ஜெ., மரணம் குறித்து விசாரணை: நீதிபதி பெயரை அறிவித்தது அரசு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., மரணம் குறித்து விசாரணை :
நீதிபதி பெயரை அறிவித்தது அரசு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.

ஜெ.,மரணம்,குறித்து,விசாரணை,நீதிபதி,பெயரை,அறிவித்தது, அரசு

முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்; டிச., 5 இரவு இறந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர் தொடர்பான புகைப்படம் எதுவும், அரசு தரப்பிலோ, மருத்துவமனை தரப்பிலோ வெளியிடப்படவில்லை. அவருடன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.

ஜெ.,யின் கைரேகைஆனால், 'மருத்துவமனையிலேயே, அதிகாரிகளுடன் ஜெ., ஆலோசனை நடத்தினார்' என, செய்திக்குறிப்பு வெளியானது. அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், 'ஜெ., குணமடைந்து வருகிறார். இட்லி சாப்பிட்டார்; கிச்சடி சாப்பிட்டார்' என்றனர். தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, அங்கீகாரப் படிவங்களில், ஜெ.,யின் கைரேகை பதிவு பெறப்பட்டது. அப்போது, அவர் சுயநினைவோடு இருந்ததாக,மருத்துவர்கள்

தெரிவித்தனர்.

சி.பி.ஐ., க்கு பரிந்துரை


இந்நிலையில், ஜெ., மறைவுக்கு பின், பல்வேறு சந்தேங்கள் எழுந்தன. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, பன்னீர்செல்வம், 'ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என, கோரினார்.
அப்போது, அமைச்சர்கள், 'ஜெ., மறைவில் சந்தேகம் இல்லை' என, விளக்கம் அளித்தனர்.
அதேநேரத்தில், அ.தி.மு.க., அணிகள் இணைந்த போது, பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று, 'ஜெ., மறைவு குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தற்போது, அமைச்சர்கள், 'நாங்கள் யாரும்,மருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை; சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பார்த்தனர். ஜெ., இட்லி சாப்பிட்டதாக, நாங்கள் கூறியது பொய். அதற்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளனர்.மேலும், ஜெ., அண்ணன் மகன், தீபக்கோ, 'மருத்துவமனையில் மூன்று நாட்கள் மட்டுமே, ஜெ., நினைவுடன் இருந்தார்' என்ற, அதிர்ச்சி தகவலை, இப்போது வெளியிட்டுள்ளார்.

மர்மம் விலகுமா


இதனால், மருத்துவமனையில் ஜெ., இருந்த போது நடந்தது என்ன என்ற சந்தேகம், அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதில் கிடைக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.
கோவையை சேர்ந்த, நீதிபதி ஆறுமுகசாமி, 65, மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 2014 ஏப்., 17ல், ஓய்வு பெற்றார். இவரது விசாரணைக்கு பின், ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என,

Advertisement

எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுமுகசாமி பின்னணி


மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தமிழக அரசின் விசாரணை கமிஷனுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
* 1952 ஏப்., 28ம் தேதி கோவையில் பிறந்தார். கோவை நகராட்சி பள்ளியில் படித்தார்.
* 1971 : அரசு கலைக்கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்தார்.
* 1974ல் சட்டப்படிப்பு முடித்தார். பின் வழக்கறிஞர் பயிற்சியில் சேர்ந்தார்.
* 1986 மே 16 : ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முனிசிபல் பதவியை ஏற்றார்.
* 1991 ஜூன் 3: அந்நீதிமன்றத்தில் உதவி நீதிபதியானார்.
* 1998 ஜன., 19: மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றினார்.
* 2009 மார்ச் 31: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரானார்.
* 2010 பிப்., 17: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு.
* 2014 ஏப்., 27: நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு
* 2014 ஏப்., 28 ---- 2016 பிப்., 8: மும்பையில் கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாணைய தலைவராக இருந்தார்.
* 2016 மார்ச் 21 : மத்திய தீர்ப்பாணையத்தின் சென்னை பெஞ்ச் உறுப்பினராக பொறுப்பேற்பு.- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
26-செப்-201720:00:08 IST Report Abuse

Needhiyin Pakkam Nil ஆகா பிஞ்சி மூஞ்சை வைத்து கொண்டு உயர்பதவியில் உள்ளவர்களை விசாரணை செய்தால் எவனுமே பதில் சொல்ல மாட்டானேயா, கொஞ்சம் ப்பேச டெர்ரரா வையுங்க சார் அப்பயாவது சொல்றானுங்களான்னு பார்ப்போம், ஏன் தமிழ் நாட்டில் உண்மையாக போராடும் குணம் கொண்ட நீதிபதிகளே இல்லையா, ஓய்வுக்கு பிறகும் மத்திய அரசின் பதவி சூப்பர், இதை மட்டும் சிறப்பா முடிச்சிடீங்கன்னா அடுத்த கவர்னர் நீங்கள் தான், மத்திய தீர்பாயமா அப்போ மத்திய அரசு சொல்வது தான் தீர்ப்பு..............

Rate this:
Babu - Singapore,சிங்கப்பூர்
26-செப்-201719:56:08 IST Report Abuse

Babu(பொதுக்கூட்டத்தில்) சதிலா, TTV, OPS, EPS : ஜட்ஜ் சார் ஜட்ஜ் சார், ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டோம், மன்னிச்சு விட்டு விடுங்க சார். புண்ணியமா போகும். உங்கள பார்த்தாலே டெர்ரா இருக்கு சார். ஜட்ஜ் சார்: நோ வே. மன்னிப்பு என்ற சொல் என் அகராதியில் இல்லை. உண்மை, நீதி, நேர்மை இதன் படி வாழ்பவன் நான். சதிகலா, TTV, OPS, EPS: (கூடிப் பேசி) சார் எங்கள மன்னிச்சிடுங்க (ஜட்ஜ் கால்ல விழுகிறார்கள்). ஜட்ஜ்: நோ, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி. (ஜட்ஜ் வெறப்பா நிற்குறார்) சிரிப்பு சத்தம் விண்ணை பிளக்க, ஜட்ஜ் பேந்த பேந்த நிற்கிறார். ஜட்ஜ் மைண்ட் வாய்ஸ்: ஐயோ, வூட்டுக்கு போனா அவ வேற செருப்பால அடிப்பாலே. போறப்போவே சொன்னாலே, நீதி, நேர்மை வெங்காயம் னு சொல்லிட்டு வீட்டுக்கு வராத. மினிமம் 100c ன்னு வேற சொன்னா. இப்ப ஜட்ஜ் சார் என்ன பண்ணலாம்? பேசாம சொல்ற இடத்தில் கை எழுத்து போட்டு கெடக்கிறத வாங்கிட்டு வற்றதா இல்லை வீட்ல போய் வாங்கி கட்டிக்கிறதா?

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
26-செப்-201719:21:21 IST Report Abuse

mindum vasanthamவதந்திகளை பரப்புவதில் நம்பிக்கை இல்லாதவர் கேப்டன் , நாங்கள் இது போன்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதில்லை நீதிபதியே யாரோ நம்பிக்கையான ஆளோ விசாரிக்கட்டும் .. மணல் கொள்ளை வைகுண்டராஜன் பற்றி அடிக்கடி எங்கள் கேப்டன் வினவியுள்ளார் அவர் தான் தலைப்பு செய்தி ஆக வேண்டும் தமிழகத்தில்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26-செப்-201717:05:41 IST Report Abuse

Endrum Indianphotovai parththal romba eliyavaraga irukkindraare? ivaridamaa indha aayvukkaaga kodukkappatirukkindrathu????. indha aayvu ellaam oru villanaaka irundhaal thaan sariyaana mudivu varum????

Rate this:
Nancy - London,யுனைடெட் கிங்டம்
26-செப்-201716:42:43 IST Report Abuse

NancyWhat is the use of this commission. he doesn't have any rights to enquire any one - so many commission report (eg Sahayam) are sleeping

Rate this:
Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
26-செப்-201716:36:45 IST Report Abuse

Karuppiah SathiyaseelanEmatharmarajavaiyum , chitragupthanaiyum visarikka vendum enru mu ka Solvar.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-செப்-201715:17:21 IST Report Abuse

Nallavan Nallavanபாக்கவே பரிதாபமா இருக்காரே .... கேக்குற அறிக்கையை பதறிப்போய் சல்யூட் அடிச்சுக்கிட்டே கொடுத்துருவாரு .......

Rate this:
Kaliyan Pillai - Chennai,இந்தியா
26-செப்-201714:40:04 IST Report Abuse

Kaliyan Pillaiநடிகர் வடிவேலு மாதிரி "என்னத்த தப்பு செஞ்சியா", "என்னத்த பார்த்தியா " "என்னத்த கேட்டியா" ன்னு திருப்பித் திருப்பிக் கேட்டா என்னத்த விசாரிச்சு உண்மையைக் கொண்டுவர முடியும்? ஒழுங்கா பதில் சொன்னால்தானே முடியும்?

Rate this:
IBRAHAM - RIYADH,சவுதி அரேபியா
26-செப்-201713:20:26 IST Report Abuse

IBRAHAMமுதலில் விசாரிக்கப்பட கூடியவர் பன்னீர்தான் மேலும் சுகாதாரத்துறை அமைச்சரும் மற்றும் சுகாதாரத்துறை செயலரும்தான் விசாரணைக்கு உட்பட கூடியவர்கள் இவர்களுக்குத்தான் அனைத்து உண்மைகளும் தெரிந்திருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்....ஆனால் நீதி அரசர் ஆறுமுகசாமி அதை செய்வாரா??? இது தான் தமிழக மக்களின் கேள்வி.

Rate this:
Rangaraj - Coimbatore,இந்தியா
26-செப்-201712:53:55 IST Report Abuse

Rangarajஆண்டவனுக்கே அல்வா குடுத்தவனுங்க அப்போல அறுமுகனுக்கு குடுக்க முடியாதா என்ன

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement