெயலலிதா சிகிச்சை,Jayalalithaa treatment,  தேர்தல் ஆணையம், Election Commission, பொதுக்குழு, General Body, அ.தி.மு.க., AIADMK,சென்னை உயர்நீதிமன்றம்,Chennai High Court, வாட்ஸ் ஆப்,WhatsApp, எம்.ஜி.ஆர்., MGR,அமைச்சர் ஓ.எஸ்.மணியன், Minister OS Maniyan, நீதி விசாரணை, Justice Inquiry,

சென்னை: ''ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ பதிவு தான் என்னிடம் உள்ளது,'' என தினகரன் கூறியுள்ளார்.


அமைச்சர் பொதுக்குழுவை கூட்ட முடியாது

சென்னை அடையாறு இல்லத்தில் தினகரன் அளித்த பேட்டி:

ஜெ.,வை வீடியோ எடுத்தது சசிகலா: தினகரன்கட்சி பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில், 29ம் தேதி ஆவணங்களை தாக்கல் செய்வோம். அப்போது உங்களுக்கு தெரிய வரும். அமைச்சர்கள் பொதுக்குழுவை கூட்ட, அ.தி.மு.க., சட்ட விதிகளில் இடம் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா உள்ளார். துணை பொதுச் செயலாளராக நான் உள்ளேன். கட்சியின் விதிகளின்படி பொதுக்குழுவை, பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால், பொதுச் செயலாளர் கூட்டுவார். சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நடந்த பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கூறியுள்ளது.எம்.ஜி.ஆரை எதிர்த்த ஓ.எஸ்.மணியன்

மாற்றி மாற்றி பேசுவதால், அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. இன்றைய இளைஞர்கள், அரசியல்வாதிகளின் தரத்தை வாட்ஸ் ஆப் மூலம் விளக்கி விடுகின்றனர். எம்.ஜி.ஆர்., உயிருடன் இருந்த போது, அவரை எதிர்த்து அரசியல் செய்த தியாக தொண்டர் தான் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இவர்களின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

குப்பை பொறுக்குபவர்களை வைத்து சசிகலாவின் படத்தை கிழித்தவர்கள் தி.மு.க.,வினர். தி.மு.க.,வினர் சதி செயலை முறியடிக்கவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா படத்தை பயன்படுத்தவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோ காட்சியை தான் நான் குறிப்பிட்டேன்.

அந்த வீடியோவை எடுத்தது சசிகலா தான். நீதி விசாரணையின் போது அந்த வீடியோவை ஒப்படைக்கலாம் என சசிகலா என்னிடம் கூறினார். ஜெயலலிதா நைட்டி அணிந்து இருந்ததால் அந்த வீடியோவை இதுவரை வெளியிடவில்லை.


இவ்வாறு தினகரன் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (98)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
LAX - Trichy,இந்தியா
26-செப்-201704:45:44 IST Report Abuse
LAX ஜெ. அவர்களுக்கு அறிமுகமாகும்போது செய்துகொண்டிருந்த தொழிலையே சசிகலா, எடுத்துக்கொண்டாரோ..?
Rate this:
Share this comment
Cancel
Suresh - Nagercoil,இந்தியா
26-செப்-201703:00:48 IST Report Abuse
Suresh திரும்பவும் வீடியோவா? எதற்கு எடுத்தார், எப்பொழுது எடுத்தார், எப்படி எடுத்தார் என்பதை எல்லாம் தமிழக மக்களுக்கு விளக்கவேண்டும்..ஒரு வீடியோ கேமராவை வைத்தே தமிழ்நாட்டை ஆட்டையை போட்டுவிட்டார்கள்..சசி வைத்திருக்கும் ராசியான கேமராவை ஏலத்திற்கு விடவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
karthi - chennai,இந்தியா
25-செப்-201722:26:10 IST Report Abuse
karthi ரத்த சம்பந்த உறவுகளை ஒதுக்கிவிட்டு, யாரையோ தன் வீட்டுக்குள் தங்க அனுமத்தித்தது பெரிய தவறு. அதுவும் ஒரு பெரிய கும்பலையே தனது பங்களாவில் சேர்த்துக்கொண்டது அதைவிட பெரிய தவறு. உடல் நலம் குன்றியபொழுதாவது, உறவுகளில், நம்பிக்கைக்குரிய யாரையாவது தன்னுடன் வைத்து இருந்து இருக்கலாம். இப்படி எந்த எச்சரிக்கை உணர்வுடனும் இல்லாமல், கடைசி காலங்களில் என்ன ஆனது என்றே யாரும் தெரிந்து கொள்ள முடியாதவாறு போய் சேர்ந்துவிட்டார்.
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
26-செப்-201706:36:00 IST Report Abuse
LAXமிகச் சரியா சொன்னீங்க கார்த்தி.....
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
26-செப்-201708:21:50 IST Report Abuse
Darmavanரத்த சம்பந்தம் மாத்திரமல்ல தன்னை ஆதி\முதல் எடுத்து வளர்த்தவர்கள். தாயிடமிருந்து வந்தவர்கள் எல்லோரையும் இந்த கூனி சொல்லை கேட்டு வெளியே தள்ளியதன் விளைவு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X