ED pulls up Karthi Chidambaram, attaches assets worth Rs 1.16 crore. | ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டில் கார்த்தி சிதம்பரம்... கைது? Dinamalar
பதிவு செய்த நாள் :
ஏர்செல் மேக்சிஸ், Aircel Maxis, கைது, arrested,கார்த்தி சிதம்பரம்,Karthi Chidambaram, புதுடில்லி, New Delhi,  அமலாக்கத் துறை ,Enforcement Department, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் , former Central Finance Minister Chidambaram காங்கிரஸ் , congress, சி.பி.ஐ.,CBI,  ஊழல்,  corruption,ஐ.என்.எக்ஸ்.,INX,  மீடியா, Media, உச்ச நீதிமன்றம், Supreme Court,ராஜேஷ்வர் சிங், Rajeshwar Singh,  ஏ.எஸ்.பி.சி.எல்.,aspcl, பாஸ்கரராமன், Bhaskararaman,

புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய்
மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது.

ஏர்செல் மேக்சிஸ், Aircel Maxis, கைது, arrested,கார்த்தி சிதம்பரம்,Karthi Chidambaram, புதுடில்லி, New Delhi,  அமலாக்கத் துறை ,Enforcement Department, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் , former Central Finance Minister Chidambaram காங்கிரஸ் , congress, சி.பி.ஐ.,CBI,  ஊழல்,  corruption,ஐ.என்.எக்ஸ்.,INX,  மீடியா, Media, உச்ச நீதிமன்றம், Supreme Court,ராஜேஷ்வர் சிங், Rajeshwar Singh,  ஏ.எஸ்.பி.சி.எல்.,aspcl, பாஸ்கரராமன், Bhaskararaman,

இது தொடர்பான விசாரணையில், வங்கி கணக்குகளை, அவர் அவசரமாக கைமாற்றியதும் அம்பலமாகி உள்ளது. அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கையில், மகன் சிக்கியுள்ளதால், 'மாஜி' நிதி அமைச்சர், சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, மே மாதம், சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது.
அதாவது, 2௦௦7ல், மத்திய நிதி அமைச்சராக இருந்த, சிதம்பரத்தின் உதவியுடன், வெளிநாட்டைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, மத்திய அரசின், அன்னிய முதலீட்டு வாரிய அனுமதியை, முறைகேடாக பெற்றுத் தந்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வங்கி கணக்குகள் முடக்கம்



இந்த வழக்கில், தேடப்படும் நபராக கார்த்தியை அறிவித்து, சி.பி.ஐ., பிறப்பித்த நோட்டீசும், அக்டோபர், 4 வரை நீட்டிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சி.பி.ஐ.,யின்முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், கார்த்தி மீது, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கார்த்திக்கு சொந்தமான, 1.16 கோடி ரூபாய்

மதிப்பிலான வங்கிக் கணக்குகளை, அதாவது, அசையும் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இதற்கான உத்தரவை, அத்துறையின் இணை இயக்குனர், ராஜேஷ்வர் சிங் பிறப்பித்து உள்ளார். இவர், '௨ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் உள்ளார்.
இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கார்த்தி தன் வங்கியில் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை மற்றும் அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள, 90 லட்சம் ரூபாய், அவரது கட்டுப்பாட்டிலுள்ள, ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலுள்ள, 26 லட்சம் ரூபாய் ஆகியவை, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் முடக்கப்பட்டு உள்ளன.
'ஏர்செல்' நிறுவனம், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி பெற்ற பின், ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்துக்கு, 26 லட்சம் ரூபாய் அளித்துள்ளது. ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனம், பாஸ்கரராமன் என்பவரால் நடத்தப்படுகிறது. இவரை, தன் கணக்கு தணிக்கையாளர் என, கார்த்தி கூறியுள்ளார்.
இதேபோல், கார்த்தி, அவரது உறவினர் பழனியப்பன் ஆகியோரது, சி.எம்.எஸ்.பி.எல்., என்ற நிறுவனத்துக்கு, 2 லட்சம் அமெரிக்கா டாலரை, அதாவது, 1.30 கோடி ரூபாயை, 'மேக்சிஸ்' நிறுவனம் வழங்கியுள்ளது. சட்ட நுணுக்கம் தொடர்பான, மென்பொருள் தயாரித்து கொடுத்ததற்காக, இத்தொகை தரப்பட்டதாக, மேக்சிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த மென்பொருள், இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது; மலேஷியாவில் பயன்படுத்த முடியாது என்பது தெரிய வந்துள்ளது.இந்நிலையில், 2013ல், ஹரியானா மாநிலம் குர்கானில், தனக்கு சொந்தமான சொத்தை, பன்னாட்டு நிறுவனத்துக்கு, கார்த்தி, வாடகைக்கு விட்டிருந்தார். அந்த சொத்தை, சமீபத்தில், விற்று விட்டார்.

Advertisement

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் தொடர்புடைய, தன் வங்கிக் கணக்கையும், கார்த்தி மூடிவிட்டார்; மற்ற வங்கி கணக்குகளையும் மூட, அவர் முயற்சித்தார். இந்த வழக்கில், வெளிநாடுகளில் இருந்து, முறைகேடாக ஆதாயங்கள் பெறப்பட்டது குறித்து, அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளது.

புது விசாரணை


ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், கார்த்திக்கு எதிராக, புது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதி கொடுத்த சூழ்நிலைகள் குறித்தும், அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதித்துள்ளது. ஆனால், 600 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க, நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், '180 கோடி ரூபாய் முதலீட்டு திட்டம்' என, அன்னிய நேரடி முதலீட்டு வாரியத்திடம் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அதனால், இந்த திட்டத்தை, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவுக்கு, வாரியம் அனுப்பவில்லை எனவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

என்னை அச்சுறுத்த முயற்சி


இது குறித்து அவர் கூறுகையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை பொய்யான குற்றச்சாட்டு மற்றும் தவறான யூகங்களின் வினோத கலவை, என்னை அச்சுறுத்தவும், மவுனம் ஆக்கவும், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. என்னை யாரும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruganandam - karaikal,இந்தியா
26-செப்-201722:16:58 IST Report Abuse

Muruganandam இன்னும் இரண்டு வருடங்களில் ஆட்சி மாறும். அப்போது காட்சிகளும் மாறும் -

Rate this:
Muruganandam - karaikal,இந்தியா
26-செப்-201722:13:03 IST Report Abuse

Muruganandam கைதுக்கு அஞ்சி சிதம்பரம் பி ஜே பி கு வந்து விடுவார் என்று மனப்பால் குடிக்காதீர்கள் சொம்புகளே, அவர் S M கிருஷ்ணா கிடையாது,

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-201711:04:32 IST Report Abuse

Aarkayபாஜகவுக்கு வீண் முதுகுச்சுமைகள் (waste பங்கஜ் & liabilities) தேவையில்லை அவர் முகராசிக்கு நான்கு ஓட்டுக்கள் கூட விழாது. பின், அவர் எதற்கு பாஜகவிற்கு?...

Rate this:
ஏணிப்படிகள் - chennai,இந்தியா
26-செப்-201721:29:43 IST Report Abuse

ஏணிப்படிகள்சிதம்பர ரகசியம் அம்பலம்

Rate this:
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
26-செப்-201720:48:39 IST Report Abuse

S Rama(samy)murthyமருது சகோதர் , தெய்வத்திருமகன் ,கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார் உதித்து ,பெயர்பெற்ற இந்த ராமநாதபுரம் மண்ணில் உதித்த அற்பமனிதன் . பணம் மனிதனுக்கு தேவை , ஆனால் பணம் மட்டும் உலகம் எனநினைக்கும் ஒரு பிறவி .சுபராம காரைக்குடி

Rate this:
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
26-செப்-201720:38:59 IST Report Abuse

Mahendran TCகட்டுமரத்துக்கும் , திமுக காரனுங்களுக்கும் , காங்கிரஸ்காரனுங்களுக்கும் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் / கொள்ளையடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்த பிதாமகன் சிதம்பரத்தின் மகன் அல்லவா இந்த கார்த்தி சிதம்பரம் ? அப்பன் எட்டடி பாய்ந்தால் , பிள்ளையாண்டான் 64 அடி பாய்ந்திருக்கான் ......

Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
26-செப்-201720:12:28 IST Report Abuse

Siva Kumarஇப்போ அலறி என்ன பிரயோஜனம்? அதான் வீட்டிலேயே வக்கீல் இருக்காங்களே வாதாட அவர் திறமைக்கு ஒரு சவால்.

Rate this:
Authentic Stag - Bangalore,இந்தியா
26-செப்-201718:30:37 IST Report Abuse

Authentic Stagஇவன் மனைவியையே மிரட்டித்தான் திருமணம் செய்தான். அதற்கு அப்பன் பதவி பின்புலமாக உதவியது. அந்த பெண் குடும்பத்திற்கு கொஞ்சம் கூட இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-செப்-201718:22:59 IST Report Abuse

Malick Rajaசில கயவர்கள் தங்களின் கருத்துக்களாலேயே தங்களை அடையாளம் காண்பிக்கிறார்கள் .. மனித இனத்துக்கு அப்பாற்பட்டு கருத்துக்கள் எழுதுவதை மனிதர்கள் எழுதுவதில்லை ஆனால் மனித உருவில் வனவிலங்குகளாக எண்ணிக்கொள்ளலாம் ..

Rate this:
Selvan - NY,யூ.எஸ்.ஏ
26-செப்-201722:16:54 IST Report Abuse

Selvanஇஷ்ரத் ஜஹான் போன்ற மார்க்க ஜிஹாதிகளை ஆதரித்தவர் சில ஆயிரம் கோடி ஊழல் செய்தல் என்ன? அவரை ஆதரிப்பதுதான் இந்தியாவின் மத(இந்து மத) சார்பற்ற உயர்ந்த கோட்பாடு. அப்படித்தானே நண்பரே?...

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
27-செப்-201700:31:14 IST Report Abuse

Agni Shivaசில கயவர்கள் தங்களின் கருத்துக்களாலேயே தங்களை அடையாளம் காண்பிக்கிறார்கள் .. மனித இனத்துக்கு அப்பாற்பட்டு கருத்துக்கள் எழுதுவதை மனிதர்கள் எழுதுவதில்லை ஆனால் மனித உருவில் வனவிலங்குகளாக எண்ணிக்கொள்ளலாம் .....

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-201711:10:09 IST Report Abuse

Aarkayவந்துட்டார் இவர் மனிதன், இவன் விலங்கு என certificate கொடுக்க.... உன் certificate யாருக்கு இங்கே வேண்டும்? உனக்கு சொம்பு தூக்கினால், மனிதன் அடுத்தவனுக்கு, தூக்கினால், மிருகம் அவரவர் செயல்களாலேயே மிருகங்களையும், மனிதரையும் அடையாளம் காண இயலும்....

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-செப்-201716:57:35 IST Report Abuse

மலரின் மகள்கைது? கேள்வி குறியை எப்போது நீக்குவார்கள்.

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
27-செப்-201701:03:53 IST Report Abuse

Aarkayநானும் ஆவலுடன் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்...

Rate this:
Appu - Madurai,இந்தியா
26-செப்-201716:54:00 IST Report Abuse

Appuநாளை கைது நடவடிக்கையாக இருக்கலாம்..தினமலருக்கு தெளிவா லீக் நியூஸ் கிடைச்சுடுதோ?

Rate this:
மேலும் 85 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement